Published:Updated:

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்

Published:Updated:

மிழ் நாட்டில் விஷ்ணுபரமாகவும் சிவபரமாகவும் உள்ள எத்தனையோ பாடல் பெற்ற ஸ்தலங்கள் இருக்கின்றன. உற்ஸவ காலத்தில் அந்த ஸ்தலங்களில் உள்ள மூர்த்திகளைத் தரிசிக்க பக்தர்களின் மனம் விழைகிறது. உதாரணமாக ஆனித் திருமஞ்சனம் என்றதும் தில்லை நடராஜனை எண்ணாத சிவபக்தர் இருக்க முடியாது. வைகுந்த ஏகாதசி என்றதும் ஸ்ரீ ரங்கநாதனை வைஷ்ணவர் தியானிக்கிறார். முருகன் அடியார்கள் பற்றியோ சொல்லவேண்டியதில்லை. கிருத்திகை, சஷ்டி, விசாகம் என்றால் செந்தில் வேலவனும், பழநி ஆண்டியும், திருத்தணிகை வள்ளிமணாளனும் அவர்கள் மனக்கண் முன்வந்து களிநடனம் புரிவார்கள். 

ஆயினும் நேரம், பொருள் வசதி, உடல்நலம் இவற்றை அடிப்படையாகக் கொண்டே பக்தி வளரவேண்டி இருப்பதால், ஸ்தலங்களும் மூர்த்திகளும் பக்தனின் மனதில் நிழல் படம் மாதிரி ஓடி மறைந்துவிடுகின்றன.

ஆனால், சென்னை நகர மாந்தர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் பாக்கியசாலிகளே! காரணம், அவர்கள் இருக்கும் இடமாகிய சென்னையிலேயே அவரவரது தேவைக்கேற்ப பாடல் பெற்ற ஸ்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் சில ஸ்தலங்கள் இங்கே இடம் பெறுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவொற்றியூர்

தொண்டை நாட்டின் முப்பத்திரண்டு க்ஷேத்திரங்களில் திருவொற்றியூர் ஒன்றாகும். இத்தலத்தைப் பட்டினத்துப் பிள்ளையார் 'பூலோகத்திய சிவலோக’மாகும் என்று கூறியிருக்கிறார்.

இது ஆதிபுரி எனவும் பத்மபுரி எனவும் கூறப்பட்டு வந்திருக்கிறது. இப்பதியில் முனிவர் சாபத்துக்கும் அசுரர்களின் இம்சைக்கும் அஞ்சிய பஞ்ச தருக்கள் கடுந்தவம் செய்தன என்றும், சிவபெருமான் அவைகளின் தவத்துக்கு இரங்கி 'கற்பக விருட்சங்களாகிய நீங்கள் நம்மைத் தீண்டிப் பூசை செய்ய இயலாது. மகிழ மரமாகி, மானச பூஜை செய்து வாருங்கள். உங்கள் நிழலின் கீழ் வடிவுடை அம்பிகையுடன் காட்சியளிக்கிறோம்' என்று அருள்பாலித்தார்.

அருட்களஞ்சியம்

அதனால் இன்றும் 'மகிழடி சேவை’ என்னும் திருவிழா திருவொற்றியூரில் மிக விசேஷம் எனக் கருதப்படுகிறது. கோயில் கொண்டிருக்கும் பெருமான் பெயர் ஸ்ரீ தியாகேசர். சங்கர பகவத்பாதாள் இங்கே மந்திர யந்திர ஸ்தாபனம் அமைத்திருப்பது ஒரு விசேஷம்.

எரிமலை எதிரே வந்தது!

தாடகையைக் குறித்துப் பேசும்போதே லங்கேசனாகிய ராவணேசுவரனைக் குறித்தும் பிரஸ்தாபிக்கிறான் விசுவாமித்திரன். ராவண வதம்தானே ராமாயணத்தின் முக்கியமான செய்தி: அதற்காகத் தானே ராமன் பிறந்திருக்கிறான்! எனவே, அந்தப் பெரு நிகழ்ச்சியை நாம் மறக்கும்படி விடுவதேயில்லை நமது கவிஞன்.

'இந்த வளமான பிரதேசத்தையெல்லாம் கெடுத்துவிட்ட தாடகை என்னுடைய யாகத்தையும் கெடுக்கிறாள்!' என்று சொல்ல வந்த விசுவாமித்திரன் எவ்வளவு சாதுரியமாகப் பேச்சோடு பேச்சாய், 'இலங்கை அரச’னையும் ஞாபகப்படுத்துகிறான், பாருங்கள்:

இலங்கைஅர சன்பணி

அமைந்தொர்இடை யூறா,

விலங்கல்வலி கொண்(டு) எனது

வேள்விநலி கின்றாள்:

அலங்கல்முகி லே!அவளி இவ்

அங்கநிலம் எங்கும்

குலங்களொ(டு) அடங்கநனி

கொன்றுதிரி கின்றாள்!

ராவணனுடைய கட்டளையினாலேதான் விசுவா மித்திரனுடைய யாகத்தை அழிக்கிறாளாம் தாடகை. அந்தப் பிரதேசத்தை அப்படி அவள் அழித்ததும் ராவணன் பணியினால்தான் என்பது குறிப்பு.

'அந்த ராக்ஷஸி இன்னும் சில நாளில் தன் வயிற்றை உயிர் களுக்கெல்லாம் இடுகாடாக்கி விடுவாள்!' என்று சொல்லி விடு கிறான் முனிவன்.

இது கேட்ட ராமன் என்ன பதில் சொல்லுகிறான்?

'எங்குறைவ(து) இத்தொழில்

இயற்றுபவள்?' என்றான்,

சங்குறைக ரத்தொரு

தனிச்சிலைத ரித்தான்.

பூச்சூட்டியிருந்த தன் முடியைக் குலுக்கிக் கொண்டு, 'இப்பேர்ப்பட்ட தொழிலைச் செய்கிறவள் எங்கே யிருக்கிறாள்?' என்று கேட்கிறான் கோதண்டபாணி.

விசுவாமித்திரனோடு புறப்பட்டபோது தாயான கோசலையிடத்திலும் விடை பெற்றுக்கொண்டுதானே புறப்பட்டிருப்பான் ராமன்? அப்போது அந்தப் பெற்ற தாய் பூச்சூட்டி விட்டிருக் கலாமல்லவா?

அத்தகைய பூச் சூட்டிய தலையைக் குலுக்கிக் கொண்டு தான், 'அந்தச் சீமாட்டியின் தொழில் புரிந்துவிட்டது; ஜாகை எங்கே?' என்று கேட்டுவிட்டான். இப்படிக் கேட்ட ராமன் தசரத ராஜகுமாரன்தானா? விசுவாமித்திரனது ஸ்வீகார புத்திரன்தானா?

சங்குறைக ரத்தொரு

தனிச்சிலைத ரித்தான்

என்று எவ்வளவு பய பக்தி யோடு கம்பன் காட்டுகிறான் தெய்வத்தின் பயங்கர அதிகார முத்திரையோடு வந்திருக்கும் வீரனை!

அருட்களஞ்சியம்

இடது கையில் ஏற்கெனவே இருந்த சங்கைத் துறந்து வில்லைத் தரித்துக் கொண்டான் சாமானிய வீரனைப் போல என்கிறான், 'பரம பதநாதன்’ என்ற அந்தத் தெய்வ நிலை துறந்து மானுடச் சட்டையில் வந்த வீர மூர்த்தியை. துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனத் திற்காகச் செல்லும் ராமனை இப்படியும் அறிமுகப்படுத்துவது இந்த இதிகாசப் போக்கிற்கு ஒரு விசேஷ காம்பீர்யம் தருகிறது.

இப்படி இவர்கள் பேசிக்கொண்டே அந்தப் பாலைவனத்தில் முரட்டுக் குண்டாம் பாறைகளோடு கூடிய ஒரு குன்றுக்கு அருகே வந்தார்கள்.

'இந்த மலைதான் அவள் இருப்பது!' என்றான் முனிவன். சொல்லி வாய் மூடுவதற்கு முன்பே ஒரு கரியமலை எப்படியோ அந்தக் குன்றிலிருந்து விடுபட்டு நெருப்பைக் கக்கிக் கொண்டு எதிரே நடந்துவரத் தொடங்கியது: என்ன விபரீதம்! அந்த எரிமலைதான் தாடகை!

கங்கைத் தீம்புனல்

நாடன் கருத்தையும்,

மங்கைத் தீஅனை

யாளும் மனக்கொளா,

செங்கைச் சூலவெந்

தீயினைத் தீயதன்

வெங்கண்தீயொடு

மேற்செல வீசினாள்.

