Published:Updated:

மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டது செல்லாது: தமிழக அரசு

மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டது செல்லாது: தமிழக அரசு
மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டது செல்லாது: தமிழக அரசு
மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டது செல்லாது: தமிழக அரசு

சென்னை:நித்தியானந்தா நடத்தை சரியில்லாதவர் என்றும்,மதுரை ஆதீனத்தின் வாரிசாக  இருக்க அவருக்கு தகுதி இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு  தெரிவித்துள்ளது.

மதுரை இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்  நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் மதுரை மீனாட்சி  பிள்ளைகள் அமைப்பின் சார்பில் ஜெகதலபிரதாபன் தாக்கல் செய்த மனு இன்று  விசாரணைக்கு வந்தது.

அப்போது நித்தியானந்தா விவகாரத்தில் கடந்த 6 மாதத்தில் அரசு எடுத்த நடவடிக்கை  என்ன? என்று நீதிபதிகள் பானுமதி, சுப்பையா உள்ளிட்ட அமர்வு நீதிமன்ற பெஞ்ச்  கேள்வி எழுப்பியதோடு, அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை வழக்குகள்  நீதிமன்றத்துக்கு வந்திருக்காது என்றும் கூறியது.

இந்நிலையில் விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  நவநீதகிருஷ்ணன்,மதுரை ஆதீனத்தின் வாரிசாக இருக்க நித்திக்கு தகுதி இல்லை என்று  விளக்கமளித்தார்.

##~~##
மேலும், ஆதீனம் இறந்த பிறகே வாரிசை நியமிக்க முடியும் என்றும் ஆதீனத்தின் பக்தர்  ஒருவரே வாரிசாக இருக்க தகுதி உள்ளவர் என்றும், ஏராளமான வழக்குகளைக்  கொண்டுள்ள நித்தியானந்தா நடத்தை சரி இல்லாதவர் என்றும் கூறிய அவர், எந்த  அமைப்புக்கும் தலைவராகும் தகுதி நித்தியானந்தாவிற்கு இல்லை என்றும், மத அமைப்பு  ஒன்றுக்கு தலைவராக இருக்க நித்தி துளியும் தகுதி இலாதவர் என்றும் தெரிவித்தார்.
மேலும் மதுரை ஆதீனம் அருணகிரி மற்றும் நித்தி உருவாக்கிய அறக்கட்டளை  சட்டவிரோதமானது என்றும் கூறிய அவர், அறக்கட்டளை மூலம் மதுரை ஆதீனத்தின்  சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் சார்பில் ஜெகதலபிரதாபன் மனு மீதான  விசாரணையின் பொது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.