Published:Updated:

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்

Published:Updated:

தென்னகத்தில் சூரிய வழிபாடு! 

பாரத பூமியில் சூரிய வழிபாடு மிக புராதனமானது. சூரிய வழிபாடு நம் பாரதத்தில் கிறிஸ்துவ சகாப்தத்துக்கு பல நூறு ஆண்டு களுக்கு முன்னரே பரவி பரிமளித்தது. தென் பாரதத்தை விட, வட பாரதத்திலேயே ஆதிகாலம் முதல் சூரிய வழிபாடு பிரபலமாக இருந்துவந்திருக்கிறது. புகழ் பெற்ற பாஸ்கர ஸ்தோத்திரங்களான கலிங்கத்தில் உள்ள கோனார்க், குஜராத்தில் உள்ள மெதேரா மற்றும் சிரோஹா, ஜயபுரி, மோட்சலிங்கம், உதயபுரி, முல்டான் ஆகியவை வடக்கேயே உள்ளன.

சூரிய வழிபாடு வட பாரதத்தில் சிறந்து திகழ்ந்ததற்கு ஒரு காரணம் உண்டு. சூரிய தேவன் யுத்த பூமியில் வெற்றியை அளிக்கும் யுத்த தேவனாகவும் வழிபடப் பெற்றிருக்கிறான். வட இந்தியா, அதன் நீண்ட சரித்திரத்தில் அடிக்கடி அந்நிய ஆக்கிரமிப்புக்கும், மாற்றாரின் வஞ்சக சதிகளுக்கும் ஆளாகியிருக்கிறது. போர் நிகழும் போதும் நாடாண்ட மன்னர்கள் வெற்றி தந்து, தாயகத்தைக் காத்தருளும்படி, அருணனையே வேண்டியிருக்கின்றனர். இதனை மெய்ப்பிப்பது போன்று, அலெக்ஸாண்டரை எதிர்த்து போர் புரிந்த இந்திய மன்னன், போரஸ் என்பான், யுத்த பூமியில் சூரிய விக்கிரகம் ஒன்றை வைத்து வழிபட்டு பின்னரே போரைத் துவங்கியதாக வரலாற்று ஆசிரியர் ஒருவர் எழுதியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ் மண்டலமும் பன்னெடுங்காலமாக ஆதித்தி யனை வழிபட்டு வருகின்றது. தமிழ் நாட்டு ஒவ்வொரு வகை நிலத்துக்கும் ஒவ்வொரு தெய்வம் உண்டு என்பதை இலக்கிய வாயிலாக அறிவோம். பாலை நிலத்துக்கு என்று தனி தெய்வத்தை தொல்காப்பிய பெருநூல் குறிப்பிடவில்லை. ஆயினும்,

அருட்களஞ்சியம்

பகவதியையும் ஆதித்யனையும் தெய்வம் என்று வேண்டுவர்' என இறையனார் அகப் பொருள் உரைகாரர் கூறுகிறார்.

அருட்களஞ்சியம்

'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ என இளங்கோவடிகளும், 'நின்றென உலகிடை உலாவுமீ மிசை நின்று நின்று உயிர்தொறும் நெடிது காக்குமே’ என்று கம்பநாட்டாழ்வாரும், 'உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு...’ என நக்கீரரும் ஆதவனைப் போற்றுகின்றனர். தமிழ்ப் பெருநூல்கள் அகநானூறு, நற்றினை, பத்துப்பாட்டு ஆகியவையும் அருணன் புகழ் பாடுகின்றன.

தென்புலத்தில் நாடாண்ட மன்னர்கள் பலரும் சூரிய பக்தர்கள். குடந்தை நாகேசுவரர் ஆலயத்தில் சூரியபகவானுக்காக ஒரு தனிச் சந்நிதி இருக்கிறது. கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் ஆட்சி புரிந்த சோழ மன்னன் பராந்த கச் சோழன், இந்த சூரிய சந்நிதியில் விளக் கேற்ற மானியம் அளித்ததை கல் சாஸனம் ஒன்று சொல்கிறது.

பராந்தகச் சோழன் (அன்றைய) தென்னாற் காடு மாவட்டத்தில், செம்பை கிராமத்தில் சூரியனுக்காக ஓர் ஆலயம் அமைத்து,

அருட்களஞ்சியம்

கண்டராதித்ய ஆதித்ய க்ருஹம்' என்று நாமமிட்டிருக்கிறான்.

குலோத்துங்க சோழனும் சூரிய உபாசி. இவன், தஞ்சை மாவட் டத்தில் சூரியனார்கோவில் எனும் கிராமத்தில் அருண தேவனுக்கு ஓர் ஆலயம் எடுத்திருக்கிறான். இந்தத் திருக் கோயில் பிரசித்திப்பெற்ற பாஸ்கர க்ஷேத்திரமாக விளங்கு கிறது. சூரியனார் கோயில் அருணனுக்கு 'குலோத்துங்கச் சோழ(ர்) மார்த்தாண்டாலயத்து சூரிய தேவர்’ எனவும் குலோத்துங்க சோழ மார்த்தாண்ட தேவர் என்றும் திவ்விய நாமங்கள் உரியன.

வி. கோபாலன்

** 1967 ஆனந்தவிகடன்

தீபாவளி மலரில் இருந்து...

தர்மாவேசமும் அதர்மாவேசமும்

கண்ணைக் காக்கும் இமைபோல், யாகத்தைக் காத்தார்கள் ராம  லட்சுமணர்கள் என்று சொல்வதில் எவ்வளவோ பொருள் பொதிந்திருக்கிறது! அந்தக் கடமையையும் காவலையும் எவ்வளவோ அருமையாக, கண்ணாகவே கருதியவர்கள், தவ வேள்விக்குத் தீங்கு செய்யும் ராக்ஷஸர்களைக் கண்ணிலே வந்து விழக்கூடிய தூசு தும்பாகவே மதித்தார்கள் என்றும் கருதலாம். பண்டிதர்களில் சிலர் இந்த உபமானத்திற்கு வியாக்கியானம் செய்யும்போது, மனோபாவத்தின் லகானை அப்படியே விட்டுவிடுவதுண்டு.

நம்பிக்கைக் குறைவா?

மேலிமை மூத்தவனாகிய ராமன் என்றும், கீழிமை இளையவனாகிய லட்சுமணன் என்றும் கூறி, அசைந்துகொண்டிருக்கும் மேலிமைபோல் ராமன் சுற்றித் திரிந்து காவல் செய்ததாகவும், கீழிமைபோல் லட்சுமணன் அசையாது நின்று ஆச்ரம வாசலில் காவல் செய்ததாகவும் ஊகிக்கிறார்கள். இமைக்கும்போதெல்லாம் மேலிமை கீழிமையைத் தீண்டுகிறதல்லவா? அப்படியே ராமனும் வாசல் பக்கம் வந்தபோதெல்லாம் லட்சுமணனைத் தட்டிக் கொடுத்து எச்சரிக்கை செய்தானென்றும் கருதுகிறார்கள். அதிசய வியாக்கியானம்! அபூர்வ மூளை!

அருட்களஞ்சியம்

ஆனால், லட்சுமணன் அப்படி அஜாக்கிரதையாக இருக்கக் கூடியவனா? ராமனுக்கு அவன்மீது அவ்வளவு நம்பிக்கைக் குறைவா? ஒரே இடத்தில் நின்றுகொண்டி ருப்பதால் தூங்காத லட்சுமணனும் தூங்கிவிழக்கூடும் என்றால், அப்படிப்பட்டவனைச் சுற்றித் திரியவிட்டு ராமன் ஏன் வாசலில் நின்று அந்த முக்கியமான காவல் தொழிலை மேற்கொள்ளலாகாது?

என்ன பேராசை! என்ன ஆத்திரம்!

இனி, இத்தகைய வியாக்கியான விநோதங்களை விட்டுக் கவிஞன் என்ன சொல்லிக்கொண்டு போகிறான் என்று பார்க்கலாம்:

காத்தனர் திரிகின்ற

காளை வீரரில்

மூத்தவன், முழுதுணர்

முனியை முன்னி, 'நீ

தீத்தொழில் இயற்றுவர் என்ற தீயவர்,

ஏத்தருங் குணத்தினாய்!

வருவ(து) என்(று)?' என்றான்.

யாகத்தை இமைபோலக் காத்து வந்த ராம லட்சுமணர் இருவரும் யாகசாலையைச் சுற்றிச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தார்கள்  என்றே கவிஞன் சொல்லுகிறான். அப்படிச் சுற்றி வருகையில், மூத்தவனாகிய ராமன் விச்வாமித்திரன் முன்னே போய் நின்றானாம் திடீரென்று. உடனே, விஷயம் முழுதும் உணர்ந்துகொண்டான் முனிவன். ராமன் நின்ற நிலையிலேயே, நோக்கிய நோக்கிலேயே அந்த ஆத்திரம் பலனாகிவிட்டது.

'என்ன? இன்னும் வரவில்லையே முனிவன் சொன்ன அந்தத் தீயவர்!' என்று துடிக்கும் உள்ளத்தை அடக்க முயன்றும் முடியாமல், 'நீங்கள் சொன்னீர்களே, தீத்தொழில் இயற்றுவார்களென்று: அந்தத் தீயவர் என்றுதான் வருவார்களோ?' என்று கேட்டுவிட்டான்.

அருட்களஞ்சியம்

துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்வதில் இந்த இளைஞனுக்குத்தான் என்ன பேராசை; என்ன வீரத் துடிப்பு! அந்தப் பேராசையையும் ஆத்திரத்தையும் எவ்வளவு பொருத்தமாக வெளியிடுகிறது ராமன் கேள்வி!

முனிவன் என்ன பதில் சொன்னான், தெரியுமா? ஒன்றுமே பதில் சொல்லவில்லையாம். மௌனியாக இருந்துவிட்டானாம். ஏன்? மௌன விரதத்தில் இருந்தான், யாக தீட்சையில் இருந்ததால். அந்த நிலை இப்போது ராமனுக்கு விளங்கிவிட்டது. உடனே முனிவனைத் தொழுது விலகி வந்து விட்டான், 'மௌனம் குலையலாகாது; விரதபங்கம் வரலாகாது' என்று.

இடியும் இருளும்

முனிவனை விட்டு விலகி வந்ததும், ராமன் ஆகாயத்தைப் பார்க்கிறான், தற்செயலாக. ஆஹா, மழை மேகங்களா? என்ன இடி! ஓஹோ, அவர்கள்தான் வந்துவிட்டார்களா? ஆம், முனிவன் சொன்ன அந்தத் தீயவர், மழைக்கால  இருட்டல்ல; ராட்சஸ இருள்தான்! ராட்சஸ இடிதான்!

அந்தத் தீயவர்களையும், தீத்தொழில்களையும் கம்பன் காட்டும் ஜாலக் கண்ணாடி வழியாக எவ்வளவு பிரத்யக்ஷமாகப் பார்த்து விடுகிறோம்:

எய்தனர், எறிந்தனர்;

எரியும் நீருமாய்ப்

பெய்தனர்; பெருவரை

பிடுங்கி வீசினர்;

வைதனர், தெழித்தனர்;

மழுக்கொண்(டு) ஓச்சினர்;

செய்தனர் ஒன்றல

தீய மாயமே!

அரக்கர்கள் அம்புகளை எய்தார்களாம்; வேல் முதலிய ஆயுதங்களை வீசினார்களாம்; மலைகளையும் பிடுங்கி வீசினார்களாம். நெருப்பும் நீருமாய்ச் சொரிந்தார்களாம். கோபம் அடங்காமல் வைதார்களாம்; அதட்டினார்களாம். ஒன்றல்ல; பலவான தீய மாயச் செயல்களைச் செய்தார்களாம். கொஞ்ச நேரத்திலே, 'ஆயுத மழையல்லவா பெய்கிறது?' என்று சொல்லும்படி, அந்த மழையிலே அந்தக் காட்டின் பகுதி மறைந்துவிட்டதாம். அலைகடல் எழுந்து ஆகாயத்தை மறைத்துவிட்டது என்று சொல்லும்படி பொங்கிவிட்டதாம் நாற்புறமும் வளைந்துகொண்ட ராக்ஷஸ சேனை.

நெருப்புப் பொறிகளைக் கக்கிய அந்த ராக்ஷஸர்களின் கோபாவேசக் கண்களைப் பார்த்ததும் லட்சுமணன் கண்களிலும் நெருப்புப் பொறி பறந்தது. அப்போது அவன் என்ன செய்தான்? என்ன சொன்னான்?

கண்டஅக் குமரனும்

கடைக்கண் தீஉக,

விண்தனை நோக்கித்தன்

வில்லை நோக்கினான்;

'அண்டர்நா யக! இனிக்

காண்டி, ஈண்(டு)அவர்

துண்டம்வீழ் வன!' எனத்

தொழுது சொல்லினான்.

விண்ணையும் நோக்கினான்; வில்லை யும் நோக்கினான்; பிறகு அண்ணனை நோக்கினான். அவ்வளவுதான். 'இனி ஓட்டை உடைசல் இல்லாமல் அந்த முழு மக்களைப் பார்க்க முடியாது!' என்று சொல்லிவிட்டான். என்ன தர்மாவேசம், லட்சுமணனுக்குத்தான்!

** 27.8.44 ஆனந்த விகடன் இதழில் இருந்து...