'வீட்டுக்கு வரும் மருமகளை விளக்கேற்ற வரும் மகாலட்சுமியாக போற்றும் பண்பாடு நம்முடையது. பெண்களும், தெய்வமும் வேறு வேறு அல்ல. பெண்களே இப்பூலோகத்தின் அருட்பெருஞ் ஜோதி' என சிறப்பு விருந்தினர் கவிஞர் அண்ணா சிங்காரவேலு பேசத் துவங்க, விளக்கு பூஜைக்கு வந்திருந்த வாசகியர் அனைவரும் உற்சாகத்துடன் கைதட்டி ஆமோதித்தார்கள். சக்தி விகடன் நடத்திய 170வது திருவிளக்கு பூஜை, கடந்த 28.7.15 அன்று கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

'கோயில் நகரம் என்று போற்றப்படும் புண்ணிய பூமி கும்பகோணம். இந்தத் திருத்தலத்தில் நடைபெறும் இந்த விளக்குபூஜை மாபெரும் வேள்விக்குச் சமம். பெண்கள் முன்னின்று நடத்தும் ஒவ்வொரு பூஜைக்கும் தனி சக்தி உண்டு. இங்கே அந்த சக்தி எல்லாம் ஒன்றுசேர்ந்து பெருஞ்ஜோதி யாய் ஒளிர, மகா சக்தியே இறங்கி வந்து அருள் செய்வாள். உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் சர்வ மங்கலங்களும் நிறைந்திருக்கும்; லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். சகலவிதமான பிரார்த்தனைகளும் குறையின்றி நிறைவேறும்.''

விளக்குபூஜையின் மகத்துவம் குறித்து கவிஞர் அண்ணா சிங்காரவேலு பேசியதைக் கேட்டு உள்வாங்கிக்கொண்ட வாசகியர், ஆத்மார்த்தமாக பூஜையில் ஈடுபட்டார்கள். சர்வாலங்கார ரூபிணியாய் அருட்கடாட்சித்த மங்களாம்பிகை திருமுன், மிகச் சிறப்பாக திருவிளக்கு பூஜையை நடத்திவைத்தார் விக்னேஷ் குருக்கள். சிவத் தொண்டர்களான சிவகுமார், வைத்தியநாதன்,

அம்பிதாசன் ஆகியோர் பூஜை சிறப்புடன் நடைபெற உதவினார்கள்.

'என் மகளுக்கு திருமணம் தடைப்பட்டுக்கிட்டே வருது. அம்பாள் அருளால் அவளுக்கு சீக்கிரமா நல்ல வரன் அமையணும். நீங்க எல்லாரும் அவளுக்காக வும் வேண்டிக்கோங்க. இந்த ஒரு கடமை முடிஞ்சிருச்சுனா, அதுக்கப்புறம் என் கடன் இறைப்பணி செய்து கிடப்பதுதான்'' என்று குரல்

தழுதழுக்கக் கேட்டுக்கொண்டார் வாசகி விஜயலட்சுமி. சர்வமங்கள நாயகி அல்லவா மங்களாம்பிகை. இவர் மகளுக்கு நிச்சயம் மாங்கல்ய வரம் தருவாள். அனைவருக்கும் மங்கலம் அருள்வாள்!

படங்கள்: கே.குணசீலன்