''நாராயண... நாராயண'' என்றபடியே, நமக்கு முன் னால் பிரசன்னமான நாரதரை, ''வாரும், நாரதரே! திருச்செந்தூரில் நீங்கள் பார்த்ததாகப் பட்டியலிட்ட குறைகளுக்கு ஏதேனும் தீர்வு காண முயன்றீர்களா?'' என்ற கேள்வியுடன் வரவேற்றோம்.

''அதானே என் வேலை! சென்னையில் உள்ள அறநிலையத் துறை கமிஷனர் வீர சண்முகமணி ஐ.ஏ.எஸ்ஸிடம் முதலில் பேசினேன். திருச்செந்தூர் கோயிலின் அப்போதைய இணை கமிஷனர் (பொறுப்பு) ஞானசேகரை சந்திக் கும்படி என்னைக் கேட்டுக்கொண் டார். அதன்பேரில், இணை கமிஷனர் ஆபீஸுக்குச் சென்றேன். அதற்கு முன்பாக, அனைத்துப் பிரிவு உயர் அதிகாரிகளையும் அங்கே வரவழைத்திருந்தார் ஞானசேகர். நான் பார்த்த பிரச்னைகளை புகைப்பட ஆதாரங்களாக லேப்டாப்பில் பதிந்து எடுத்துச் சென்றிருந்தேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால், கீறல் விழுந்த ரிக்கார்டு போல, 'எஸ்டிமேட் போட்டிருக்கோம், திட்டம் ரெடியாக இருக்கிறது, டெண்டர் லெவலில் இருக்கிறது...’ என மூன்று வரி பதிலையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

'அரசு ஒதுக்கிய நிதி ஆதாரத்தைக் கொண்டு, கோயிலைச் சுற்றி நிறைய வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்று தொடங்கி, நீண்ட பட்டியல் போட்ட ஞானசேகரிடம், அபிஷேக தண்ணீர் கிணறு போட்டோவை முதலில் காட்டினேன். அதைப் பார்த்துவிட்டு, 'முன்பு இங்கிருந்து தண்ணீர் எடுத்தார்கள். இப்போது எடுப்பதில்லை' என்றார். நாழிக் கிணறு அருகே பக்தர்கள் நுழையும் இடத்தின் அருகில் கட்டடம் இடியும் நிலையில் இருக்கும் புகைப்படத்தைக் காட்டினேன். 'இதென்ன, இவ்வளவு மோசமாக இருக்கிறதே? இது சரிசெய்யப்படுகிற வரையில், பக்தர்கள் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்’ என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.'

''கழிப்பிடக் கழிவு நீரை லாரியில் ஏற்றி, கடற்கரை மணல் வழியாகப் போகும் குழாயில் கொண்டுபோய் கடலில் விடுவதைச் சொன்னீரா?''

''அதையும் புகைப்படங்களாகவே காட்டி னேன். சக அதிகாரிகளிடம் அதைச் சுட்டிக் காட்டி, 'எந்த லாரி அது? உடனே பிடித்து, நடவடிக்கை எடுங்கள்’ என்று உத்தரவிட்டார். கடற்கரையில் மலைபோலக் குப்பைகள் குவிந்து

கிடக்கும் காட்சியைக் காட்டினேன். அதைப் பார்த்த இணை கமிஷனரின் உதவி அதிகாரி கார்த்திகேயன், 'அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்கள் இரவு நேரங்களில் இப்படிக் கொண்டுவந்து கொட்டிவிடுகிறார்கள். பலமுறை அவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுத்துவிட்டோம். இருப்பினும், தொடர்ந்து அதே காரியத்தைச் செய்கிறார்கள். இந்த முறை கடுமையான நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.'

''வேறு என்ன பிரச்னைகள் பற்றிச் சொன் னீர்கள்?'' என்று கேட்டோம்.

''திருச்செந்தூரில் மிகப் பெரிய பிரச்னையே போக்குவரத்து நெரிசல்தான். கோயிலுக்கு அருகில் தனியார் வாகனங்களையும், சற்றுத் தள்ளி அரசுப் பேருந்துகளும் நிற்கும்படியாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனால், போலீஸார் சரிவர இல்லாததால் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக தனியார் வாகனங்களைக் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைப் பற்றியும் இணை கமிஷனரிடம் பேசினேன்...''

