Published:Updated:

நாரதர் உலா !

‘ வேதபுரீஸ்வரரே வழிகாட்ட வேண்டும் !’

நாரதர் உலா !

‘ வேதபுரீஸ்வரரே வழிகாட்ட வேண்டும் !’

Published:Updated:

தோ அவசரமாக ஸ்ரீ மகாவிஷ்ணுவைத் தரிசிக்கப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற நாரதர் இன்னும் வரவில்லையே என்று தவித்தபடி வாசலையே நாம் பார்த்துக் கொண்டிருக்க, நம் வாட்ஸப்பில், 'வைகுண்டத்தில் இருந்து புறப்பட்டுவிட்டேன். இன்னும் சற்று நேரத்தில் அங்கே இருப்பேன்’ என்று நாரதரிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்து விழுந்தது. 

சொன்னபடியே சற்றைக்கெல்லாம் நம் எதிரே பிரசன்னமான நாரதரை தாமதத்துக் காகச் செல்லமாகக் கடிந்துகொண்டோம். அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் வந்த வேகத்திலேயே ஒரு கேள்வியை எழுப்பினார்.

''அருகருகில் இருந்தாலும் ஒரு கோயில் பிரசித்தி பெற்றிருப்பதைப் போல் மற்றொரு கோயில் அவ்வளவாகப் பிரபலம் அடையா மல் இருப்பது சரியா?''

''நீர் என்ன சொல்ல வருகிறீர்..?'' என்றோம்.

''சென்றமுறை நான் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, அப்படியே பக்கத்தில் வேதபுரீஸ்வரர் கோயிலுக்கும் சென்று வந்தேன் அல்லவா? அந்தக் கோயில்தான் பக்தர்கள் மத்தியில் அவ்வள வாக பிரபலம் அடையாமல் இருக்கிறது.''

நாரதர் உலா !

''அடடா, அது மிகவும் புராதனமான கோயிலாயிற்றே?''

''ஆமாம். திருவேற்காட்டுக்கு வந்து கருமாரி அம்மனை தரிசிக்கும் பக்தர்கள், அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள வேத புரீஸ்வரர் கோயிலுக்குச் செல்ல சரியான பேருந்து வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். வாகனங்களில் வருபவர்களுக்கோ வேத புரீஸ்வரர் கோயிலுக்கு எப்படிச் செல்வது என்ற குழப்பம். சரியான அறிவிப்புப் பலகை இல்லாததுதான் காரணம்!''

''கோயில் எப்படி இருக்கிறது? அங்கேயாவது பக்தர்களுக்கு வசதியாக சாமி தரிசனம் செய்ய முடிகின்றதா?''

''கோயில் வாசலிலேயே பக்தர்களுக்கு பிரச்னைகள் ஆரம்பமாகி விடுகின்றது. காலணிகளைப் பாதுகாக்கவோ, வாகனங் களை நிறுத்தவோ எந்த வசதியும் இல்லை. அதே நிலைமைதான் கழிவறைக்கும். சரியான பராமரிப்பு இல்லாமல் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. பெண் பக்தர்கள் படும் அவஸ்தை சொல்லி முடியாது. அந்த வேத புரீஸ்வரரே கிருபை செய்யவேண்டும்.''

''தமிழக அரசின் சார்பில் அங்கே தினமும் ஐம்பது நபர்களுக்கு அன்னதானம் நடைபெறு வதாகச் சொல்கிறார்களே..?''

''அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்? அன்னதானக் கட்டடம் கட்டி ஒரு வருஷத் துக்கு மேல் ஆகியும் ஏனோ திறக்கப்படவே இல்லை. மண்டபத்துக்கு வெளியில்தான் அன்னதானம் நடைபெறுகிறது. சரி, அன்ன தானமாவது முறையாக நடைபெறுகிறதா என்றால் அதுவும் இல்லை. இலையில் ஒருமுறைதான் சாதம் வைக்கப்படுகிறது. அதிலேயேதான் சாம்பார், ரசம், மோர் எல்லாம் முடித்துக் கொள்ள வேண்டும். அடுத்த முறை சாதம் கேட்டால் வைப்பது இல்லை. அதுமட்டுமல்ல, கொஞ்சம்பேர் சாப்பிட்டதுமே இலை தீர்ந்து விட்டதாகவும் பக்தர்களையே வாங்கி வரும் படியாகவும் சொல்கிறார்கள். இதில் வெறுத்துப்போன பக்தர்கள், பசியுடன் கிளம்பிச் சென்று விடுகிறார்கள். மகாபாவம்! சாப்பிட்டு முடித்த பக்தர்களுக்கு விக்கல் ஏற்பட்டால் தொலைந் தார்கள். குடிநீர் வசதியும் இல்லை. குடிநீர் வழங்கும் குழாயில் சொட்டு நீர்கூட வருவதில்லை. கை அலம்பும் குழாயில் வரும் தண்ணீரைத்தான் குடிக்க வேண்டுமாம்!''

