Published:Updated:

சனிப்பெயர்ச்சி... கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

சனிப்பெயர்ச்சி... கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017
சனிப்பெயர்ச்சி... கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

சனிப்பெயர்ச்சி... கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபடவேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

ந்த வருடம் டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனீஸ்வர பகவான். அவர் 26.12.20 வரை தனுசு ராசியில் இருந்து பலன்களைத் தரவுள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து, 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். ஒவ்வொரு ராசியினருக்கும் அவர் கூறிய பலன்களில் இன்றுகடகம் ராசி அன்பர்களுக்கான பலன்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

கடக ராசி அன்பர்களே!

கடந்த இரண்டரை வருடமாக ஐந்தாவது இடத்தில் இருந்து பல வகைகளிலும் அலைச்சலைத் தந்த சனிபகவான், அதற்கு இரண்டரை வருடம் முன்பு அர்த்தாஷ்டம சனியாக இருந்து அல்லலைத் தந்துவிட்டார். உங்கள் ராசிக்கு ஏழு, எட்டாம் வீட்டுக்கு உரிய சனிபகவான், வாழ்க்கைத்துணையைக் குறிக்கும் கிரகமாவார். 


இத்தனை நாட்களாக கணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன சச்சரவுகள், ஆரோக்கியக்குறைவு, மருத்துவச்செலவு, குழந்தைகளாலும் பிரச்னைகள்னு மிகவும் கஷ்டப்பட்டிருப்பீர்கள். தற்போது சனிபகவான் ஆறாமிடத்தில் நுழைகிறார். இதனால், விபரீத ராஜயோகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்னு சொல்லுவார்கள்.

இனி வரும் மூன்று வருடங்கள் உங்களுக்கு அமோகமாக இருக்கும். எதைத் தொட்டாலும், உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பங்குச் சந்தை மூலம் பணம் வர வாய்ப்பு இருக்கிறது. பழைய கடன்கள் எல்லாம் வசூலாகும். அதிக வட்டிக்கு வாங்கி இருந்த கடனை அடைப்பீர்கள். 

கணவன் மனைவிக்குள் இருந்த கசப்பு உணர்வுகள் விலகும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் சொல்  கேட்டு நடந்துக்கொள்வார்கள். இத்தனை நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும்.

பூர்வீகச் சொத்து பிரச்னைகள் விலகும். பாகப்பிரிவினைத் தொந்தரவுகள் விலகும். சகோதரர்களுக்குள் இருந்த சண்டைச் சச்சரவுகள், பிணக்குகள் நீங்கும். நீண்ட நாட்களாக வெளிநாடு செல்ல முயற்சி செய்துகொண்டு இருந்தவர்களுக்கு விசா கிடைத்து அங்கு வேலை செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சி கடகராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் காலமாக அமையும். கடக ராசிக்காரர்கள், திருக்கொள்ளிக்காட்டில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். 


(கடக ராசிக்காரர்கள் இந்த வீடியோ லிங்க்கில்... விரிவான பலன்களை அறியலாம்.) 

திருவாரூர் மாவட்டம்,  திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயம், பொங்கு சனீஸ்வர க்ஷேத்திரம் எனப் போற்றப்படுகிறது. திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம். அக்னிபுரி, அக்னி க்ஷேத்திரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கு சனீஸ்வரர், தனிச்சந்நிதியில் அருள்கிறார். அதுமட்டுமா? இங்கு லட்சுமி கடாட்சத்தை அள்ளித் தருபவராக, பொங்கு சனீஸ்வரராகக் காட்சி தருகிறார்.

எல்லாக் கோயில்களிலும், ஸ்ரீமகாலட்சுமிக்கு சந்நிதி இருக்கும். இங்கே... இந்தத் தலத்தில், லட்சுமி சந்நிதி இருக்கவேண்டிய இடத்தில், சக்தி அம்சமாக, சகல ஐஸ்வரியங்களையும் வாரி வழங்கும் வள்ளலாக, காட்சி தந்து அருள்புரிகிறார் சனி பகவான்! அருகிலேயே திருமகளும் சந்நிதி கொண்டிருப்பது விசேஷம்!

சனி பகவான் தன் சாபம் நீங்குவதற்காக, இந்தத் தலத்துக்கு வந்து, இங்கேயுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜை செய்தார். அவரின் தவத்தில் மகிழ்ந்த சிவனார், தேவியுடன் அவருக்குத் திருக்காட்சி தந்தார். அப்போது, 'தனம் மற்றும் தானியங்களுக்கு அதிபதியாக இருந்து அனைவருக்கும் அடியேன் அருளவேண்டும். குபேர சம்பத்துகளைத் தருபவனாக, ஆயுளுக்கும் ஆரோக்கியத்துக்கும் அதிபதியாக இருந்து, உயிர்களுக்கு வரமளிக்கவேண்டும்’ என சிவனாரிடம் வரம் கேட்டார் சனி பகவான். 'அப்படியே ஆகட்டும்’ என வரத்தைத் தந்தருளினார் சிவனார்.


அன்று முதல், திருக்கொள்ளிக்காடு தலத்துக்கு வந்து, தன்னைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு, சகல செல்வங்களையும் நோய் நொடியில்லாத, நீண்ட ஆரோக்கியத்தையும் வாரி வழங்கி வருகிறார், ஸ்ரீசனீஸ்வரர்.  இங்கேயுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீபஞ்சினும் மெல்லடியாள் சமேத ஸ்ரீஅக்னீஸ்வரரையும் ஸ்ரீசனி பகவானையும் வழிபட, இந்த சனிப்பெயர்ச்சி காலம் என்றில்லை. இந்த ஜன்மம் முழுக்கவே சீரும் சிறப்புமாக, சகல செல்வங்களும் பெற்று, பெருவாழ்வு வாழலாம்!

எப்படிச் செல்வது?

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில், சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது பாங்கல் நால்ரோடு. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கொள்ளிக்காடு திருத்தலம். திருவாரூரில் இருந்து பஸ் வசதி குறைவுதான். கார் மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
 

அடுத்த கட்டுரைக்கு