'’கங்கைத் தீம்புனல் நாடன்' என்று குளிர்ந்த அருளோடு கூடிய ராமனைக் குறிப்பிட்டு, அந்த நல்லருளோடு முற்றும் முரண்பட்ட கொடிய தாடகையை '’மங்கைத் தீ அனையாள்' என்று குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது. 'மங்கை வடிவம் கொண்ட தீ' என்று தாடகையைக் குறிப்பிடும் கவிஞன், 'அவள் கையிலும் தீ; கண்ணிலும் தீ!' என்கிறான். ஆயுதம் பிடித்துப் பிடித்துச் சிவந்திருக்கும் அந்தக் கையிலே, சூலாயுதம் தீயைப் போலவே ஜொலிக்கிறது. தீமை நிறைந்த அந்த உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்களும் கோபத்தால் சீறித் தீயாகவே ஜொலிக்கின்றன. தாடகையின் தோற்றம் முழுமையும் தீயைப் போலவே ஜொலிக்கிறதாம்.

மங்கை வடிவம் கொண்ட தீ, சூலாயுதம் என்ற தீயைத் தீய கண்களில் வீசும் கோபத் தீயிலே காய்ச்சி வீசுவதாய்க் கூறுவது, அந்தக் காட்சியை நம் உள்ளத்திலும் அப்படியே ஜொலிக்கச் செய்கிறது.

ராமன் அம்பைத் தொடுக்கிறான். அவளைக் கொல்வதற்காக அல்ல; தற்காப்புக்குத்தான்:

மாலும் அக்கணம்

வாளியைத் தொட்டதும்,

கோல விற்கால்

குனித்ததும், கண்டிலர்:

கால னைப்பறித்(து)

அக்கடி யாள்விட்ட

சூலம் அற்றன

துண்டங்கள் கண்டனர்.

ராமன் பாணத்தைத் தொட்டதையும், வில்லை வளைத்ததையும், ஒருவரும் பார்க்க வில்லையாம். தாடகை பார்க்கவில்லை என்று கவிஞன் சொல்லவில்லை. லட்சுமணனும் விசுவாமித்திரனும் கூடப் பார்க்க முடியவில்லையாம். தாடகை வீசின சூலம் அறுபட்ட துண்டங்களைத்தான் பார்த்தார்களாம். அவ்வளவு வேகமாக அந்தச் செயல்கள் நிகழ்ந்து விட்டன.

வில்லை வளைத்து அம்பைத் தொடுத்தான் என்று சொல்லாமல், பாணத்தைத் தொட்டு வில்லை வளைத்தான் என்று சொல்வது கவனிக்கத் தக்கது. அவ்வளவு படு வேகமாய்க் காரண காரியங்கள் நடந்து விட்டன என்பது குறிப்பு. அந்தக் கொடிய சூலத்தைத்தான், '’காலனைப் பறித்து அக்கொடியவள் விட்ட சூலம்' என்று சொல்வதைப் பாருங்கள். தாடகை இருக்கும் இடத்தில் யமனும் இருக்கத் தானே செய்வான்? அந்த யமனை அப்படியே இடம் விட்டுப் பறித்து எதிரி மேல் எறிந்து விட்டாளோ?  என்று தோன்றுகிறதாம் அந்தப் பயங்கரமான சூலத்தின் பயங்கரமான புறப்பாடு.

சூலம் துண்டு துண்டாய் விழவும் நிராயுத பாணி ஆக்கப்பட்டாள் அரக்கி. எனினும் அவளுடைய தீய அறிவு சும்மா இருக்குமா?

அல்லின் மாரி

அனைய நிறத்தவள்,

சொல்லும் மாத்திரை

யில்கடல் தூர்ப்பதோர்

கல்லின் மாரியைக்

கைவகுத் தாள்: அது

வில்லின் மாரியின்

வீரன் விலக்கினான்.

'’இருளே மழையாகப் பொழிகிறது!' என்று சொல்லும்படி நின்ற தாடகை, கற்களை மழையாகப் பொழிந்து விட்டாளாம். அந்தக் கல் மழையை ராமன்வில்  மழையாகிய பாணங்களால் தடுத்து விட்டான்.

இனிமேல்தான் ராமன் தாடகை யைக் கொல்ல வேணுமென்று பாணத்தைப் பிரயோகிக்கிறான். சூலத்தை வீசிய போதும் கொல்ல நினையாதவன், அவன் கல்மழை பொழிந்தபோது, '’முனி சிரேஷ்டருக்கும் ஆபத்து விளையக் கூடுமே!' என்று எண்ணி, அரக்கியைக் கொல்லப் பாணம் போடுகிறான்.

நெருப்பைக் கக்கிக் கொண்டு போகும் அந்த ராம பாணத்தின் கடிய வேகத்திற்கும், சுட்டெரிக்கும் தன்மைக்கும் என்ன உபமானம் கொடுக்கிறான் கவிஞன்!

