Published:Updated:

குரு பூர்ணிமா!

சத்குரு

தியோகி, யோக விஞ்ஞானத்தை சப்தரிஷிகளுக்கு அளித்து ஆதிகுருவாய் உருவெடுத்த திருநாளே, குரு பௌர்ணமி. மனித உடல் என்பது மண்ணிலிருந்து உருவானதுதான். எனவே, இந்தப் பூமியின் இயல்பு, இந்தப் பூமியின் மனப்பாங்கு போன்றவை மாறும்போது அதே மாற்றங்கள் மனித உடலிலும் நிகழ்கின்றன. பூமத்திய ரேகைக்கு வடக்கே சூரியனின் ஓட்டம் இருக்கும்போது (ஜனவரி முதல் ஜூன் வரை - தை முதல் ஆனி வரை) உத்தராயனம் என்கிறோம். சூரியனின் ஓட்டம் தெற்கே இருக்கும்போது (ஜூலை முதல் டிசம்பர் வரை - ஆடி முதல் மார்கழி வரை) அதை தட்சிணாயனம் என்கிறோம்.

உத்தராயனத்தில் வரும் முதல் பௌர்ணமி (தை மாதம்) ‘தன்ய பௌர்ணமி’. தட்சிணா யனத்தில் வரும் முதல் பௌர்ணமி ‘குரு பௌர்ணமி’.

இந்த பௌர்ணமி, ஜூலை மாதத்தில் ஏற்படுகிறது. தட்சிணாயன காலமான (ஜூலையிலிருந்து டிசம்பர் வரை) ஆறு மாதங்களின் இயற்கையான குணம், ‘உள்வாங்கிக் கொள்ளும்‘ தன்மையுடையதாகவும், உத்தராயன காலமான (ஜனவரி முதல் ஜூன் வரை) ஆறு மாதங்கள் இந்தப் பூமி ‘நிறைவடையும்’ தன்மையுடையதாகவும் இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குரு பூர்ணிமா!

உத்தராயனத்தில், இந்தப் பூமி ஆண்தன்மை வாய்ந்ததாக, நிறைவடையும் தன்மை கொண்ட தாக இருக்கிறது. அடுத்த ஆறு மாதங்கள் அதாவது தட்சிணாயனத்தில் பெண்தன்மை நிரம்பியதாக, உள்வாங்கும் தன்மை கொண்ட தாக உள்ளது. அதனால்தான், சிவன் தன் யோக அறிவினைப் பகிர்ந்துகொள்ள, தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியைத் தேர்ந்தெடுத்து, குருவாக அமர்ந்தார். அதனாலேயே இந்தப் பௌர்ணமி குரு பௌர்ணமி என்று வழங்கப்படுகிறது.

வருடத்தின் இக்காலகட்டத்தில்தான், ஆதி யோகியான அந்த சிவனின் கவனம் தன் ஏழு சீடர்களின் மீது விழுந்தது. சப்த ரிஷிகள் என்று பிரபலமாகப் பேசப்படுவது சிவனின் இந்த ஏழு சீடர்கள்தான். யோக பாரம்பரியத்தில், அந்த சிவனை கடவுளாக வணங்குவதில்லை, ஆதியோகியாக, ஆதிகுருவாகப் பார்க்கிறோம்.

28 நாட்கள், சிவன் தன் கவனத்தை சப்தரிஷிகளிடம் இருந்து விலக்கவில்லை. குரு பௌர்ணமிக்கு முந்தைய பௌர்ணமியில் இருந்து, குரு பௌர்ணமி வரையில் சப்தரிஷி களுடன் அவர் முழுமையாய் இருந்தார்.

84 வருடம் எளிமையான, தயார் நிலை பயிற்சிகளில் சப்தரிஷிகள் ஈடுபட்டிருந்தனர். ஆனால், சிவன் ஒரு கணம்கூட அவர்களை கவனிக்கவில்லை. ஆனால் 84 வருடங்களுக்குப் பின், வருடத்தின் இந்தப் பகுதியில்தான் சிவனது கவனம் முழுமையாய் சப்தரிஷிகள் மீது பதிந்தது.  இம்மாதத்தில், அவர் மிகுந்த கருணை உடையவர் ஆனார்.

குரு பூர்ணிமா!

உலகம் தன்னைத் தொடாதவாறு கடினப் படுத்திக் கொண்ட ஒருவர் தளர்ந்து, கருணை வடிவமானார். நோக்கம் எதுவும் கொள்ளாமல், ஓர் ஆசிரியராக, குருவாக அவர் ஆனார். 

இந்நாளில் ஆதியோகி தெற்கு நோக்கி அமர்ந்து யோகமுறைகளைக் கற்பிக்க ஆரம்பித்ததே, மனித விழிப்பு உணர்வில் மிகப்பெரிய சாத்தியத்தை உருவாக்கியது.

மனிதன் தன் எல்லைகளைக் கடந்து செல்ல சாத்தியம் உண்டு என்பதனை அவனுக்கு உணர்த்திய இந்த தினம் நம் கலாசாரத்தில் மிகப்பெரிய கொண்டாட்டமாய் இருந்து வந்தது. எனவே, இந்த மாதம் குருவின் அருள் பெற சிறந்த காலமாக உள்ளது.

பௌர்ணமியின் முக்கியத்துவம் ஒவ்வொரு பௌர்ணமியும் முக்கியம் வாய்ந்ததுதான். இருந்தாலும் ஆன்மிக சாதகர் களுக்கு, குறிப்பாக குரு பௌர்ணமி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.