''அடக் கண்றாவியே! இதுபற்றி கோயில் நிர்வாகத்திடம் பேசினீர்களா?''

நாரதர் உலா !

''இரண்டு கோயில்களில் உள்ள பிரச்னை கள் குறித்தும் பேசினேன். முதலில் கருமாரியம்மன் கோயிலைப் பற்றி சொல்லி விடுகிறேன்.

திருவேற்காடு கோயிலின் இணை ஆணையர் (பொறுப்பு) காவேரியை நேரில் சந்திக்க முடியாததால் செல்போனில் தொடர்பு கொண்டுபேசினேன். முதலில், கருமாரியம்மன் கோயிலில் வாகனம் நிறுத்தும் இடம் பற்றித்தான் பேசினார். 'கோயிலுக்குச் சற்றுத் தள்ளி வாகனம் நிறுத்துமிடம் கடந்த பத்து வருஷமா செயல்பட்டு வருது. ஆனா, டூ வீலர்ல வர்ற பக்தர்கள்தான் அப்படி நிறுத்தறாங்க. இதை போலீஸும் நகராட்சி நிர்வாகமும்தான் முறைப்படுத்தணும் அடுத்து காலணிகள் பாதுகாக்கும் இடத்துல நாங்க தினமும்தான் டோக்கன் கொடுத்துட்டு வர்றோம். அங்கே சூட்கேஸ், சைக்கிள் வைக் கிறாங்களான்னு செக் பண்றேன். அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்கிறேன்.’ என்றார்.''

''மொட்டை போடும் இடத்தில் காசு வசூல் நடப்பதாகச் சொன்னீர்களே அதுபற்றி விசாரித்தீர்களா?''

''கேட்டேன். அதற்கு அவர் 'நீங்கள் சொல் லுவது போன்ற குற்றச்சாட்டுகள் எனக்கும் வந்தது. நான் நேரில் போய் அவர்களை எச்சரித்துவிட்டு வந்திருக்கிறேன். பக்தர்கள் கோயிலுக்குச் செலுத்தும் பத்து ரூபாய் கட்ட ணமே போதுமானது. பிளேடு, மொட்டை அடிப்பவர்களுக்கான கட்டணம் எல்லாமே அதிலேயே அடங்கிவிடுகிறது. எனவே பக்தர்கள் யாரும் கூடுதலாக பணம் தரத் தேவையில்லை.’' என்றார்.

''தொடர்ந்து வேதபுரீஸ்வரர் கோயில் பற்றிய விஷயத்துக்கு அவரே வந்தார். வேத புரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் காலணிகளை வைத்துச் செல்வதற்காக இனிமேல்தான் ஷெட் கட்ட இருப்பதாகத் தெரிவித்தார். வாகன நிறுத்தத்தை நகராட்சி நிர்வாகம்தான் செய்யவேண்டும் என்று கூறியவரிடம் கழிப்பறைப் பக்கம் புதர் மண்டி இருப்பதைப் பற்றிக் கேட்டோம்.''

நாரதர் உலா !

''என்ன சொன்னார்?''

''அந்தக் கழிப்பறையை உபயதாரர் ஒருவர் மூலமாக புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்தார். அன்னதான கட்டடம் பற்றி கேட்டபோது, தயாராக இருப்பதாகவும் அரசு அறிவிப்பு கிடைத்ததும் திறக்கப்பட்டு விடும் என்றார். தற்போது, கருமாரியம்மன் கோயிலில்தான் இந்த கோயி லுக்கும் சேர்த்து மதிய உணவு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அன்னதான கட்டடம் திறந்ததும் இங்கேயே உணவு சமைக்கப்பட்டால், அன்னதானம் வழங்குவ தில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப் பட்டுவிடும் என்றும் கூறினார். மேலும், குடிநீர் பிரச்னை எதுவும் அங்கே இல்லை என்றும் அப்படி இருந்தால் விரைவில் சரி செய்துவிடுவதாகவும் சொன்னவர், பேருந்து வசதிகளைப் பொறுத்தவரை போக்குவரத்துக் கழகம்தான் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார்'' என்று நாரதர் முடிக்கவும், அவருக்கு வாட்ஸப்பில் ஒரு தகவல் வரவும் சரியாக இருக்கவே, ''மதுரைப் பக்கமிருந்து ஒரு வாசகர் நமக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்தப் பக்கம் உள்ள கோயிலுக்கு நம்மை அழைத்திருக்கிறார். போய்ப் பார்த்து வருகிறேன்'' என்றவர் நம்முடைய பதிலை எதிர்பார்க்காமலேயே அந்தர்தியானமானார்.

படங்கள்: தே.அசோக்குமார்

நாரதர் உலா !