பிறந்தவேளை (லக்னம்) விருச்சிகம். அதிலிருந்து 7ம் வீட்டில் (ரிஷபத்தில்) புதன் வீற்றிருக்கிறான். இப்படியான அமைப்புள்ள புருஷ ஜாதகம், தாம்பத்தியத்தில் நெருடலைச் சந்திக்கும்.

லக்னத்தில் இருந்து 8க்கு உடையவன் புதன். லக்னத்திலிருந்து 11க்கு உடையவனும் புதன். மிதுனம், கன்னி இரு ராசிகளுக்கும் உடையவனாக இருந்தாலும், 8வது ராசிக்கு உடையவன் என்ற தகுதி இங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. 8க்கு உடையவன் 7ல் வரும்போது, 7க்கான பெருமையை குறைத்துவிடுவான். மகிழ்ச்சியில் திருப்தியை எட்டாமல் செய்துவிடுவான். ரிஷபத்தில் இருக்கும் புதன், முழுப் பார்வையாக (7ம் பார்வை) விருச்சிகத்தைப் பார்ப்பதால், பிறந்தவனின் (லக்னம்) கர்மவினை தூண்டிவிடப்பட்டு, சந்தோஷத்தை சுவைக்கவேண்டிய விஷயங்களில் துயரத்தை சேர்த்துவிடுகிறது. இங்கு, 7ல் வீற்றிருக்கும் கிரகம் சுப கிரகம். அதுவே துயரத்துக்குக் காரணமாகிவிடுகிறது. 7ல் பாப கிரகங்கள் (வெப்ப கிரகங்கள்) இருந்தால் மட்டுமே இடையூறு தலைதூக்கும் என்கிற கோட்பாடு ஜோதிடத்தில் ஏற்கப்படுவதில்லை. சுப கிரகமானாலும் (புதன்), 8க்கு உடையவனாக இருப்பதால், அசுபனாக மாறி (அந்த லக்னத்துக்கு) இடையூறுக்கு ஒத்துழைக்கிறான்.

உதாரணம்1:

வீடுகளை (ராசிகளை) தனித்தனியாக ஒரு கிரகம் கண்காணிக்கும். அதை, அந்த ராசியின் அதிபதியாகக் குறிப்பிடும் ஜோதிடம். ஒரு ராசியில் வந்து அமர்ந்த கிரகம், அந்த ராசியின் தரத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்கும். அதன் இயல்புப்படி அந்த பலனை மாற்றியமைத்துவிடும்.

இங்கு புதன் தனது இயல்புக்கு உகந்த வகையில், 7க்கு உடைய பலனை மாற்றியமைத்து விடுகிறான். 8க்கு உடையவனாக இருப்பதால் அந்த இயல்பு பலனில் இணைந்துவிடுகிறது. ஓர் இலாகாவில் அமர்ந்த அமைச்சர் தனது சுயநலப்படி அதன் தரத்தை மாற்றியமைப்பதைப் பார்த்திருக்கிறோம். பொதுநலக் கண்ணோட்டத்தில் இலாகாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் ஈடுபடாமல், தனது இயல்புப்படி செயல்படுபவர்களும் உண்டு. அக்கறையுடன் பொதுநலனை முன்னிறுத்தி, அதன் பெருமையை வளர்ப்பவர்களும் உண்டு.

அந்த வீட்டுக்கு உடையவன் (அதிபதி), அந்த வீட்டில் அமர நேர்ந்தால் அந்த வீடு செழித்துவிடுகிறது. 'பாவாதிபதி (வீட்டிற்கு உடையவன்) பாவத்தில் (அந்த வீட்டில் அமர்ந்தால்) இருந்தால் பாவம் செழிப்புறும்’ என்கிறது ஜோதிடம். குறிப்பிட்ட பாவத்தின் தரத்தை நிர்ணயிப்பதில், அங்கு வந்து அமர்ந்த கிரகத்தின் பங்கு முன்னுரிமை பெற்றுவிடும். 7க்கு உடையவனாக அல்லாத செவ்வாய், 7ல் அமர்ந்தால், அவன் இயல்பின் காரணமாக கணவன் அல்லது மனைவியின் இழப்பு ஏற்படலாம் என்று மதிப்பீடு செய்கிறது ஜோதிடம். நீதிபதி சட்டப்படி ஆராய்ந்து முடிவெடுப்பார். அவரது சுயநலம் அதில் குறிக்கிடாது. கர்மவினையை ஆராய்ந்து முடிவெடுப்பவை கிரகங்கள். கர்ம வினைக்கு உகந்தபடி கிரகத்தின் சுயநலம் அமைந்துவிடும்!

