பாரதத்தின் தென்மேற்கு ஓரத்தில் பரந்துள்ள திருவனந்தபுரம், இயற்கை அழகுடன் துலங்கும் ஓர் இனிமைப் பிரதேசம். கலை வளர்க்கும் மலை நகரம். அனந்தன் எனும் அரவின் மீது அரியான பத்மநாபன் துயில் புரியும் நிலையில் கோயில் கொண்டிருக்கும் தலம். இதன் காரணமாகவே இத்தலம் திரு அனந்தபுரம் ஆயிற்று. இத் திருத்தலத்துக்குத் திருமால் வந்து சேர்ந்தது எங்ஙனம்?

திவாகரமுனி என்றொரு துறவி திருமாலைக் குறித்துத் தவம் இயற்றிக் கொண்டிருந்தார். ஒரு காலைப் பொழுதில், தவத்தில் அமர இருந்த வேளையில், அவர் முன் இரண்டு வயது நிரம்பிய இளந்தளிர் ஒன்று வந்து நின்றது. அதன் தெய்விக அழகு முனிவரின் மனதைக் கொள்ளை கொண்டது. அவர் அந்த அழகுச் செல்வத்திடம், தம்முடனேயே இருந்துவிடுமாறு இறைஞ்சினார். குழந்தையும் குதூகலத்துடன் சம்மதித்தது. கூடவே, 'என்னை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும். தவறினால், தக்கணமே இங்கிருந்து சென்று விடுவேன்’ என மழலைக்குரலில் ஒரு நிபந்தனையும் விதித்தது.

குழந்தையிடம் எவரேனும் கொடூரமாக நடந்து கொள்வரா? முனிவரும் நிபந்தனையை அகமகிழ்வோடு ஏற்றார். அன்புடன் அக்குழந்தையைப் பராமரித்து வந்தார்.

ஒருநாள், முனிவர் ஆராதனையில் ஆழ்ந்திருந்தபோது, அவர் ஆராதித்து வந்த சாளக்கிராமத்தை எடுத்து வாயிலிட்டுக் கொண்டது குழந்தை.

முனிவர் மூர்க்கம் அடைந்தார். குழந்தையைக் கடுமை யாகக் கடிந்துகொண்டார். அவ்வளவுதான்... ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டி, அங்கிருந்து அகன்றது குழந்தை.

பிரிவுத் துயர் தாங்காமல் முனிவர் அந்தக் குழந்தையைத் தேடி குவலயமெங்கும் அலைந்தார். ஒரு கடற்கரையில், அந்தக் குழந்தை இலுப்பை மரமொன்றினுள் மறைவதைக் கண்டார். அவர் ஓடிச் சென்று அதை நெருங்குவதற்குள், அந்த மரம் மண்ணில் சாய்ந்து, பள்ளிகொண்ட பரந்தாமனின் திருக்கோலத்தைக் கொண்டது.

பெருமாளின் உடல் திருவனந்தபுரத்திலும், திருமுகம் திருவல்லத்திலும், திருப்பாதங்கள் திருப்பாப்பூரிலும் தங்கின. தன்னை நாடி வந்தது நாராயணனே என உணர்ந்த முனிவர், விசுவரூப விஷ்ணுவிடம் திருமேனியைக் குறுக்கிக் காட்சி தருமாறு வேண்டினார். நாராயணனும் குறுக்கிக்கொண்டார். இந்தத் திருக்கோலத்தில் பத்மநாபன் தரிசனம் அளித்த தலமே திருவனந்தபுரம்.

விசுவரூப தரிசனத்தின்போது, அவரது திருமுகம் தங்கிய திருவல்லம், திருவனந்தபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தத் தலத்தில் உள்ள ஆலயத்தின் கருவறையில் இன்று பரசுராமர் எழுந்தருளியிருக்கிறார்.

பத்மநாபனின் ஆலயத்தில் பரசுராமரா?! புருவங்களை உயர்த்தாதீர்கள். பின்னணியில் அற்புதமானதொரு புராண வரலாறு பொதிந்துள்ளது.

பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம். கேரளத்தில் எர்ணாகுளம் நகருக்கு அருகில் பூரணா நதிக்கரையில் அமைந்திருந்த ஓர் அழகிய கிராமம் காலடி.

அங்கே பண்டிதரும் பக்திமானுமான சிவகுரு என்னும் அந்தணர் வாழ்ந்து வந்தார். ஆர்யாம்பா என்னும் மாதர்குல மாணிக்கத்தை மணந்த அவரின் மணவாழ்க்கை மகிழ்ச்சி பொங்கிச் செழித்திருந்தது. வெகு நாட்களாக இருந்த ஒரே குறை, மனதை மகிழ வைக்க அவர்களுக்கு ஒரு மழலை இல்லையே என்பதுதான்.

வரம் வேண்டுபவர்கள் வழக்கமாக நாடும் வடக்குநாதனை (திருச்சூரில் கோயில் கொண்ட சிவபெருமானை) வணங்கி, விரதம் இருந்து பிள்ளை வரம் வேண்டினர்.

