ஏட்டறிவுடன் பட்டறிவும் உள்ளவர்களே!

தனாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாகன வசதி பெருகும். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டுக்கு சிலர் குடிபுகுவீர்கள். 15ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் செவ்வாயும், 16ம் தேதி முதல் உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனும் 3ம் வீட்டுக்குள் நுழைவதால் தைரியம் பிறக்கும்.

தள்ளிப் போன அரசு காரியங்கள் சாதகமாக முடிவடையும். பிள்ளைகளை எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதர வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் விலகும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 12ம் தேதி முதல், சனி உங்கள் ராசிக்கு 7ல் வக்ரமாகி அமர்வதால், மனைவி உங்களுடைய குறை நிறைகளைச் சுட்டிக் காட்டினால், ஏற்றுக் கொள்ளுங்கள். ராகு 6ல் நிற்பதால், வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடி வந்து நீங்கும். மேலதிகாரி உதவுவார்.

திடீர் திருப்பங்கள் நிறைந்த நேரம் இது.

நியாயத்தின் பக்கம் நிற்பவர்களே!

உங்களின் யோகாதிபதியான சனி பகவான் 12ம் தேதி முதல், உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில்

வக்ரமாகி அமர்வதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அயல்நாட்டில் இருப்பவர்கள், வேற்றுமொழியினரால் உதவிகள் உண்டு. கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை, இப்போது நிறைவேறும். பூர்வ புண்ணியாதிபதி புதனும், ராசிநாதன் சுக்ரனும் சாதகமாக இருப்பதால், வாங்கிய கடனை தந்து முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும்.

சிலர் வாகனம் வாங்குவீர்கள். 15ம் தேதி முதல் சப்தமாதிபதி செவ்வாயும், 16ம் தேதி முதல் சுகாதிபதி சூரியனும் ராசியை விட்டு விலகுவதால், கோபம் குறையும். என்றாலும் ராசிக்கு 2ல் அமர்வதால், இடம், பொருள், ஏவலறிந்து பேசப் பாருங்கள். பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி வந்து போகும். குரு 3ல் மறைந்திருப்பதால், வீண் டென்ஷன் வந்து போகும். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் தருணம் இது.

அன்புக்குத் தலை வணங்குபவர்களே!

ராசிக்கு 2ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத

பணவரவு உண்டு. வி.ஐ.பி.களுக்கு நெருக்கமாவீர்கள். பெரிய பதவிகள் கிடைக்கும். ஷேர் மூலம் லாபம் வரும். புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர், நண்பர் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். புதிய நகை வாங்குவீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். வழக்கில் வெற்றி உண்டு.

4ல் ராகு நீடிப்பதால், சில நேரங்களில் டென்ஷன் ஏற்படும். செவ்வாயும், சூரியனும் சாதகமாக இல்லாததால், முன்கோபம், வயிற்று வலி, இரத்த அழுத்தம், சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம், நஷ்டம் ஆகியவை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 12ம் தேதி முதல், சனி வக்ரமாகி ராசிக்கு 5ல் நுழைவதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய வேளை இது.

உதவும் கரங்கள் உடையவர்களே!

ராகு 3ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். கௌரவப்

பதவிகள் தேடி வரும். புது வேலை அமையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வேற்று மொழியினரால் அனுகூலம் உண்டாகும். 12ம் தேதி முதல், சனி வக்ரமாகி 4ல் அமர்வதால், செலவுகள் அதிகமாகும். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

15ம் தேதி முதல், செவ்வாய் 12ம் வீட்டில் மறைவதால், தூக்கமின்மை, அலைச்சல், பயம் வந்து போகும். 16ம் தேதி முதல் சூரியனும் 12ல் மறைவதால், அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்துங்கள். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். ஜென்ம குரு தொடர்வதால், யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோர் பாசமழை பொழிவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வந்து போகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக செயல்பட வேண்டிய காலம் இது.

யார் நிழலிலும் வாழ விரும்பாதவர்களே!

12ம் தேதி முதல் சனிபகவான் வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நுழைவதால், சவாலான

காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஷேர் மூலமாக லாபம் வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்ரன் 12ல் மறைந்திருப்பதால், திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். ஊர் பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் வேலைகளைத் தொடர்வீர்கள். லோன் கிடைக்கும்.

புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். புது வேலை கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ராசிநாதன் சூரியனும், யோகாதிபதி செவ்வாயும் சாதகமான வீடுகளில் செல்வதால், அரசால் ஆதாயம் உண்டு. இழுபறியாய் இருந்த சொத்தை, ஒருவழியாய் வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 2ல் ராகுவும், 8ல் கேதுவும் நிற்பதால், வீண் விரயம், ஏமாற்றம், கவலைகள் வந்து போகும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் சந்திப்பு உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதங்கள் ஏற்படும்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வேளை இது.

ஆர்ப்பாட்டமில்லாமல் சாதிப்பவர்களே!

தனபாக்யாதிபதியான சுக்ரன் லாப வீட்டில் வலுவாக நிற்பதால், சோம்பல் நீங்கி, உற்சாகம்

அடைவீர்கள். பழைய வாகனத்தை விற்று, புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். தந்தை வழிச் சொத்துகள் கைக்கு வரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். 15ம் தேதி முதல் செவ்வாயும், 16ம் தேதி முதல் சூரியனும், 10ம் வீட்டில் அமர்வதால், வேலைக்குக் காத்திருந்தவர்களுக்கு நல்ல முடிவு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் ராசிநாதன் புதன் வலுவாக இருப்பதால், உறவினர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். 12ம் தேதி முதல் சனி வக்ரமாகி, உங்கள் ராசிக்கு 2ல் வந்து அமர்வதால், சோர்வு, களைப்பு, பார்வைக் கோளாறு வந்து போகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள்.

சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும் நேரம் இது.

இளகிய மனம் கொண்டவர்களே!

சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால், கனத்த மனம் லேசாகும். கேட்ட இடத்தில் பணம்

கிடைக்கும். புது வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த உறவினர், நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் உண்டு. வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். 6ல் கேது அமர்ந்திருப்பதால், வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள்.

12ம் தேதி முதல் சனி வக்ரமாகி உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்மச் சனியாக அமர்வதால், செரிமானக் கோளாறு, தலைச்சுற்றல், அலர்ஜி வந்து போகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். மற்றவர்களுக்காக சாட்சி கையொப்பமிட வேண்டாம். 16ம் தேதி முதல் சூரியன் 9ம் வீட்டில் அமர்வதால், தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சேமிப்புகள் கரையும். 15ம் தேதி முதல் செவ்வாய் 9ம் வீட்டில் நுழைவதால், சகோதர வகையில் இருந்த மனவருத்தம், சொத்து சிக்கல்கள் நீங்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது.

தன் பலம் பலவீனத்தை உணரும் தருணம் இது.

புரட்சிகரமான சிந்தனை உடையவர்களே!

குருபகவான் வலுவாக இருப்பதால், புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வீடு, வாகனச் சேர்க்கை

உண்டாகும். வங்கிக் கடன் கிடைக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். பிள்ளைகளின் கூடாப் பழக்கம் விலகும். அடகு வைத்திருந்த நகையை மீட்பீர்கள். 15ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் செவ்வாயும், 16ம் தேதி முதல் சூரியனும் 8ல் மறைவதால், அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.

ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால், பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். 12ம் தேதி முதல் சனி வக்ரமாகி உங்கள் ராசியை விட்டு விலகி 12ல் மறைவதால், திடீர்ப் பயணங்கள் உண்டு. தூக்கம் குறையும். கடனை நினைத்து கலங்குவீர்கள். மறைமுக விமர்சனம் வந்து செல்லும். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

வேலைச்சுமை அதிகரிக்கும் நேரம் இது.

புதுமையுடன் பழைமையைப் புகுத்துபவர்களே!

12ம் தேதி முதல் சனி வக்ரமாகி உங்கள் ராசிக்கு லாப வீட்டில் வலுவாக அமர்வதால், தொட்ட

காரியங்கள் துலங்கும். மாறுபட்ட அணுகுமுறையால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய மனையை விற்பீர்கள். புதன் உங்கள் ராசிக்கு 6ல் மறைந்து நிற்பதால், வேலைச்சுமை, தொண்டைப் புகைச்சல் வரக்கூடும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வந்து போகும். 15ம் தேதி முதல் செவ்வாயும், 16ம் தேதி முதல் சூரியனும் 7ம் வீட்டில் அமர்வதால், உடல் உஷ்ணம் அதிகமாகும். கணவன்மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

உடன்பிறந்தவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து விலகும். 10ல் ராகு நிற்பதால், யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் சுதாரித்துக் கொள்வீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

உழைப்பால் உயரும் காலம் இது.

சவால்களைக் கண்டு அஞ்சாதவர்களே!

15ம் தேதி முதல் செவ்வாயும், 16ம் தேதி முதல் சூரியனும் 6ம் வீட்டில் அமர்வதால், எதிர்ப்புகள் அடங்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு

வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசாங்க அனுமதி கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால், பணவரவு அதிகரிக்கும். கல்யாணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

கேட்ட உதவிகள் கிடைக்கும். குருபகவான் வலுவாக இருப்பதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். சொந்தபந்தங்களின் சுயரூபத்தைப் புரிந்துகொள்வீர்கள். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பூர்வீகச் சொத்தில் பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். வி.ஐ.பி.களும் வாடிக்கையாளர்களாக அறிமுகம் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.

வெற்றிக் கனியை சுவைக்கும் வேளை இது.

சுற்றம் சூழ வாழ்வதை விரும்புபவர்களே!

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பண

வரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன்மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பழைய நகையை மாற்றி நவீன டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 15ம் தேதி முதல் செவ்வாயும், 16ம் தேதி முதல் சூரியனும் 5ல் அமர்வதால், பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்த பொருட்களை சுமக்க வேண்டாம். சுக்ரன் 6ம் வீட்டில் மறைந்திருப்பதால், தலைவலி, தொண்டை வலி வந்து போகும். கணவன்மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். 6ல் குரு மறைந்திருப்பதால், வீண் பகை, கவலை, அமைதியின்மை வந்து விலகும். வியாபாரத்தில் வாடிக்கையா ளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சில நேரங்களில் உயர் அதிகாரி வெறுப்பாகப் பேசினாலும், காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். சக ஊழியர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.

அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது.

மனதில் பட்டதைப் பளிச்சென்று பேசுபவர்களே!

செவ்வாயும், சூரியனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் மனம்கோணாமல் நடந்துகொள்வார்கள். கடனில் ஒரு பகுதியை, பைசல் செய்வீர்கள். ரத்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும்.

சுக்ரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், நண்பர்கள் உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். 5ல் குரு வலுவாக அமர்ந்திருப்பதால், மதிப்பு, மரியாதை கூடும். சுப நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். 12ம் தேதி முதல் சனி வக்ரமாகி 8ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக வருவதால், மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

எதிர்பாராத நன்மைகள் சூழும் தருணம் இது.