சொல்ஒக்கும் கடிய வேகச்

சுடுசரம், கரிய செம்மல்,

அல்ஒக்கும் நிறத்தி னாள்மேல்

விடுதலும், வயிரக் குன்றக்

கல்ஒக்கும் நெஞ்சில் தங்கா(து)

அப்புறம் கழன்று, கல்லாப்

புல்லர்க்கு நல்லோர் சொன்ன

பொருள்எனப் போயிற் றன்றே!

கல்லாத கீழ் மக்களுக்கு நல்லவர்கள் சொன்ன பொருள் போலே போய் விட்டதாம் ராமபாணமும், தாடகை நெஞ்சிலே தாங்காமல், அந்த நெஞ்சை, '’வயிரக் குன்றக் கல் ஒக்கும் நெஞ்சு' என்று வர்ணிக்கிறான் கவிஞன்.

விசுவாமித்திரனுக்கு ஆபத்து வரக் கூடுமே என்று தோன்றியது தான் தாமசம்; அந்த முனிவனது 'கொல்’ என்ற அந்தச் சொல்லே இப்போது இவ்வளவு வேகமாகவும் உக்கிரமாகவும் தன்னை நிறைவேற்றிக் கொண்டது என்று சொல்லும்படி, முடிந்து விடுகிறது தாடகை  வதம்.

** 25.6.44, 16.7.44 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...

திருவல்லிக்கேணி

வட மொழியில் கைரவிணீ என்பது தமிழில் அல்லி என்று பொருள் கொண்டு திருஅல்லிக்கேணியாயிற்று. இத்தலத்தை பிருந்தாரண்யம் என்றும் அழைக்கின்றனர். இத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஐந்து எம்பெருமான்களையும் திருமங்கை யாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். நூற்றியெட்டு வைஷ்ணவத் திருப்பதிகளில் இதுவும் ஒன்று. பெருமாள் தம் குடும்பத்தோடு சேர்ந்து இருந்து தரிசனம் தரும் சந்நிதி இது ஒன்றுதான். மூலவரை ஸ்ரீ வேங்கடகிருஷ்ணன் என்றும், உற்ஸவரை ஸ்ரீ பார்த்தசாரதி என்றும் அழைக்கிறார்கள். வியாச மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பெற்று. ஆத்ரேய மகரிஷியால் ஆராதிக்கப்பெற்றது இந்தத் தெய்வம் என்றால், தலத்தின் பெருமை சொல்லாமலே விளங்கும்.

திருமயிலை

அருட்களஞ்சியம்

திருமயிலை என்றும், மயிலாப்பூர் என்றும் வழங்கும் இத்தலத் தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் லிங்க வடிவமான மூர்த்தியின் பெயர் கபாலீச்வரர். ஈசனை இங்கே பிரதிஷ்டை செய்தவர் பிரும்மா. பிரும்மாவின் பாபத்தைப் போக்கியதால் கபாலீச்வரர் என்ற நாமம் நிலைத்தது. இங்கேதான் அம்பிகை மயில் உருக்கொண்டு, சிவ பெருமானைப் பூசித்து சுய ரூபம் பெற்றாள். கற்பகாம்பிகை என்று பெயர் கொண்டு கற்பகத் தருபோல் பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் அருளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். திருஞான சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தர மூர்த்தி சுவாமிகள் முதலிய சமய குரவர்களால் பாடப் பெற்ற தலம் இது. சர்ப்பம் தீண்டி இறந்து போன பூம்பாவையை, அஸ்தி உருவிலிருந்து உயிர் பெற்று எழும்படி சம்பந்தப் பெருமான் ஈசனைப் பாட, அவள் உருப்பெற்றாள் என்று ஒரு வரலாறு கூறுகிறது. திருமயிலையில் ஏழு தீர்த்தங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானது கபாலீச்வரர் கோயிலின் மேல் திசையிலுள்ள சக்தி கங்கை. இத்தலத்துக்கு விருட்சம் புன்னை மரம்.

கங்காதீஸ்வரர் கோயில்

சென்னை புரசைவாக்கத்தில் கோயில் கொண்டு சிவலிங்க வடிவாய், ஷாட்குண்யமாய் எழுந்தருளியிருக்கும் கங்காதீஸ்வரரை ஹனுமான் ஆராதித்து வழிபட்டிருப்பதாக ஓர் ஐதீகம் இருக்கிறது. பலா மரம் இத்தலத்துக்கு விருட்சம். அம்பிகையின் பெயர் பங்கஜாட்சி. அருளும் அழகும் வழிந்தோடும் வதனம்.

** 1957 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இருந்து...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism