தொடர்கள்
Published:Updated:

ஜன்மங்களைக் கடைத்தேற்றும் ஜன்மாஷ்டமி

கிருஷ்ண கிருஷ்ணா !பானுஸ்வாமி மகராஜ்

டவுளின் இருப்பைப் பற்றியும், அவருடைய அடையாளம் எது என்பது பற்றியும் காலம் காலமாகவே சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நம்மிடையே நிலவி வருகின்றன. நம்முடைய வேதங்கள் மற்றும் புராணங்களை நம்பிக்கையுடன் நாம் ஏற்றுக்கொள்ளும்போது இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் உரிய தீர்வு நமக்குக் கிடைக்கப் பெறுகின்றது. 

ஜன்மங்களைக் கடைத்தேற்றும் ஜன்மாஷ்டமி

என்ன தீர்வு?

கடவுள் ஒருவர்தான், அவரே எல்லாவிதமான சக்திகளுக்கும் ஆற்றல்களுக்கும் இருப்பிடமாகத் திகழ்கிறார் என்ற மகத்தான உண்மைதான் அந்தத் தீர்வு.

கடவுள் என்பவர் ஒருவராக இருந்தாலும்கூட, அவரே தன்னைப் பல்வேறு தோற்றங்களில் வெளிப்படுத்திக் கொள்ளவும் செய்கிறார். அதை விளக்கும் வகையிலேயே அவர் பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். உதாரணமாக, மகாவிஷ்ணு எடுத்த மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் போன்ற பத்து அவதாரங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல லாம். இந்த அவதாரங்களில் மிகச் சிறந்த அவதாரமாக, எல்லா ஜீவன்களுக்கும் மிகவும் நெருங்கியவனாகவும், அனைவருடைய அன்புக்கும் உரியவனாகவும் பாகவத புராணம் குறிப்பிடுவது ஸ்ரீ கிருஷ்ணனைத்தான். அதன்பொருட்டே இன்றைய மனிதர்களுக்கு உரிய, அவர்களால் வழிபடப் பெறும் தெய்வமாக ஸ்ரீ கிருஷ்ணர் திகழ்கிறார். இதைத்தான், ''எல்லாவற்றையும் என்னிடம் அர்ப்பணித்து விட்டு, என்னையே சரண் அடைவாய்!’ என்று கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசம் செய்திருக்கிறார்.

ஜன்மங்களைக் கடைத்தேற்றும் ஜன்மாஷ்டமி

அஷ்டமி திதியை எல்லோரும் கொண்டாடும் வகையிலும், தேய்பிறைச் சந்திரன் மகிழும் வகையிலும் ரோகிணி நட்சத்திரம் கூடிய அஷ்டமி திதியில் தன்னை ஒரு குழந்தையாக மாற்றிக்கொண்டு அவதரித்தார் ஸ்ரீ கிருஷ்ணர். முடிவே இல்லாதவரும் பிறப்பும் இறப்பும் இல்லாதவருமாகிய அந்தப் பரம்பொருளே, தன்னைப் பெற்றவர்களை மட்டுமல்லாமல், காலம் காலமாக உலக மக்களை மகிழ்விக்கவும், அவர்களுடைய ஜன்மங்களைக் கடைத்தேற்றவும் தன்னை ஒரு குழந்தையாக மாற்றிக்கொண்டு இந்த உலகத்தில் தோன்றினார். இந்த அவதாரத்தில்தான், வியக்கத்தக்க பல லீலைகளை அவர் புரிந்திருக்கிறார். யசோதையினால் உரலில் கட்டப்பட்டது, பூதனையிடம் நச்சுப் பால் அருந்தியது, காளிங்கனின் தலையில் நர்த்தனம் ஆடியது என கிருஷ்ணரின் லீலைகள்தான் எத்தனை எத்தனை?!

ஜன்மங்களைக் கடைத்தேற்றும் ஜன்மாஷ்டமி

ஒரு குழந்தையாக அவருடைய இந்த லீலைகள் எல்லாம் பலரையும் மகிழ்விக்கும்படியாக அமைந்திருந்தன. இந்த லீலைகள்தான் எல்லா காலத்திலும் மக்கள் ஸ்ரீ கிருஷ்ணனை நேசிக்கவும், அவனையே எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கவும் செய்கின்றன என்றால், அது முற்றிலும் உண்மைதான். இப்போதும்கூட ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள் எல்லாம் பாடல்களாகப் பாடப்படுவதுடன், நாட்டிய நாடகங்களாகவும் நடத்தப்பெற்று வருகின்றன.

ஜன்மங்களைக் கடைத்தேற்றும் ஜன்மாஷ்டமி

கிருஷ்ணருடைய இந்த லீலைகளை எல்லாம் நினைவுகூரவும், நாம் ஆன்மிக சாதனையில் ஈடுபட்டு நம்முடைய ஜன்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளவும் புண்ணிய ஜன்மாஷ்டமியை கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்வோம்!

இஸ்கான் மையத்தில் ஜன்மாஷ்டமி...

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை அக்கரை பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில், வரும் 5ம் தேதி ஜன்மாஷ்டமியை முன்னிட்டு காலை முதல் விசேஷ தரிசனமும், மாலை 7:30 மணி முதல் நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள், பானு ஸ்வாமி மகராஜின் சொற்பொழிவு, அபிஷேகம் அலங்காரம், ஆராதனை, போன்றவையும் நடைபெற உள்ளன. விழாவில், நிருத்யோதயா தலைவர் பத்மபூஷண் பத்மா சுப்ரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருக்கிறார்.

ஜன்மங்களைக் கடைத்தேற்றும் ஜன்மாஷ்டமி

மறுநாள், அகில உலக ஸ்ரீ கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நிறுவனரான ஸ்ரீலஸ்ரீ பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகளின் குருபூஜை விழாவும் நடைபெறவுள்ளது.