Published:Updated:

`எப்போது மனம் திரும்பினாலும் ஏற்றுக்கொள்வார் ஆண்டவர்!’ - பைபிள் கதை அறிவுறுத்தும் செய்தி #BibleStories

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`எப்போது மனம் திரும்பினாலும் ஏற்றுக்கொள்வார் ஆண்டவர்!’ - பைபிள் கதை அறிவுறுத்தும் செய்தி #BibleStories
`எப்போது மனம் திரும்பினாலும் ஏற்றுக்கொள்வார் ஆண்டவர்!’ - பைபிள் கதை அறிவுறுத்தும் செய்தி #BibleStories

`எப்போது மனம் திரும்பினாலும் ஏற்றுக்கொள்வார் ஆண்டவர்!’ - பைபிள் கதை அறிவுறுத்தும் செய்தி #BibleStories

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய பைபிள் கதைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை. 

பாவமன்னிப்பு, மனந்திரும்புதல் போன்ற வாக்கியங்கள் கிறிஸ்தவ மதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். 

பாவமன்னிப்பையும், மனம் திரும்புதலையும் பற்றி மிகச்சிறப்பாக ஒரு சிறுகதையின் மூலம் விளக்குகிறார் இயேசு கிறிஸ்து.

ஒரு பெரும் நிலக்கிழாருக்கு நிறைய விளைநிலங்கள் இருந்தன. அவர் தனது நிலத்தின் ஒரு பகுதியில் தானியங்களைப் பயிரிட்டிருந்தார்.  இன்னொரு பகுதியில் திராட்சைத்தோட்டம் இருந்தது. பழ மரங்களையும் பயிரிட்டிருந்தார். அவரது நிலத்தில் தினமும் ஏதோ ஒரு வேலை நடந்துகொண்டே இருக்கும். 

ஒரு பக்கம் உழவு வேலை போய்க்கொண்டிருக்கும். இன்னொரு வயலில் விதைத் தெளிப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கும். காலையில் எழுந்ததும், இன்று இந்த வயலில் இன்ன வேலையை முடிக்க வேண்டும் என முடிவுசெய்து, அதற்கேற்ப ஆட்களை வரச் சொல்வார். அன்றும் அப்படித்தான்... அவரது திராட்சைத் தோட்டத்தில் அறுவடை செய்ய வேண்டி இருந்தது. 

காலை 9 மணி அளவில்  ஊருக்குள் வந்து,  'அறுப்பு வேலை அதிகம் இருக்கிறது. அனைவரும் வாருங்கள். உங்களுக்கு நல்லவிதமாக கூலி தருகிறேன்' என்று அழைத்தார். அவரது குரலுக்கு செவிமடுத்து சிலர் வந்து சேர்ந்தனர். வேலை முடிந்தபாடில்லை.  மீண்டும் 12 மணி அளவில் ஊருக்குள் வந்து ஆட்களை அழைத்தார். அப்போதும் அறுவடை முடியவில்லை. மதியம் 2 மணி,  3 மணி, 4 மணி என்று அவ்வப்போது போய் ஆட்களை அழைத்து வந்து வயலில் இறக்கினார். ஒரு வழியாக மாலை 6 மணிக்கு வேலை முடிந்தது. அப்போது எல்லோருக்கும் ஒரே  மாதிரியான கூலியை வழங்கினார்.

இது பலருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் சிலருக்கு வருத்தமாக இருந்தது. பொறுக்கமுடியாமல் ஒருவர் கேட்டே விட்டார். 

"இவர்கள் இப்போதுதான் வேலையில் இணைந்தார்கள். நாங்கள் காலையில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்களுக்குக் கொடுப்பதைவிட, அவர்களுக்குக் குறைவாகக் கூலி தருவீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எல்லோருக்கும் ஒரேமாதிரி தருகிறீர்களே?" என்ற அந்த மனிதரைப் பார்த்து புன்முறுவல் பூத்தார் அந்த நிலக்கிழார். 

''உங்களிடம் பேசிய கூலித்தொகையை நான் குறைத்திருக்கிறேனா? நான் இரக்கமுள்ளவனாக இருப்பதில் உனக்கென்ன பிரச்னை..."   என்று அவர் கேட்டார். அவர்களால் எந்த பதிலும் கூற முடியவில்லை.

இந்தக் கதையில் நிலக்கிழாராக ஆண்டவரையும், திராட்சைத் தோட்டத்தை விண்ணரசாகவும், நம்மை அவரது ஊழியக்காரராகவும் அறிவுறுத்துகிறார் இயேசு. 

அவரது சொல்லைத் தொடக்கத்திலேயே கேட்டு வருபவர்கள் காலையிலேயே திராட்சைத் தோட்டத்துக்கு வந்தவர்களுக்கு ஒப்பாகிறார்கள்.

 மனித வாழ்வில் நாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, உலகப்பூர்வமான விஷயங்களில் உள்ள இச்சைகளை விடுத்து, இறைவாழ்வைத் தேர்வு செய்வதைக் குறியீடாக இயேசு கிறிஸ்து சொல்கிறார்.  

செய்த பாவங்களுக்காக  வருந்தி மனம் திரும்பிவிட்டால், அதன் பிறகு வாழ்நாளில் நாம் அந்தத் தவறை மீண்டும் செய்யவே கூடாது. அதுதான் உண்மையான மனம் திரும்புதலாகும். அப்படி மனம் திரும்புகிறவர்கள் கடைசிநேரத்தில் வந்தாலும், அவர்களை ஏற்றுக்கொள்ள அவர் சித்தமாக இருக்கிறார் என்பதே இந்த  பைபிள் கதையின் ஊடாக அவர் கூறும் செய்தியாகும்.    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு