மழையில் நனைந்து நடுங்கியபடியே பிரசன்னமானார் நாரதர்.

''என்ன நாரதரே, மழை விட்டதும் வரக்கூடாதா? இப்படியா சொட்டச் சொட்ட நனைந்து வருவீர்?''

என்று கரிசனத்துடன் கேட்டோம். தொடர்ந்து, ''அதிருக்கட்டும்... எங்கே போன வாரம் உம்மைக் காணவில்லை?' என்றோம்.

''அதானே பார்த்தேன், என்னடா அக்கறையாக விசாரிக்கிறீரே என்று!' என்று சொல்லிச் சிரித்த நாரதர், ''மதுரைப் பக்கமிருந்து ஒரு வாசகர் அழைத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போனேனல்லவா... அவர் பழமுதிர்ச்சோலைவாசி! திருச்செங்கோடு கோயிலில் நான் பார்த்துச் சொன்ன விஷயங்களைப் போலவே பழமுதிர்ச்சோலையிலும் பக்தர்களுக்குப் பல அசௌகர்யங்கள் இருப்பதாகச் சொன்னார். அங்கேதான் போய் வருகிறேன்' என்றார்.

''என்னென்ன அசௌகர்யங்களை அங்கே பார்த்தீர்கள்?'' என்று கேட்டோம்.

''முதலில் என் அசௌகர்யத்தைப் போக்கிக்கொள்ள ஒரு துண்டு கொடும். உடம்பின் ஈரத்தைத் துடைத்துக் கொள்கிறேன்' என்றவரிடம் ஒரு டவலை எடுத்து நீட்டினோம். துடைத்துக்கொண்டபடியே பேசத் தொடங்கினார்.

''உங்கள் வாசகர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஒரு பாதையும், வாகனங்களில் வருபவர்களுக்கு ஒரு பாதையுமாக பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்க இரண்டு பாதைகள் உள்ளன. இரண்டுமே சுமார் 4 கி.மீ. தூரம் இருக்கும். அந்த பாதைகளில் பக்தர்கள் படும் சங்கடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!'

''என்ன மாதிரியான சங்கடங் களோ?''

''போதிய கழிப்பறை வசதிகள் செய்யப்படாததால், மலைப் பாதையைச் சுற்றியுள்ள மறைவிடங்களையே பயன்படுத்து கிறார்கள் ஜனங்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, கோயிலின் புனிதத் தன்மையும் கெடுகிறது. தவிர, காதலர்கள் என்ற போர்வையில் பல தகாத செயல்கள் நடைபெறுவதையும் பார்க்க முடிந்தது. இதைக் காணும் பக்தர்கள் மிகவும் சங்கடம் அடைகின்றார்கள்.

இதை எல்லாம் ஓரளவு சகித்துக்கொண்டு முருகன் கோயிலுக்குச் சென்ற பின்பாவது ஆறுதல் கிடைக்கிறதா என்றால், அங்கேயும் பக்தர்களுக்குப் பிரச்னைகள்தான். காலணி களுக்குப் பாதுகாப்பு மையம் இல்லாததால் பக்தர்கள் ஆங்காங்கே தங்கள் காலணிகளை விட்டுச் செல்கிறார்கள். சாமி தரிசனம் முடித்து வந்து பார்த்தால், விட்ட இடத்தில் காலணிகளைக் காணோம்! இதனால் பரமனைத் தேடி அலைவதற்கு பதிலாக பாதுகைகளைத் தேடி அலைகிறார்கள் பக்தர்கள்!'

'உம்ம பாதுகை என்னவாயிற்று?' என்று கொக்கி போட்டோம்.