''அதற்கு என்ன சொன்னார்?''

''இது போலீஸ் துறை சம்பந்தப்பட்டது; அவர் களிடமே சொல்லுங்கள் என்றார்.'

''கோயிலுக்கு வரும் முக்கிய ரோடுகள், டோல் கேட் போன்ற வெளிப்பகுதிகளில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லாமல் இருக்கிறது என்று சொன்னீரே! பாதுகாப்பு விஷயத்தில் இப்படி அலட்சியமாக இருக்கலாமா என்று இணை கமிஷனரிடம் கேட்பதுதானே?'

'கேட்காமல் இருப்பேனா? 'கூடிய விரைவில் கேமரா நிறுவ நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று உறுதி அளித்தார்' என்ற நாரதரிடம், ''ஆறுமுகசாமி சிலை விஷயம் என்ன ஆயிற்று?' என்று கேட்டோம்.

''அந்த சிலை விஷயம் தெரிந்தவர் கள் யாராவது இருந்தால், என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்; பிரச்னையை

உடனே சரிசெய்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.'

'சரி, காவடி மண்டபம்..?'

'ராஜ கோபுரத்தை மறைத்தபடி காவடி மண்டபம் கட்டப்படுகிறது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது அங்கே வருவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்று சொல்லிவிட்டார் இணை கமிஷனர். மற்றபடி கழிவறை, குளியல் அறை போன்ற வசதிகள் பற்றியும் நிச்சயம் பரிசீலிப்பதாகச் சொன்னார்'' என்ற நாரதர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜை சந்தித்தது பற்றியும் தெரிவித்தார்.

''வைகாசி திருவிழா நேரத்தில் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால், ஒருசில குறைகளையாவது சரி செய்திருக்கலாமே என்று கேட்டேன். 'ஆன்மிக பக்தர்களுக்கான குறைபாடு களை அரசுக்குச் சுட்டிக்காட்டும் வகையில், சக்தி விகடன் சார்பில் தமிழகத்தின் பிரபல கோயில்களுக்கு விசிட் செய்வது குறித்து மகிழ்ச்சி. பிரச்னைகளை என்னுடைய கவனத் துக்குக் கொண்டு வருகிறீர்கள். நானும் அதற்கு உரிய மதிப்பு கொடுத்து, தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறேன். சமீபத்தில் திருச்செந்தூர் கோயிலுக்கு விசிட் போயிருந்தேன். நீங்கள் சொன்ன குறைகளை நானும் நேரில் பார்த்தேன். பக்தர்களுக்கான அடிப்படைத் தேவைகளைச் சரிசெய்யவேண்டும் என்று அங்குள்ள அதிகாரி

களிடம் கடுமையாகச் சொல்லிவிட்டு வந்திருக் கிறேன். குறைகளை எவ்வளவு விரைவாகச் சரிசெய்யமுடியுமோ, அவ்வளவு விரைவாகச் சரிசெய்ய நிச்சயம் ஏற்பாடு செய்கிறேன்’ என்று உறுதியளித்தார் அமைச்சர் காமராஜ்'' என்ற நாரதர், அப்போதுதான் லேஅவுட் ஆகி மேஜையில் கிடந்த 'ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்’ கட்டுரையை எடுத்துப் படித்தார்.

'அடேடே! ஆழ்வார்திருநகரி கருடசேவை வைபவ அனுபவத்தை வாசகர்களுக்கு வழங்கப் போகிறீர்களா? நல்லது! நானும் திருச்செந்தூர் போய்விட்டு ஆழ்வார்திருநகரி வழியாகத்தான் அன்று வந்தேன்...' என்றவர், ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார்.

''திருச்செந்தூரில் இருந்து திரும்பும் வழியில், இரவு மணி 11க்கு மேல் இருக்கும் ஆழ்வார்திருநகரியை நெருங்கியபோது ஒரே டிராஃபிக் ஜாம்! எங்கேயோ ஆம்புலன்ஸ் ஒன்று அலறிக்கொண்டிருந்தது...'' என்ற நாரதரை இடைமறித்து,

''பிறகு என்ன ஆயிற்று?'' என்று பதறிப்போய் கேட்டோம்.

