Published:Updated:

ஆதீன பொறுப்பிற்கு நித்தி வர முடியாது: தமிழக அரசு

ஆதீன பொறுப்பிற்கு நித்தி வர முடியாது: தமிழக அரசு
ஆதீன பொறுப்பிற்கு நித்தி வர முடியாது: தமிழக அரசு
ஆதீன பொறுப்பிற்கு நித்தி வர முடியாது: தமிழக அரசு

சென்னை:மதுரை ஆதீன பொறுப்பிலிருந்து அருணகிரிநாதரை நீக்கினாலும், நித்தியானந்தா பொறுப்பிற்கு வர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில்,தமிழக அரசு தெரிவி்த்துள்ளது.

மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமனத்தை எதிர்க்கும் வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது அருணகிரியை பதவியிலிருந்து நீக்கினால் நித்தி பதவிக்கு வந்து விடுவார் என்று மனுதாரரர் வாதிட்டார்.

இதனையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் மதுரை ஆதீன பொறுப்பிலிருந்து அருணகிரிநாதரை நீக்கினாலும், நித்தியானந்தா பொறுப்பிற்கு வர முடியாது என்றும்,மதுரை ஆதீனமடத்தை அரசு கையகப்படுத்த கோரி தான் வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

##~~##
அருணகிரியின் பதவி பறிபோனால், இளைய பட்டம் நித்தியானந்தாவை பொறுப்பேற்க அரசு அனுமதிக்காது என்றும், இந்து அறநிலைய சட்ட விதிகள் 59,60 ஐ பயன்படுத்தி அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.
முன்னதாக அருணகிரியை பதவியிலிருந்து நீக்கினால் நித்தி பதவிக்கு வந்து விடுவார் என்று மனுதாரரர் வாதம் செய்ததையடுத்து, அரசு வழக்கறிஞர் மேற்கண்ட வாதத்தை முன் வைத்தார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் பானுமதி,சுப்பையா ஆகியோர் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.