'நல்லவேளையாக, என்னு டையது பிடிப்புக்காகக் கட்டைவிரலுக்கு மட்டும் குமிழ் வைத்த மரப் பாதுகை அல்லவா... அதனால் யாருக்கும் பயன்பட வில்லை போலிருக்கிறது. என் பாதுகை மட்டும் பத்திரமாக விட்ட இடத்திலேயே இருந்தது' என்று சொல்லிச் சிரித்தவர்,

''கோயிலுக்கு உள்ளே ஒரே குப்பையும் கூளமுமாகக் கிடக் கிறது. இதெல்லாம் பக்தர்களின் கைங்கர்யம்தான். கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள், கோயிலிலேயே தாங்கள் கொண்டு வந்த உணவை வைத்துச் சாப்பிட்டு விட்டு, அப்படி அப்படியே போட்டு விட்டுப் போய்விடு கின்றனர். இத்தனைக்கும் பக்தர்கள் சாப்பிடவும் ஓய்வு எடுக்கவும் தனியாக இடம் இருக்கிறது. ஆனால், பக்தர்கள் அந்த இடத்தைப் பயன்படுத்து வது இல்லை என்பதுதான் வருத்தத்துக்கு உரிய விஷயம்.''

''இதையெல்லாம் கோயில் நிர்வாகம் கண்டுகொள்வது இல்லையா?''

''அது அந்த முருகனுக்குத்தான் வெளிச்சம்'' என்ற நாரதர், மற்ற கோயில் களில் பார்த்த குறைபாடுகள் போலவே இங்கேயும் அர்ச்சனைத் தட்டு, குடி தண்ணீர் வசதி போன்ற குறைபாடுகளும் இருப்பதாக ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.

''பழமுதிர்ச்சோலைக்குச் செல்லும் வழியில் தானே கள்ளழகர் கோயிலும் இருக்கிறது. அந்தக் கோயிலுக்கும் சென்று வந்தீரா?''

''போனேன். இங்கே முதலில் நாம் பார்ப்பது கருப்பண்ணசாமி சந்நிதிதான். அங்கே பக்தர்களின் தள்ளுமுள்ளு கொஞ்சநஞ்சமல்ல. அந்த நெரிசலில் சிக்கி வயதானவர்கள் படும் பாடு பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது. பக்தர்கள் வரிசையாக வந்து தரிசிக்க ஏற்பாடு செய்தால் புண்ணியமாகப் போகும்!'

''கோயில் நிர்வாகத்திடம் இந்த யோசனையைத் தெரிவித்தீரா?''

''நான் சென்றபோது உரிய அதிகாரி அங்கே இல்லை. விரைவில் போனில் பேசி, அவர் சொல்லும் பதிலைத் தெரிவிக்கிறேன். தவிர, இங்கேயும் பக்தர்கள் பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்துகிறார்கள். டோக்கன் கொடுப்பதற்கு ஒரு கவுன்ட்டர் இருந்தாலும், அது செயல்படாமல் இருக்கிறது. கருப்பண்ணசாமி சந்நிதி வரை நடந்து சென்றுதான் டோக்கன் வாங்கவேண்டும். டோக்கன் வாங்கினாலும், மொட்டை போடும் இடத்தில், ஒரு தலைக்கு 70 ரூபாய் கொடுங்கள் என்று நச்சரித்துப் பிடுங்குகிறார்கள். அது மட்டுமா? முடி காணிக்கை கொடுத்து விட்டு குளிக்கச் சென்றால், அங்கே 4 லிட்டர் தண்ணீர் 20 ரூபாய், 8 லிட்டர் தண்ணீர் 30 ரூபாய் என யானை விலை குதிரை விலை வைத்து விற்கிறார்கள். இந்த அளவு தண்ணீரில் பக்தர்கள் எப்படிக் குளிக்க முடியும்? தலைக்கு வெறுமே புரோக்ஷணம் செய்துகொண்டு குளித்ததாகப் பேர் பண்ணவேண்டியதுதான்!'' என்றவரின் மொபைல் கிணுங் என்று சிணுங்கியது.

எடுத்துப் பார்த்தவர், ''திருவல்லிக்கேணி நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. சமீபத்தில் பார்த்தசாரதி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது அல்லவா, அந்தக் கோயிலில் ஏதோ பகீர் தகவல்கள் இருப்பதாகச் சொல்லி, உடனே வரச் சொல்லி அழைக்கிறார். பார்த்துவிட்டு வந்து அனைத்தை யும் சாவகாசமாக பகிர்ந்து கொள்கிறேன்!' என்றபடி நம்முடைய பதிலை எதிர்பார்க்காமலே விசுக்கென மறைந்துவிட்டார் நாரதர்.

படங்கள்: சு.ஷரண் சந்தர்