Published:Updated:

சனிப்பெயர்ச்சி... விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

சனிப்பெயர்ச்சி... விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017
சனிப்பெயர்ச்சி... விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

சனிப்பெயர்ச்சி... விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

ந்த வருடம் (2017)  டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார், சனீஸ்வர பகவான். அவர் 26.12.20 வரை தனுசு ராசியிலிருந்து பலன்களைத் தரவுள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து, 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். 

விருச்சிக ராசி அன்பர்களே! உங்களுடைய ராசிநாதன் செவ்வாய்க்கு பகை கிரகமான சனிபகவான், உங்கள் ராசியிலேயே கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்துகொண்டு உங்களுக்கு நிறைய கஷ்டங்களைத் தந்து கொண்டிருந்தார். அதற்குமுன்பு இருந்த இரண்டரை ஆண்டுகளும்  உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12 -ம் இடத்தில் இருந்துகொண்டு வீண் விரயச்செலவுகளை தந்து அலைச்சலையும் கொடுத்துக்கொண்டு இருந்தார். 

இப்போது பாதச்சனியாக இருந்து  கடைசி இரண்டரை ஆண்டுகளுக்குப் பலன்களைத் தரப் போகிறார். ஏழரைச்சனியைப் பொறுத்தவரை, நீங்கள் 75 சதவிகித துன்பத்தை அனுபவித்து விட்டீர்கள். இனி சனிபகவானின் பாதிப்புகள் ஓரளவு குறையும்.

இத்தனை நாட்களாக ஜன்மச் சனியாக இருந்து, உங்களுக்கு உபாதைகள் கொடுத்து வந்தார்.  'உடல் நலமில்லை' என்று டாக்டரிடம் போயிருப்பீர்கள். அங்குபோய் எல்லா டெஸ்டுகளும் எடுத்துப் பார்த்தால், அதில் 'எந்தவிதக் குறைபாடும் இல்லை' என ரிசல்ட் வரும். இப்படியாக உங்கள் தூக்கத்தையே கெடுத்து வந்தார். அந்த நிலைமை எல்லாம் இனி மாறும். 

குரு பகவானுடைய வீட்டில், சனி பகவான் வந்து உட்காருவதால் இத்தனை நாள்களாக தடைப்பட்டு வந்த காரியங்கள், தடைகள் நீங்கி இனி வேகமாக நடைபெறத் தொடங்கும். உங்களின் உடல் ஆரோக்கியம் கூடும். மனதில் தைரியமும் உற்சாகமும் பிறக்கும். எதிர்த்தவர்கள் எல்லாம் அடங்குவார்கள். இத்தனை நாள்களாகப் பார்த்தும் பார்க்காமலும் போனவர்களெல்லாம் அவர்களாகவே வந்து பழகுவார்கள். 

தாயார் ஆரோக்கியம் சீராகும். தாயார் வழியில் சொத்துகள் வந்து சேரும். வீடு, மனை வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். அதனால் கடன் பெற வேண்டி வரும். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். சுப செலவுகள் செய்யவேண்டி வரும். 
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வாடகைக் கட்டடத்தில் வியாபாரம் செய்துவந்தவர்கள், சொந்தமாகக் கட்டடம் வாங்கும்நிலை ஏற்படும். மற்றவர்களிடம் பேசும்போது மிகுந்த கவனத்துடன் பேசுவது நல்லது.

உங்களுடைய வாக்குஸ்தானமான 2 - ம் வீடான தனுசில்  சனி பகவான் இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். ஆனால், பூச்சிகளின் தொல்லையும் அதிகமிருக்கும். உரிய முன்னேற்பாடுகளைச் செய்துகொள்வது நல்லது. 
மாணவ மாணவிகள்  படிப்பில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக, கணிதம் மற்றும் வேதியியல்  பாடங்களில் கவனமாக இருந்து படிக்கவேண்டும்.


( விருச்சிக ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சியின் விரிவான பலன்களை அறிய இந்த வீடியோ லிங்கை கிளிக் செய்யவும்.)

விருச்சிக ராசிக்காரர்கள்,  திருக்கடையூர் ஶ்ரீஅமிர்தகடேஸ்வரரையும் அபிராமியையும் வணங்கி வந்தால், சிறப்பான பலன்களைப் பெறலாம்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து, காரைக்கால் செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, திருக்கடையூர். இங்கிருக்கும் ஶ்ரீஅமிர்தகடேஸ்வரரும், அன்னை அபிராமியையும் வழிபட,  ஆண்டு முழுவதும் மக்கள் பல பகுதிகளிலிருந்தும் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், ஆயுள்  ஹோமம் ஆகியவற்றுக்காக பக்தர்கள் வருகிறார்கள். 

அகிலத்தின் அன்னையாய் அருளாட்சி புரியும் ஆதிபராசக்திக்குத்தான் எத்தனை திருநாமங்கள்! எத்தனை திருத்தலங்கள்! அத்தனை தலங்களிலும் தனிச்சிறப்பு கொண்டதாகத் திகழ்கிறது இந்தத் திருத்தலம். 
 

தல புராணம்:
முன்னொரு காலத்தில் அமிர்தம் வேண்டி பாற்கடல் கடைந்ததும், பிறகு அமிர்தம் வெளி வந்ததும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்த அமிர்தத்தை தேவர்கள் பருக, ஒரு புனிதமான இடம் வேண்டுமே! அப்போது சிவபெருமானால் புனிதமான இடமாக அடையாளம் காட்டப்பட்ட திருத்தலம்தான் திருக்கடவூர் என்னும் திருக்கடையூர் திருத்தலம்.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும், மதியம் 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும்  கோயில் திறந்திருக்கும். 

  இதற்கு முன் வெளியான மற்ற ராசிக்காரர்கள், தங்கள் பலன்களை அறிந்துகொள்ள...


 

அடுத்த கட்டுரைக்கு