Published:Updated:

பாட்டாலே... பக்தி சொன்னார்..!

பாட்டாலே... பக்தி சொன்னார்..!

பாட்டாலே... பக்தி சொன்னார்..!

பாட்டாலே... பக்தி சொன்னார்..!

Published:Updated:
பாட்டாலே... பக்தி சொன்னார்..!
பாட்டாலே... பக்தி சொன்னார்..!
பாட்டாலே... பக்தி சொன்னார்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

றைப்பணியாய் வாழ்க்கை நடத்த, எல்லோருக்கும் லபிக்காது. பிழைப்புக்கான காசு தேடலாக இல்லாது, தலைதூக்கி நிற்கும் கர்வத்துக்கான காரணமாக இல்லாது, தன் முகத்துக்கு விலாசம் தேடும் முயற்சியாக இல்லாது, வேறு எந்த எதிர்பார்ப்புமே இல்லாது இறைப்பணியில் ஈடுபடும் பாக்கியம் வெகு சிலருக்கே வாய்க்கும்.

இதற்கு, உள்ளே கடவுள்மீது உண்மையான பிரேமை வேண்டும். கடவுளைத் தேடுகின்ற ஏக்கம் வேண்டும். இதற்காகக் குடும்பத்தை உதறாமல், தன் குடும்பத்தையே இறைப்பணியில் மும்முரமாக ஈடுபடவைக்க பூர்வஜென்ம புண்ணியம் இருந்தால்தான் நடக்கும்.

கடலூர் கோபி பாகவதர் என்கிற உத்தமமான மனிதருக்கு இது ஏற்பட்டிருக்கிறது. இப்போது அதிகமாக மக்களால் அனுபவிக்கப்படுகிற நாம சங்கீர்த்தனம் எனும் முறையை, 'அபங்’ என்று அழைக்கப்படுகிற மராட்டியப் பாடல்களின் குழைவை, அதன் குதூகலத்தைக் குறைவில்லாது தருகிறார், கோபி பாகவதர். தன்னைப் பார்த்துக் கேட்கின்றவர்களுக்குப் பாண்டுரங்கனைப் பற்றிய மகிமை இன்னும் தெளிவாகப் புரியவேண்டும் எனும் அக்கறையுடன், அதை நாடக வடிவில் தருகிறார்.

நாடகம் என்றால், மணியடித்துத் திரை விலக்கி, ஒளி குறைத்து, ஒலி கூட்டி, ஆறேழு வாத்தியங்கள் முழங்க ராஜாதி ராஜ... என்று கூச்சலோடு ஆரம்பிக்கிற நாடகம் அல்ல. இவரின் 'அபங்’ நாடகத்தில் நடிக்கிறவர்கள் எவரும் வேஷம் கட்டியிருக்க மாட்டார்கள். கதாநாயகன் பாண்டுரங்கனுக்கு மட்டும் நீண்ட மாலை, கிரீடம், சரிகை, மேல் துண்டு; பாண்டுரங்கன் நிற்பதற்குப் பீடம் போன்று இரண்டு செங்கற்கள்; அவ்வளவே! மற்றபடி, மீராவாக நடித்தாலும், ஜக்குபாயாக நடித்தாலும், செருப்புத் தைப்பவராக நடித்தாலும், வணிகராக நடித்தாலும், அந்தந்த நடிகர்கள் அவரவர் உடைகளூடே மேடையில் வலம் வருவார்கள்.

அதேநேரம்... குரல் வளத்தால், வசன உச்சரிப்பால், பாட்டின் குழைவால், கண்ணீர் விட்டுக் கதறும் நடிப்பால் அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறிவிடுவார்கள். எதிரே உட்கார்ந்து கவனிப்போரின் நெஞ்சைப் பிசைந்து உருக்குவார்கள். மீராபாய் கதையும், ஜக்குபாய் கதையும், பக்த ராமதாஸ் சரித்திரமும் என்ன சொல்கிறது என்பதை ஊசி மருந்தாய் உள்ளே இறக்குவார்கள். கோபி பாகவதர் நாடகம் பார்த்து உருகி அழாதவர் வெகு குறைவு!

##~##
கோபி பாகவதருக்கு வங்கி உத்தியோகம். பத்தாவதும் ஐந்தாவதும் படிக்கின்ற இரண்டு பெண் குழந்தைகள் (ராதிகா, ஸ்ருதிகா). பேராசிரியராக வேலைபார்க்கும் நண்பருக்கு ஸ்ரீகிருஷ்ணர் வேடம். வெவ்வேறு அலுவலகத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள், உடன் பாடுபவர்களாகவும், பக்கவாத்தியக்காரர்களாகவும் பங்கேற்பார்கள். இவர்களில் யாருக்குமே இந்த நாமசங்கீர்த்தனம் தொழில் அல்ல.

ஆனால், இவர்கள் செய்கிற வங்கி வேலை, பேராசிரியர் உத்தியோகம் என எல்லாமே இந்த நாம சங்கீர்த்தனத்துக்காகத்தான்! நாம சங்கீர்த்தனத்தை நிம்மதியாகச் செய்ய, 'அபங்’ தொடர்ந்து நடைபெற, வங்கி உத்தியோகம் உதவி செய்கிறது. எனவே, வங்கி வேலையை முடித்துவிட்டு, தலைதெறிக்க ஓடிவந்து, ஆறு மணிக்கு ஆரம்பிக்கிற நாடகத்தில், கோபி பாகவதரும் மற்றவர்களும் அரக்கபரக்கக் கலந்துகொள்கிறார்கள். பிறகு, அதிலேயே மூழ்கிப் போகிறார்கள்.

கோபி பாகவதரின் 'அபங்' நாடகத்தில் சில காட்சிகள்...

பரத கண்டம் முழுவதும், இவரின் 'அபங்’ நாடகங்கள் மேடையேறியிருக்கின்றன; மிகப் பெரிய பாராட்டுதல்களைப் பெற்றிருக்கின்றன. இதனைப் பணிவுடன் ஏற்றுக்கொள்ளும் கோபி பாகவதர், ''இது ஆத்ம திருப்தி. இந்த திருப்தி பாண்டுரங்களின் லீலை. நான் வெறும் கைப்பாவை'' என்கிறார். இவரது ஆயிரத்தோராவது நாடக அரங்கேற்றம் வரும் ஜனவரி 2-ஆம் தேதி (2.1.2011), சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ணஸ்வாமி அரங்கில் நடைபெறுகிறது.

நல்ல விஷயங்கள் பலமுறை நிகழ வேணும். ஆயிரம் தாண்டிய கோபி பாகவதரின் 'அபங்’ நாடகம், பல்லாயிரம் பல கோடி நூறாயிரம் என அரங்கேற்றங்கள் காண வேண்டும் என, அதை ஒரு முறை பார்த்தால் நீங்களும் வாழ்த்துவீர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism