Published:Updated:

சனிப்பெயர்ச்சி... மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

சனிப்பெயர்ச்சி... மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017
சனிப்பெயர்ச்சி... மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

சனிப்பெயர்ச்சி... மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

ந்த வருடம் டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனிப்பெயர்ச்சி ஆகிறார் சனீஸ்வர பகவான். அவர் 26.12.20 வரை தனுசு ராசியில் இருந்து பலன்களைத் தரவுள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து, 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

ஒவ்வொரு ராசியினருக்கும் அவர் கூறிய பலன்களில் முதலில் மேஷ ராசி அன்பர்களுக்கான பலன்கள் குறித்து இங்கே பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனியாக இருந்த சனிபகவான் ஏராளமான தொல்லைகளைத் தந்து வந்தார். எதைத் தொட்டாலும் பிரச்னைகள், தொந்தரவுகள், கொடுக்கல் வாங்கலில் சிக்கல், கணவன் மனைவி உறவில் மனஸ்தாபம் என பலவிதப் பிரச்னைகள் உங்களுக்கு இருந்து வந்தது. இப்போது அவர் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடமான  பாக்யஸ்தானத்துக்கு வருகிறார். எல்லாவிதத்திலும் வெற்றிகள் கிடைக்கும். 

இவ்வளவு நாட்களாக உங்களுக்கு இருந்த ஏமாற்றம், விரக்தி, தாழ்வு மனப்பான்மை இதெல்லாம் உங்களை விட்டு விலகும். தன்னம்பிக்கை, உற்சாகம், நேர்மறையான எண்ணங்கள் மனதில் உருவாகும். வாழ்க்கையில் புதுவசந்தம் தென்றலாக வீசத் தொடங்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

கைவிட்டுப்போன தொகையெல்லாம் திரும்ப வந்து உங்களுக்குக் கிடைக்கும். எதிர்பார்த்த தொகை உங்கள் கைக்கு வரும். பணவரவு அதிகமிருக்கும். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக இருந்த பணத்தட்டுப்பாடு விலகும். கடன்கள் குறையும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்தவீடு வாங்குவீர்கள். 

(மேஷ ராசிக்காரர்களுக்கு உரிய விரிவான பலன்கள் குறித்து அவர் பேசிய வீடியோ லிங்க் நீங்கள் கேட்டுப் பயன்பெறுவதற்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.)

சனிப்பெயர்ச்சியினால் நற்பலன்கள் ஏற்பட மேஷ ராசி அன்பர்கள் வழிபடவேண்டிய பரிகாரக் கோயில் ஶ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில். 

இந்தத் தலத்தில்தான் மானுடம் தழைக்க வந்த மகான் ஶ்ரீராமநுஜர் அவதரித்தார்.  கோயிலுக்குச் சென்று ஶ்ரீஆதிகேசவப் பெருமாளையும், ஶ்ரீராமாநுஜரையும் வழிபட்டு வர, சனிப்பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் அதிகரிக்கும். 

சென்னை - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கோயிலின் ராஜகோபுரத்துக்கு எதிரில் ஶ்ரீராமநுஜரின் அவதாரத் தலம் அமைந்திருக்கிறது.  அருகிலேயே கூரத்தாழ்வார் சந்நிதியும், ராஜகோபுரத்துக்கு வலப்புறம் சிறிய கோபுரத்துடன் மணவாள மாமுனிகளின் சந்நிதியும் உள்ளது.

ஆசார்யார்களை தரிசித்துவிட்டு, கோயிலுக்குள் சென்று பெருமாள், தாயார், ஶ்ரீராமாநுஜர் ஆகியோரை தரிசித்து வழிபடலாம்.
திரேதா யுகத்தில் லட்சுமணன், துவாபர யுகத்தில் பலராமன் என்று அவதரித்த ஆதிசேஷனின் அம்சமாக, உலக மக்களெல்லாம் உய்யும் பொருட்டு அவதரித்தவர் ஸ்ரீராமாநுஜர். பஞ்சமர் மற்றும் பாமரரின் முன்னேற்றத்துக்காகவே தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட அற்புத மகான் அவர்.

இங்குள்ள ஸ்ரீ ராமாநுஜரின் திருமேனி 'தானுகந்த திருமேனி’ ஆகும். ஸ்ரீராமாநுஜர் தம் முதுமைக் காலத்தில் ஸ்ரீரங்கத்திலேயே இருந்துவிட்டபடியால், ஸ்ரீபெரும்புதூரில் இருந்த அவருடைய சீடர்கள், அவரைப்போலவே ஒரு திருவுருவம் செய்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார்கள். ஸ்ரீரங்கத்துக்குச் சென்று, தங்கள் விருப்பத்தை ஸ்ரீராமாநுஜரிடம் தெரிவித்தார்கள். அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கிய ஸ்ரீராமாநுஜர்,

ஒரு சிற்பியிடம் சொல்லி தம்மைப்போலவே மூன்று செப்புச் சிலைகளை வடிக்கச் செய்தார். அவற்றில் தம்மைக் கவர்ந்த ஒரு விக்கிரகத்தை தம் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, தம்முடைய சக்தியை எல்லாம் அந்த விக்கிரகத் துக்குள் செலுத்தி, 'இது யாம் உகந்த மூர்த்தம். இதையே ஸ்ரீபெரும்புதூர் கோயிலில் பிரதிஷ்டை செய்யுங்கள்’ என்று கொடுத்து அனுப்பினார். அப்படி ஸ்ரீராமாநுஜர் தம் சக்தியை எல்லாம் செலுத்தி, `தானுகந்த மூர்த்தம்’ என்று அருளியதால், இங்குள்ள மூர்த்தத்துக்குத் தனிச் சிறப்பும் சக்தியும் ஏற்பட்டது.
ஶ்ரீராமாநுஜரே உவந்து ஏற்ற மூர்த்தம் என்பதாலும், அவர் ஆதிசேஷனின் அவதாரம் என்பதாலும், இந்தத் தலத்துக்கு வந்து வழிபடும் அன்பர்களுக்கு சர்ப்ப தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

அடுத்த கட்டுரைக்கு