விரதம் இருந்த தம்பதிகளின் கனவில் தோன்றிய சிவபெருமான் அவர்கள் வேண்டுவது, 'பலகாலம் வாழக்கூடிய பல மூட மகன்களையா? அல்லது, சில காலமே உயிர்தரிக்கக்கூடிய ஒரே ஒரு ஞான சிரேஷ்டனையா?’ என வினவினார்.

கணவனும் மனைவியும் உத்தம குணத்தினர் அல்லவா? அதற்கேற்ப அவர்கள் மூட மகன் களை விடுத்து, ஒரே ஒரு ஞானியை மகனாக அடையவே விரும்பினார்கள். 'அவ்வாறே ஆகட்டும்’ என மகேசனும் ஆசி கூறினார்.

காலம் கனிந்தது. அந்த மகேசனே, திருவாதிரை கூடிய நட்சத்திரத்தில் அவர்களுக்கு மகனாகத் தோன்றினார்.

மங்களங்களை நல்கும் மகாதேவனின் பெயரான சங்கரன் என்ற பெயரை குழந்தைக்கு இட்டார்கள். அவரால் அவர் பிறந்த கிராமத்துக்கே மங்களங்கள் பெருகின. பெற்றோரும் ஏனையோரும் அந்தத் தெய்வக் குழந்தையைப் போற்றி வளர்த்தனர்.

மிகச் சிறிய வயதிலேயே சங்கரர் தந்தையை இழந்தார். அன்னை அவரைத் தன் கண்ணேபோல் போற்றி வளர்த்தாள். அவருக்கு முறையாக எழுத்தறிவிக்கப்பட்டது. குருகுலத்தில் வேத, சாத்திர தத்துவார்த்தங்கள் ஓதப்பட்டன. அங்கிருந்த மாணவர்களில் சிறந்தவராக அவர் விளங்கினார்.

அவதார நியமத்தின்படி சங்கரர் துறவறம் பூண்டு, ஆன்மிகப் பணி செய்ய வேண்டியவர். ஆனால், அன்னையின் அன்பு அவரைத் துறவறம் பூண விடவில்லை.

ஒருநாள், பூரணா ஆற்றில் சங்கரர் குளித்துக் கொண்டிருந்தார். அவரின் காலை முதலை ஒன்று கவ்வியது. முதலைக்கும் அவருக்கும் இடையில் நடந்த போராட்டத்தில், அவரின் உயிர் ஊசலாடியது. மரணத்தறுவாயில், 'அன்னையே, இப்போதாவது நான் சந்நியாசம் பூண்டால், மரணத்தில் இருந்து விடுபடலாம். அதற்கான அனுமதியை எனக்குத் தரக் கூடாதா?' என்று தாயை அவர் இறைஞ்சினார். வேறு வழியின்றி, அவர் துறவு பூண, தாய் அரை மனதாக அனுமதி தந்தார்.

சங்கரருக்கு அனுமதி கிடைத்த அக்கணமே, பொய் முதலை புனலை விட்டு நீங்கியது. சங்கரர் நல்லதொரு குருவை நாடி நடந்தார். நர்மதை நதிக்கரையை அடைந்து, அங்கு கோவிந்த பகவத் பாதரைக் கண்டார்.

அவரின் மன உறுதி கண்ட குரு, அவருக்கு சந்நியாச தீட்சை அளித்தார். 'நாம் அனைவருமே இறைவனின் ஒரு வடிவம். ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இரண்டல்ல; ஒன்றே!' என்று அத்வைதத்தை போதித்தார். குருவின் அனுமதியுடன் சங்கரர் பாத யாத்திரையாகவே பாரத தேசம் முழுக்கச் சென்று, அத்வைத சித்தாந்தத்தைப் பரப்பினார். இவரே சங்கர பகவத் பாதர் என்னும் ஆதிசங்கரர்!

'உயிரினங்கள் அனைத்தும் சமம்’ என்ற அத்வைதத்தைப் பரப்பிய ஆதிசங்கரர், இழி குலத்தவர் என்று ஒதுக்கப்பட்ட மக்களையும் அரவணைத்தார்.

ஆதிசங்கரர் பாதயாத்திரை மேற்கொண்டி ருந்த நேரத்தில், காலடியில் அவரது அன்னையின் இறுதி நேரம் நெருங்கியது. உள்ளுணர்வாலேயே அதை உணர்ந்த ஆதிசங்கரர், காலடி திரும்பி, அன்னையின் மரணத் தறுவாயின்போது அவருடன் கூடவே இருந்தார்.

பின்பு, ஒரு மகனுக்குரிய கடமையை நிறைவேற்றும்பொருட்டு, அன்னைக்குப் பித்ரு கர்மாவை நடத்த எண்ணம் கொண்டார். ஆனால், அவர் இழிகுலத்தவரையும் அரவணைத்தவர் என்பதால், காலடியில் இருந்த அந்தணர்கள் எவரும் பித்ருகர்மாவை நடத்தி வைக்க முன்வரவில்லை. மனம் வருந்திய ஆதிசங்கரர், பித்ரு கர்மாவை நிறைவேற்றாம லேயே, தனது பாத யாத்திரையைத் தொடங் கினார். பத்மநாபனின் திருமுகம் தங்கிய திருவல்லத்துக்கு வந்து சேர்ந்தார்.

அங்கேதான் அதிசயம் நிகழ்ந்தது. திருவல்லத்து ஆலயத்தில், மகேஸ்வரனின் அம்சமாகிய ஆதிசங்கரருக்கு உதவ, பரசுராமனே எழுந்தருளினார். தாமே முன்னின்று பித்ரு கர்மாவை நடத்தி வைப்பதாக வாக்களித்து, நிறைவேற்றினார்.

அதன் பின், திருவல்லத்து ஆலயக் கருவறையில் எழுந்தருளி அருள்பாலிக்கத் தொடங்கினார் பரசுராமர்.

அன்றிலிருந்து, கேரளத்தில் பித்ரு கர்மாக்கள் செய்வதற்கு இல்லத்தைத் தவிர வல்லமும் ஓரிடம் என வழங்கப்படலாயிற்று.

கோயிலில் நுழைந்தவுடன் ஒரு நடை. இருபுறமும் திண்ணை. மேலே சார்புக்கூரை. தீபலக்ஷ்மிகள் வரவேற்பு. கொடிமரம்; பலி பீடம். நுழைந்தவுடன், இடது பக்கம் ஒரு தனிக் கோயிலில் ஸ்ரீ மஹாகணபதி.

எதிரில், முன் மண்டபத்தை அடுத்து வட்ட வடிவமான கருவறையில், பரசுரமர் வடக்குப் பார்த்து எழுந்தருளியிருக்கிறார். சங்கு சக்கரத்துடன் பத்மம், கோடரி ஏந்தியிருக்கும் பரசுராமர் சந்தனக்காப்பில் ஒளிர்ந்து, ஆதரவற் றோருக்கு ஆறுதல் சொல்லவே அங்கே எழுந்த ருளியிருப்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.

பரசுராமருக்கு வலப்புறத்தில், அபூர்வமாக சதுர்முக பிரம்மாவுக்கு ஒரு சந்நிதி. வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் நான்முகன் யோகாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

அவருக்கு அருகில் சுயம்புவாய் மலர்ந்த மகாதேவர் சந்நிதி. கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். அவருக்கு முன்னால் மண்டபத்தில் நந்தி பகவான்.

பரசுராமர் பிண்டம் வாங்கி மச்சாவதார மகாவிஷ்ணுவுக்கு அளித்ததால், இவருக்கும் ஒரு சந்நிதி. நந்தி மண்டபத்துக்கு வலது புறத்தில் அமைந்துள்ளது. மச்ச வடிவில் மாலன், மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்.

மச்சாவதார சந்நிதியை அடுத்து யாகசாலை. துர்மரணம் சம்பவித்த உயிர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக இங்கே சிறப்பு பூஜை செய்கிறார்கள். சோப்புப் பெட்டிகளில் பெயர், ரூபம் ஆகிய விவரங்களை வைத்து மாட்டியிருக்கிறார்கள்.

கோயிலுக்கு வெளியே இருக்கும் மைதானத் தில் வரிசையாக மேடைகள். அவற்றில் அன்னம் படைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான காக்கைகள் வந்து கூடி அன்னத்தை ஆர்வமாகப் புசித்துச் செல்கின்றன. இந்த மைதானத்தில்தான் இறந்தவர்களின் பத்து நாள் காரியங்கள் நடத்தப்படுகின்றன.

பிண்டம் கொடுப்பதற்கென்றே விளங்கும் கோயில் என்பதால், ஒவ்வொரு நாள் காலை யிலும் மக்கள் ஏராளமான எண்ணிக்கையில் வருகை தருகிறார்கள். பரசுராமரைத் தரிசித்து, பிண்டம் அளித்து, மன நிறைவுடன் செல்கிறார்கள். பரசுராமரைப் பணியுங்கள். உலக வாழ்வுக்குப் பின்னரும் உய்விக்கும் விண்ணவர் கோன் அவர்.

படங்கள்: பொன்.காசிராஜன்

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்: திருவல்லம்

தலம் அமைந்திருக்கும் மாநிலம்: கேரளம்

சுவாமியின் திருநாமம்: பரசுராமர்

எப்படிப் போவது? : சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரயில், கார் மற்றும் விமானத்தில் செல்லலாம். அங்கிருந்து திருவல்லத்துக்கு பேருந்து, கார், ஆட்டோ மூலம் செல்லலாம்.

எங்கே தங்குவது? : திருவனந்தபுரத்தில் வசதியான தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் நிறைய உள்ளன.

தரிசன நேரம்: காலை 4.00 மணி முதல் பகல் 11.30 வரை; மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 வரை.