குருவின் அருளை ஒருவர் பெறுவதற்கு குரு பௌர்ணமியான இந்நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

மேலும், பௌர்ணமி நாட்களில் பூமி, நிலவுடன் ஒருவித ஒத்திசைவில் இருக்கிறது. அன்று முழுநிலவாக இருக்கும்போது, அதன் அதிர்வும், தன்மையும் மிகவும் மாறுபட்டு இருக்கும். அதன் காந்த ஈர்ப்பு சக்தியும் மாறுபட்டு இருக்கும். பூமியின் எந்தப் பகுதி நிலவைப் பார்த்து இருக்கிறதோ, அந்தப் பகுதியின் மேல் நிலவின் காந்த ஈர்ப்பு சக்தி செயலாற்றுகிறது. இதுபோன்ற இயற்கையான ஈர்ப்பு இருக்கும் நேரத்தில், உங்கள் முதுகுத் தண்டை நேராக வைத்திருந்தால், உங்களுக்குள் இருக்கும் சக்தி, இயல்பாக மேல் நோக்கிப் பயணிக்க முயற்சிக்கும்.

குரு பூர்ணிமா!

அந்த நேரத்தில் சக்தி அதிர்வுகளும் வேறு மாதிரி இருப்பதால், உங்கள் ரத்தமும் உங்கள் அடிப்படை உயிர்ச் சக்தியான பிராண சக்தியும் கூட வேறுவிதமாகப் பாய்கின்றன. நிலவின் ஈர்ப்பு விசை, மற்ற இரவுகளைவிட பௌர்ணமி இரவன்று அதிகமாக தண்ணீரை மேல் நோக்கி எழச் செய்கிறது. எனவேதான் பௌர்ணமி இரவில் கடலின் அலைகள் அதிகமாக மேலெழும்புகின்றன. அதே போல உங்கள் ரத்தமும் மேல் நோக்கி ஈர்க்கப்படுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

சக்தியானது மேல் நோக்கி நகரும்போது, உங்கள் தன்மை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அந்தத் தன்மை இன்னும் சிறிது அதிகமாகிறது. கொஞ்சம் சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், பௌர்ணமி தினங்களில் இன்னும் சற்று அதிக சித்த சுவாதீனம் அற்றவராக இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் ஏற்கெனவே சிறிது தடுமாற்றத்துடன் இருந்தால், அந்த இரவில் இன்னும் அதிக தடுமாற்றத்தில் இருப்பீர்கள். உங்களுக்குள் இருக்கும் மற்ற தன்மைகளிலும் இதே போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இதை உணரும் அளவுக்கு பெரும்பாலான மக்களுக்கு நுண்ணுணர்வு இருப்பதில்லை.

நீங்கள் தியானத்தன்மையுடன் இருந்தால், அது உங்களை மேலும் அதிக தியானத்தன்மை உடையவராக ஆக்குகிறது. நீங்கள் காதலில் இருந்தால், உங்களை இன்னும் தீவிரமான காதலராக்குகிறது. நீங்கள் பயத்தில் இருந்தால், இன்னும் அதிகமாக பயப்படுவீர்கள். இப்படி உங்கள் தன்மை எதுவாக இருந்தாலும், அது பௌர்ணமி தினத்தன்று அதிகமாகிறது.

ஆகவே ஆன்மிகப் பாதையில் இருக்கும் மக்களுக்கு, குறிப்பாக தியானம் செய்பவர் களுக்கு, பௌர்ணமி இரவுகள் மிகுந்த துணைபுரியும். ஏனென்றால், சக்தி நிலை உயராமல், சக்தியின் தன்மை அதிகரிக்காமல், விழிப்பு உணர்வு அடைவது சாத்தியமே இல்லை. உங்கள் அமைப்புகளில் சக்தி நிலை உயர்ந்தால், விழிப்பு உணர்வென்று நீங்கள் சொல்லும் விஷயம் இயல்பாகவே நடக்கும். ஆகவே இந்த இயற்கையான நிகழ்வை, நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நாளில் நீங்கள் அபரிமிதமான சக்தியையும், விழிப்பு உணர்வையும் உணரலாம். இது இயற்கை நமக்கு வழங்கியுள்ள நல்லதொரு வாய்ப்பு.வாழ்வின் உண்மையான நோக்கத்தையும் அதன் ஆற்றலையும் நீங்கள் உணர்வீர்களாக. இந்த குரு பௌர்ணமி தினத்தில் என்னுடைய அருள் உங்களுடன் நிறைந்திருக்கும்.

குரு என்பவர் சாலை வரைபடம் போல. குருவின் வழிகாட்டல் இல்லாமலும் ஒருவர் தான் போய்ச் சேர வேண்டிய இலக்கை அடையலாம். ஆனால், அதற்கு நீண்ட காலம் செலவிட நேரிடும்.

குரு பௌர்ணமி அன்று, ஆன்மிக சாதகர்கள் தத்தம் குருமார் களுக்கு நன்றி செலுத்தி அவர்களது அருளைப் பெறுகிறார்கள். குரு பௌர்ணமி அன்று, யோக சாதனை அல்லது தியானத்தில் ஈடுபடுபவர்கள் மிகுந்த பயனடைகின்றனர்.

ஈஷா யோகா மையத்தில் இந்த வருடம் குரு பெளர்ணமி (ஜூலை -31) தினத்தன்று மாலை 6 மணி முதல் இரவு 12.30 மணி வரை சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசை நிகழ்ச்சி, லிங்கபைரவி ஊர்வலம், மஹாஆரத்தி, பிரசாதம் (இரவு உணவு), சத்குருவுடன் சத்சங்கம் ஆகிய வைபவங்கள் நடைபெறுகின்றன. பக்தர்கள் கலந்துகொண்டு குருவருளும் திருவருளும் பெற்றுச் சிறக்கலாம்.;