கர்மவினையின் செயல்பாடு நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகே நமது அறிவுக்கு எட்டும். முன்னச்சரிக்கையாக செயல்பட அது இடமளிக்காது. பிறந்தவன் குறித்து வரையப்படும் வருங்கால வரைபடமும், அவனைப் பொறுத்தவரையில் பொய்த்து விடுவதைப் பார்க்கிறோம். அவனது கர்மவினையே அவனையும் அறியாமல் அவனை இழுத்துச் செல்கிறது. மகிழ்ச்சியையோ துயரத்தையோ சந்தித்த பிறகே, கர்மவினையை ஒருவன் உணர்கிறான். ஓட்டுப் போடலாம், போடாமலும் இருக்கலாம். மாற்றுத் தலைவனுக்கும் போடலாம். இங்கு விருப்பப்படி செயல்படும் தகுதி இருக்கும். அதற்கு 'முயற்சி’ என்று பெயர். ஒருவன் சிக்கலில் மாட்டிக்கொண்டு பதவி இழக்கிறான் எனில், இங்கு அவனது விருப்பத்தை எதிர்பார்க்காமலே செயலில் இணைத்துவிடும். மேலதிகாரியோடு சர்ச்சை முற்றி ராஜினாமா செய்துவிட்டு வீடு திரும்புகிறான் ஒருவன். வீட்டின் பொறுப்பு, தனது கடமை அத்தனையும் அவனது சிந்தனையில் வந்து ராஜினாமாவைத் தடுக்கவில்லை. சடுதியில் சிந்தனையை முடக்கிவைத்து, கர்ம வினை வென்றுவிடுகிறது.

கர்மவினையின் பிடியிலிருந்து வெளி வரும் தகவல்களை ஜோதிடம் அளிக்கும். ஜோதிட பிரபலங்கள் அவற்றை உள்வாங்கி நமக்கு அளிக்கவேண்டும். அத்துடன், தமது சுயநலத்தை இணைக்காமல், ஒரு நீதிபதிக்கு உரிய பக்குவம் அவர்களுக்கு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கர்மவினை கண்ணுக்கு புலப்படாது. கண்ணுக்குப் புலப்படாத தை இல்லை என்று சொல்வது மன வளர்ச்சி குன்றியவனின் மதிப்பீடு. தனது சிந்தனையில் உருவான தனது வருங்கால மதிப்பீட்டை நம்பி செயலில் இறங்குகிறான்; தோல்வியில் துவண்டு போகிறான். 'வருங்கால மதிப்பீடு’ கண்ணுக்குப் புலப்படாத ஒன்று. அதில் நம்பிக்கைவைக்கிறான். 'அதுவே சரி’ என்று ஏற்றுக்கொள்கிறான். ஆனால், தனது எண்ணங்களை அனுபவத்துக்குக் கொண்டுவரும் மனதுடன் இணைந்த ஆன்மாவை

(கடவுளை) அவன் ஏற்பது கிடையாது. 'இல்லை’ என்று தீர்மானமான முடிவை முன்வைக்கிறான். இப்படியான நிலைமை சிந்தனை வளம் பெறாததையே காட்டுகிறது. 'கர்மவினை’ இல்லை என்ற முடிவிற்கு வருகிறான். அத்துடன் நிற்காமல், கர்ம வினைப் பயனாக சிக்கலில் மாட்டிக்கொண்ட அவன், தனது துயரத்துக்கு பிறரைக் காரணம் காட்டி, குற்றமற்றவனையும் குற்றவாளி ஆக்குகிறான்.

சூரியனைப் பார்த்து நாய் ஓலமிடும். ஓலமிட்டுத் துவண்டு போவது நாய்தான். அதன் செயல் சூரியனைப் பாதிக்காது. அறியாமையில் தோன்றிய எதிர்ப்புகள் அறியாமையை வளர்க்க உதவும். அறிவுபூர்வத் தகவல்களுக்கு பாதிப்பு இருக்காது. தொடர்ந்த எதிர்ப்பிலும் பாதிப்பு அடையாமல், புடம் போட்ட தங்கம் போல் மிளிருகிறது ஜோதிடம். காலத்தின் தாக்கம் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதை மறுக்க இயலாது. அந்தக் காலம்தான் ஜோதிடம். பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒட்டிக்கொண்டிருக்கும் காலம். அதை ஏற்காதவனிலும் கர்மவினை செயல்பட்டுவிடும். அதன் ஏற்பு, மறுப்பு என்பது எந்த விதத்திலும் கர்மவினையின் செயல் பாட்டை பொய்யாக்காது. ஜோதிடத்தின் மறுபெயர் உண்மை. கர்மவினை என்பது அவன் செயல்பட்டு சேமித்தது. அதில் நல்லதும் கெட்டதும் கலந்திருக்கும். அவற்றைச் சரியான தருணத்தில் அனுபவிக்க வைப்பதே ஜோதிடத்தின் வேலை. திட்டமிடும் மனதில் வாசனை வடிவில் ஒன்றியிருப்பதால், சரியான தருணத்தில் வெளிவர கர்மவினைக்கு தடங்கல் இருக்காது. கர்மவினையை ஒட்டியே அவன் சிந்தனை செயல்படும். இங்கு 7ல் இருக்கும் புதன், அவனது கர்மவினையை உணர வைப்பதில் முனைந்துவிடுகிறது. ரிஷிகள் சிந்தனையில் உருவான தகவல்கள் அத்தனையும், மக்களின் மகிழ்ச்சிக்கு உர மூட்டுபவை. அவர்கள் அனுபவத்தில் கண்ட உண்மைகள் தகவலாக வெளிவந்தன. சராசரி மனிதனால் ரிஷிகளின் சிந்தனையை எட்ட இயலாது. அவர்களின் சிந்தனைகளை ஏற்று வாழ்வை வளமாக்கலாம். வேத சிந்தனைகள் பலபேருக்கு எட்ட இயலாததால், அவற்றைப் புராணம், இதிஹாசம், ஸம்பிரதாயம், பண்பாடு போன்ற விளக்கங்களால் விவரித்து, பாமரர்களையும் நல்வழிப்படுத்தப் பயன்படுத்தினார்கள். அறிவின் முதிர்ச்சியை எட்டிய நிலையில் ஆராய்ந்தால் ரிஷிகளின் குறிக்கோள் தெளிவா கப் புலப்படும்.

உதாரணம் 2:

பிறந்த வேளை (லக்னம்) கடக ராசி. அதன் 7வது வீட்டில் மகர ராசியில் குரு அமைந்திருக்கிறார். இந்த அமைப்பு புருஷ ஜாதகத்தில் தென்பட்டால், தாம்பத்திய வாழ்க்கை கசக்கும் என்கிறது ஜோதிடம். அந்தக் கசப்பு மனைவியிடமிருந்து அனுபவத்துக்கு வரும். 7ல் (மகரம்) இருக்கும் குரு 6க்கும், 9க்கும் (தனுசு, மீனம்) உடையவன். அவன் மகரத்தில் நீசம் பெற்று இருக்கிறான். தகுதி இழந்து இருக்கிறான் என்று பொருள்.

ராசியில் வந்து அமர்ந்த தகுதியிழந்த கிரகம் எப்படி அந்த ராசியின் பலனைச் செழிப்பாக்க இயலும்? பண்டைய நாளில் திவாலானவனை தகுதி இழப்பு செய்வார்கள் (மஞ்சள் கடிதாசி கொடுத்தவன்). அவனது 'கையெழுத்து’ செல்லாததாகிவிடும். கொடுக்கல் வாங்கலில் அவனை இணைத்துக்கொள்ள மாட்டார் கள். அவனது சிபாரிசு ஏற்கப்படாது. அதுபோல், நீசம்பெற்றுத் தகுதி இழந்தவன் குரு. ஒப்புக்கு வீற்றிருக்கிறான். அவன் செயல்பட இயலாதவன். எனவே, 7க்கு உடைய மகிழ்ச்சியை உருவாக்க இயலாமல் செய்துவிடுகிறான்.

அவன் 6க்கு உடையவனாக இருப்பதால் பகையை வெளிப் படுத்தக் காரணமாகி விடுகிறான். 6க்கு உடையவன், 7ல் அமர்ந் தால், அவன் தனது இயல்பால், 7க்கு உடைய பலனை மாற்றி விடுவான். இங்கு, அவன் 9க்கு உடையவனாக இருந்தும் 6க்கு உடையவனின் பலனை நடைமுறைப்படுத்துகிறான். குருவின் அமர்வும், பார்வையும் இடையூறை விலக்கி விருப்பத்தை இணைத்துவிடும் என்று சொல்வது உண்டு. 'குரு பார்க்கக் கோடி நன்மை’ என்று மிகைப்படுத்திக் கூறுபவர்களும் உண்டு. ஆனால் எதிர்மாறான பலனை அளிக்கும் நீச குரு என்கிறது ஜோதிடம். நல்லவன் ஆனாலும், தகுதி இழந்தவன் செயல்பட இயலாதவனாகிறான். தகுதியிருப்பவன் ஓய்வு பெற்ற பிறகு செயல்பட இயலாது. தகுதி இழப்பு என்ற குறையால், மனம் இருந்தும் செயல்பட இயலாமல் போய்விடும்.