''அன்றைக்குத்தான் ஆழ்வார் திருநகரியில் ஒன்பது கருடசேவை வைபவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் அந்த வைபவத்தின்போது, காவல் துறையினர் போக்குவரத்து விஷயத்தில் சரியானபடி கவனம் செலுத்தவில்லை. திருச்செந்தூர்திருநெல்வேலி சாலை மிகவும் குறுகலானது. அதன் இரு பக்கமும், பக்தர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்திவிட்டதால்தான் டிராஃபிக் ஜாம்! அரை மணி நேரத்துக்குப் பிறகே, இரண்டு காவலர்கள் வந்து, போக்குவரத்தைச் சரிசெய்து, ஆம்புலன்ஸ் போக வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.''

''நள்ளிரவு நேரத்திலுமா பக்தர்கள் கூட்டம்?''

''அதற்குக் காரணம், விழா தொடங்குவதற்கு மிகவும் கால தாமதம் ஆனதுதான். 9 மணிக்கெல்லாம் தொடங்கவேண்டிய வைபவம், இரவு 11 மணி ஆகியும் தொடங்கவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் விழா தொடங்கி இருந்தால், பக்தர்கள் தரிசித்துவிட்டுச் சென்றபடி இருப்பார்கள்; போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு இருக்காது. அடுத்த வருஷமாவது கோயில் நிர்வாகமும் சரி, காவல்துறையினரும் சரி... உரிய ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்று நம்புவோம்'' என்ற நாரதர், 'சரி, எனக்குத் தலைக்கு மேல் வேலை இருக்கிறது. நான் கிளம்பட்டுமா?' என்று கேட்டார்.

'இருங்கள்... இந்த முறை எந்தக் கோயிலுக்குப் போய் வந்தீர்கள் என்று சொல்லவே இல்லையே?' என்று அவரை மடக்கினோம்.

'நன்றாயிருக்கிறதே..! உங்கள் நிருபர் மட்டும்தான் கருடசேவை, நம்மாழ்வார் மங்களாசாசனம் என தரிசித்து மகிழ வேண்டுமா? நான் மட்டும் எங்கே, என்ன பிரச்னை என்று வம்பு தேடி அலைய வேண்டுமா? பெருமாள் வைபவங்களை நானும்தான் கண்டுகளித்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்' என்று சிரித்த நாரதர், சட்டென்று மாயமானார். சற்றைக்கெல்லாம் அவரிடம் இருந்து வாட்ஸ் அப் தகவல்கள் வந்தன.

திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி போக்குவரத்து நெரிசல் பற்றி நெல்லை சரக டி.ஐ.ஜியான முருகனிடம் கேட்டதாகவும் அதற்கு அவர், 'நீங்கள் சொல்லும் விஷயங்களை நான் நேரடியாக கவனிக்கிறேன். ஒருசில அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். போக்குவரத்து நெரிசல் தொடர்பாக வேறு ஏதேனும் புகார் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக போன் மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்' என்று தெரிவித்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார் நாரதர்.

அவரிடமிருந்து வந்த அடுத்த தகவல்:

புதுக்கோட்டை அருகிலுள்ள முருகன் தலம் விராலிமலை. இங்கே, கோவையைச் சேர்ந்த அன்பர்கள் மூவர் சேர்ந்து, சோலார் பிளான்ட் அமைத்துக்கொடுத்துள்ளார்கள். அதன் மூலம் கோயிலின் சில இடங்களில் உள்ள மின்விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன.

கோயில் முழுமைக்கும் பயன்படுத்தும் விதம் சோலார் பிளான்ட்டை விரிவுபடுத்த கோயில் நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. நல்ல முயற்சி! இதை, தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் முன்னெடுத்துச் செய்யலாமே!

படங்கள்: ஏ.சிதம்பரம்,

என்.ஜி.மணிகண்டன்