'நான் உனக்கு சித்தப்பா முறையாகணும், தெரிஞ்சுக்க...' என்று ஒரு திருமண நிகழ்வில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் அந்தப் பெரியவர்.

'எப்படி?' என்றேன்.

'விளக்கமாவே சொல்றேன்...' என்றவர், பேனாவை என் சட்டைப் பையிலிருந்து அனுமதியின்றி எடுத்து, ஒரு பேப்பர் கொடு என்று கேட்டு வாங்கி, குடும்ப மரம் வரைய ஆரம்பித்துவிட்டார். அதாவது திணீனீவீறீஹ் ஜிக்ஷீமீமீ! என் அப்பாவுக்கு அவர் தம்பி முறை என்பதை ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கலுக்கு நடுவே கஷ்டப்பட்டுப் புரிந்துகொண்டேன். இப்போதெல்லாம் சொந்த சித்தப்பாவைவிட நெருக்கமாகிவிட்டார் இந்த ஒன்றுவிட்ட இல்லையில்லை ஏழெட்டு விட்ட சித்தப்பா. அடிக்கடி என் வீட்டுக்கு வந்து அரட்டையடித்துவிட்டு, மறக்காமல் லெமன் டீ கேட்டு வாங்கிக் குடித்துவிட்டுச் செல்கிறார் தெனாவட்டு, மமதை, கர்வம், தலைக்கனம் இவற்றின் மொத்த உருவமான மேற்படிசித்தப்பா.

'வெறும் பய... என் கால் தூசிக்குப் பெறுவானா அவன்?' என்று எவரையும் இடது கை விரல்களால் ஒதுக்கித் தள்ளிவிடுவார்.

'இன்னிக்கு வந்த மானேஜர் இந்த ஆட்டம் போடறானே... இவனை மாதிரி எத்தனை பேரைப் பாத்திருப்பேன்! முன்னாடி இருந்த மானேஜரின் கால் தூசிக்குச் சமமாகமாட்டான்...' என்று கால் தூசியைத் தொடாமல் அவருக்குப் பேசவே வராது.

'கால் தூசி...’ என்று சித்தப்பா சொல்லும்போதெல்லாம் எனக்கு பகவான் கிருஷ்ணர்தான் நினைவுக்கு வருவார்.

ஒருமுறை, துவாரகையில் இருந்தபோது கிருஷ்ணருக்குக் கடுமையான தலைவலி. அனைவரும் பதறிவிட்டார்கள்.

'உண்மையான பக்தன் ஒருவனின் கால் தூசுகளை நீரில் கலந்து எனக்குக் கொடுத்தால், என் தலைவலி குறையும்!' என்றார் கிருஷ்ணர். சுற்றிலும் இருந்த பக்தர்கள் அனைவரும் இதைக் கேட்டு இன்னும் அதிகமாக பதறிப்போனார்கள். 'அபசாரம்! எங்கள் பாதத் தூசுகளை பகவானுக்குக் கொடுப்பதா?’ என்று அனைவரும் பின்வாங்கிவிட்டார்கள்.

எல்லோரும் கோகுலத்துக்கு ஓடினார்கள். கோபிகை களிடம் கிருஷ்ணனின் தலைவலி பற்றி விவரித்துவிட்டு, 'உங்களில் யாராவது உண்மையான பக்தியுடன் உங்கள் கால் தூசுகளைக் கொடுத்தால், அவற்றைக் கிருஷ்ணரிடம் எடுத்துச் செல்கிறோம்' என்றார்கள். அங்கிருந்த 14 லட்சம் கோபிகைகளும் தங்கள் கால்களைச் சுரண்டி தூசுகளைத் திரட்டி ஒரு பையில் போட்டுத் தர, அது துவாரகைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

''உங்கள் பக்தியை நான் அறிவேன். கோபிகைகளின் பக்தியும் எனக்குத் தெரியும். நான் சொன்னதைச் செய்தால், அது பாவம் என்று நினைத்தீர்கள் நீங்கள். அதன் பின்விளைவை யோசித்தீர்கள். கோபிகைகளுக்கும் இது தெரியும். ஆனாலும், என் தலைவலி தணிய வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது' என்றார் கிருஷ்ணர், உண்மையான பக்தனின் இலக்கணத்தை விளக்கும் வகையில்!

என் தூரத்துச் சித்தப்பாவை அடுத்த முறை சந்திக்கும்போது, இந்தக் கதையை அவரிடம் சொல்லவிருக்கிறேன். அப்படியாவது 'கால் தூசி’ கர்வத்தை விட்டொழிக்கிறாரா என்று பார்ப்போம்!