இங்கு 7ல் (மகரம்) சுப கிரகம். ஆனாலும் எதிரிடையான பலனை அளிக்கும் என்கிறது ஜோதிடம். சுப கிரகமும் தனது தகுதியின்மையில் விபரீதத்தைச் சந்திக்கவைக்கும்! 7ல் பாப கிரகம் (வெப்ப கிரகம்) இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஜோதிட பிரபலங்கள் சிலர், செயற்கையாக பல விவாகரத்துகளைத் தோற்றுவிக்கிறார்கள். நரிக்கு விளையாட்டு நண்டுக்கு ப்ராணாவஸ்தை! 7 ல் இருக்கும் குருவின் பார்வைக்கும் சுரத்து இருக்காது. தகுதி இழந்தவனின் பார்வையும் வலுவிழந்துதான் இருக்கும். எனவே, அமர்ந்த இடத்தையும் பார்த்த இடத்தையும் செழிப்பாக்க இயல வில்லை (மகரம் கடகம்). முடிவு கர்மவினை அனாயாசமாக வெற்றி பெற்றுவிட்டது. தாம்பத்திய சுகத்தை அனுபவிக்க இயலவில்லை.

உச்சம் பெற்ற கிரகமானது 180ல் இருந்து 210 பாகைகளில் சஞ்சரிக்கும் வேளையில் தகுதி இழப்பு ஏற்படுகிறது. மொத்த பாகைகளிலும் முழுத் தகுதி இழப்பு இருக்காது. விகிதாசாரப் படி, தகுதியிழப்பிலும் மாறுதல் இருக்கும். நீச குரு முதல் நவாம்சகத்தில் (மகரம்) இருந்தால் தகுதி இழப்பு நடைமுறைக்கு வராமல் போய்விடும். உத்திராடம் இரண்டாவது பாதத்தில் (மகரம்) இருந்தால், நீசனாக இருந்தாலும் தகுதி இழப்பு அமலுக்கு வராது. இதை ஜோதிட பாஷையில் 'வர்கோத்தம் பெற்றவன்’ என்பார்கள். அவன் நல்ல பலனை அளிப்பவனாக மாறிவிடுவான் (சுபம் வர்கோத்தமே ஜன்ம).

உதாரணம்3:

ராசியிலும் அம்சகத்திலும் ஒரே இடத்தில் கிரகம் வீற்றிருந்தால் அதற்கு 'வர்கோத்தமம்’ என்கிற தகுதி கிடைத்துவிடுகிறது. இரண்டும் ஒரே நவாம்சத்தில் இணைந்திருக்க வேண்டும். இங்கு தகுதியிழப்பு பலமிழந்துவிட்டது.

அதே குரு (பலமிழந்த குரு) நவாம்சகத்தில் கடகத்தில் இருந்தால் தகுதி இழப்பு பலமிழந்து விடும். திருவோணம் 4வது பாதத்தில் வீற்றிருந்தால் (7வது அம்சகம் ஆனால்) கடகத்தில் அம்சகமாகி விடுவான். அங்கு அவனுக்கு உச்சாம்சகம் இருப்பதால், தகுதி இழப்பு அகன்றுவிடுகிறது. குரு 7ம் வீட்டில் நீசனாக இருந்தாலும், முதல் அம்சகமோ, 7வது அம்சகமோ பெற்றிருந்தால், தகுதி இழப்பு விலகி தாம்பத்திய சுகத்தை நிறைவுசெய்வான் என்று விளக்கும் ஜோதிடம் (பலமம் சகர்ஷயோ:).

கிரகங்களின் அம்சக பலனைப் பார்த்து முடிவுக்கு வரவேண்டும். நுணுக்கமாக ஆராய்வதைத் தவிர்த்துவிட்டு ஒரு கட்டத்தை வைத்து (ராசி மட்டும்) முடிவெடுக்கும் பிரபலங்கள் உருவாகக் கூடாது. பல கணினி கணிப்புகள் அம்சகத்தைக் கண்டு கொள்ளாமல் பலனை அளித்துவிடுகின்றன. ஜோதிடம் பார்ப்பவர்கள் தாங்கள் செய்யும் தவறுகளை ஜோதிடத்தின் தவறாக சுட்டிக்காட்டி, அதற்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கக் கூடாது. 'நான் ஆராய்ந்து தான் முடிவெடுத்தேன் அது பொய்த்துவிட்டால் ஜோதிடம் நம்பிக்கைக்கு உகந்ததல்ல என்பதுதான் உண்மை’ என்று விளக்கமளிப்பது பொருந்தாது. ஆற அமர ஆராய்ந்து விளக்கம் அளிக்க முற்பட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கையை தம்பதிகளுக்கு அளிக்க இயலும்.

தொடரும்...