''ஒரு குழந்தை, தரையில் உருட்டி விளையாட ஒரு பொம்மை கார் வேண்டும் என்று ஆசைப்படுகிறது. அதுவே கொஞ்சம் வளர்ந்ததும், மூன்று சக்கர சைக்கிளுக்கு விருப்பம் தெரிவிக்கிறது. ஆக, தொட்டில் பருவத்திலேயே வேர்விட்டுவிடுகிறது ஆசை...' தத்துவ மேதையாக தன்னை பாவித்துக்கொண்டு, பழைய பல்லவியைப் பாடியபடியே வந்தார் நண்பர். கையில் சப்ளா கட்டைதான் மிஸ்ஸிங்!

''ரொம்ப கரெக்ட்டா சொன்னீங்க. மூன்று சக்கர சைக்கிள் பருவம் கடந்ததும், இரண்டு சக்கர சைக்கிள்; ஆரம்பத்தில் பாலன்ஸ் தவறிக் கீழே விழுந்து, முட்டியில் சிராய்ப்பு; பின்னர், டூவீலர்... கார்... ஆசைக்குத்தான் அளவேது?' என்று நண்பரை இன்னும் கொஞ்சம் ஏற்றிவிட்டேன். அவரும் குஷியாகி, 'ஆசை நூறு வகை...’ என்று பாடவே ஆரம்பித்துவிட்டார்.

'நம்மையே எடுத்துப்போமே... முதல்லே மாருதி 800 கார் வாங்க ஆசைப்படுவோம். வசதி பெருகியதும், நமது விருப்பமும் வீங்கிடும்! மீடியம் சைஸ் காரைத் தேடி, ஷோரூம் போவோம். இன்னும் கொஞ்சம் வசதி வந்து, பேங்க் பேலன்ஸ் அதிகமானாலோ, அல்லது கடன் வாங்கினாலும் திருப்பி செலுத்திடலாம்கிற தைரியம் வந்தாலோ ஆடி, ஜாகுவார்னு நம்முடைய ஆசையும் பெரிசாகும்...'

நண்பரை மேலும் குஷிப்படுத்த, நானும் எசப்பாட்டு பாடினேன். 'நீங்க சொன்னது அட்சர லட்சம் பெறும். வீடு விஷயத்துலேயும் அப்படித்தான்... ஆசை கட்டுக்கடங்காமல் பெருகிட்டே போகும். 600 சதுர அடில முதல்லே வீடு வாங்குவோம்; அப்புறம் 2400 சதுர அடின்னு நம்ம ஆசை விரியும். கடைசில 'வில்லா’வுல போய் அது முடியும். கடனும் பெருகும்; கஷ்டங்களும் அதிகமாகும். ம்... இந்த ஆசைகளை விட்டொழிக்கணும், சார்!' என்றேன்.

'அப்படி ஒட்டுமொத்தமா, ஆசையே எல்லா துன்பத்துக்கும் காரணம்னு சொல்லிடமுடியாது. சில ஆசைகளை சிவப்புக் கம்பளம் விரிச்சு, இரு கரம் நீட்டி வரவேற்கலாம், தெரியுமோ?'

நண்பர் இப்படித்தான்... அவர் போக்கிலேயே பேசினால், தன்னை ஒரு படி புத்திசாலியாகக் காட்டிக்கொள்ள, குறுக்கில் பாய்வார்.

'அப்படி என்ன ஆசைகள் அவை?" என்றேன்.

'எப்போதும் பரமசிவனின் காலடியிலேயே இருக்கணும் என்பது மாணிக்கவாசகரின் ஆசை. 'சிவபெருமான் என்னை அழைச்சு, பெருமை, அறியாமை எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்கிட்டே வந்துடுன்னு சொல்லணும்; அதுவே என் விருப்பம்’ என்கிறார் அவர். அப்பர் சுவாமிகள் ஒருபடி மேலே போறார்...'

'அப்பர்னாலே மேலேதானே?' என்றேன் நான். 'சீரியஸா பேசிக்கிட்டிருக்கும்போது இப்படி மொக்கை ஜோக் அடிக்கப்படாது!' என்று முறைத்த நண்பர், ''பிறப்பு இறப்பு வேண்டாம்னு எல்லோரும் நினைப்போம்; ஆனா, 'திரும்பத் திரும்பப் பிறக்கணும்கறதுதான் என் ஆசை. அப்பத்தானே தில்லை நடராசனைப் பார்த்துட்டே இருக்கலாம்?’னு சொல்றார் அப்பர்...'

'இதுலேருந்து நாம என்ன புரிஞ்சுக்கணும்? ஆசைப்படறதுல தப்பு இல்லைன்னு எடுத்துக்கலாமா?' என்று கேட்டேன்.

'ஆமாம். ஆனா, அது நியாயமான ஆசையா இருக்கணும். உதாரணமா, 'மோட்சத்தை அடையணும்’னு விரும்பறதுல தப்பே இல்லை. இன்னும் சொல்லப்போனா, நம்மைக் காத்தருள இந்த வகையான ஆசைகள் அத்தியாவசிய தேவை!' என்றார் நண்பர்.

'கண்டிப்பா! ஆசையை விடணும்னாலும் ஆசைப்பட்டாத்தானே முடியும்?' என்றேன். 'ம்...' என்று என்னை அடக்கி, 'அங்கே கேளும்' என்று கவனம் ஈர்த்தார் நண்பர். பக்கத்து கோயிலிலிருந்து, யாரோ பாடிக்கொண்டிருந்த 'மோக்ஷமு கலதா...’ கீர்த்தனை காற்றில் தவழ்ந்து வந்தது.