'உடலை உருவாக்கக்கூடிய அடிப்படையான சக்திக்குப் பெயர்தான் ஈஷா. யோகா என்றால், முழு ஈடுபாட்டுடன் ஒன்றியிருத்தல், செயல்படுதல் ஆகும். பொருள் உடல், மன உடல் போல, சக்தி உடலும் நமக்குள் உண்டு. இதில், உடல் வெளிநோக்கிச் செயல்பட்டால், நன்மையும் வரும்; சிக்கலும் வரும். இதில், கிரியா யோகா என்பது, நமக்குள்ளிருந்து வெளிப்படும் உணர்வு, உணர்ச்சிகள், கோப தாபம், சுக துக்கம் போன்ற எதற்கும் இடமளிக்காமல், உடலை உள்நோக்கிச் செயல்படுத்துவதாகும்.

இந்த ஈஷா கிரியா என்பது, உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியைத் தரவல்லது. அதோடு சேர்த்து ஓரளவு ஆன்மிகமும் அடங்கிய மிக எளிமையான பயிற்சி இது. முயற்சி, எண்ணம், விழிப்பு உணர்வு மூன்றும் சேர்ந்தால், இந்த கிரியா யோகா பயிற்சி மிக மிக எளிது' என்று திரையில் சத்குரு தோன்றி, யோகா குறித்து முன்னுரை கொடுத்ததும், வந்திருந்த வாசகர்கள் அனைவரும் பரவசமானார்கள்.

கடந்த 24.5.15 ஞாயிற்றுக்கிழமை அன்று, தூத்துக்குடியில் உள்ள எஸ்.ஏ.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சக்தி விகடனும் ஈஷாவும் இணைந்து இலவச யோகா பயிற்சி முகாம் நடத்தின.

யோகா குறித்து திரையில் சத்குரு விளக்க, நேரில் பயிற்சியாளரின் வழிகாட்டுதலின்படி, மிகுந்த ஆர்வத்துடன் வாசகர்கள் பயிற்சியில் மூழ்கினார்கள்.

'சத்குருவோட சொற்பொழிவை இதுக்கு முன்னாடி நான் பலமுறை கேட்டிருக்கேன். ஆனால், இந்தப் பயிற்சி குறித்தும், இதைக் கத்துக்கிட்டா கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்தும் பொதுநலத்தோடு சத்குரு சொன்ன விஷயங்களை இப்பத்தான் முதல்முறையா கேட்கிறேன். ரொம்ப அற்புதமா சொன்னார். இதெல்லாம் ஏன், யாருக்காக...' என்று வாசகர் நவநீத கிருஷ்ணன் பேசி முடிப்பதற்குள்ளேயே, அவருக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்ச்சிகள் பொங்கி, ஆனந்தக் கண்ணீராய் வெளிப்பட்டதில், பேச்சு சில விநாடிகளுக்குத் தடைப்பட்டது. வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, தொடர்ந்து பேசினார் அவர்.

'... இந்தத் தருணத்துல சக்தி விகடனை நினைத்துப் பார்க்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இவர்கள் இருவரும் இலவசமாக இந்தப் பயிற்சியை நடத்தக் காரணம் என்ன? மனிதர்கள், மாறிவரும் சமூக சூழ்நிலை அப்படி! இந்த வாய்ப்பு கிடைக்கும்போதே இதை எல்லாரும் பயன்படுத்திக்கொண்டு, வாழ்க்கையில் மட்டுமல்ல, தன்னையும் ஜெயிக்கப் பாருங்கள், அவ்வளவுதான் சொல்வேன்!' என்று உள்ளத்தின் உள்ளுணர்வை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய் வெளிப்படுத்தினார் நவநீத கிருஷ்ணன்.

அவர் சொன்னதுபோல, வாழ்க்கையை மட்டுமல்ல, தன்னையே வெல்லும் நம்பிக்கை அனைவர் முகத்திலும் படர்ந்திருந்ததைக் காணமுடிந்தது.

படங்கள்: ஏ.சிதம்பரம்