'நாம் இன்றைக்குக் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் எல்லாமே நம்முடைய முன்னோர்களால் தொலைநோக்குச் சிந்தனையுடன் ஏற்படுத்தப்பட்டவை. அப்படித்தான் நாம் தினமும் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடும் நடைமுறையும் ஏற்பட்டது. அதனால்தான் எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்குவதற்கு முன், மங்களகரமாக விளக்கேற்றித் துவங்குவதையே நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம்.

நாம் ஏற்றும் சுடர், மிகச் சிறியதாக இருக்கலாம். அதன் ஒளி தரும் மாற்றம், மிகப் பெரியதாக இருக்கும். தினமும் விளக்கேற்றுங்கள். உங்கள் வீட்டில் சுபிட்சம் தங்கும். உங்கள் முன்னோரை நினைத்து தனியாக விளக்கேற்றிப் பாருங்கள், முன்னோர்களின் ஆசிர்வாதம் தவறாமல் உங்களுக்குக் கிடைக்கும்' என்று விளக்கு பூஜையின் சிறப்புகள் குறித்து, சிறப்பு விருந்தினர் கவிஞர் செம்பியூரான் விவரிக்க, வாசகியர் அனைவரும் கை தட்டி ஆமோதித்தார்கள்.

சக்தி விகடன் நடத்திய 173வது திருவிளக்கு பூஜை, கடந்த 8.9.15 அன்று திருத்துறைப்பூண்டியில் உள்ள ஸ்ரீமுள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

'சக்தி விகடன் புத்தகத்தை இதற்கு முன் நான் படித்தது கிடையாது. திருவிளக்கு பூஜையிலும் நான் கலந்துகொள்வது, இதுதான் முதல் முறை. இப்பத்தான் எனக்கு விளக்கு பூஜையின் மகத்துவம் புரிஞ்சுது. இனி ஒவ்வொரு விளக்கு பூஜையிலும் நான் தவறாமல் கலந்துக்குவேன். இனிமேல் நானும் சக்தி விகடனைத் தொடர்ந்து படிக்கப் போறேன்'' என உணர்ச்சி ததும்ப பேசினார் வாசகி மாலா.

'என்னுடைய ஜாதகப்படி, வெளியில சொல்ல முடியாத பல பிரச்னைகளை நாள்தோறும்

சந்திச்சுக்கிட்டு வரேன். இந்த எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட வேண்டும் என்று இந்த விளக்கு பூஜையில் பிரார்த்தனையா முன் வச்சிருக்கேன். என்னுடைய பிரார்த்தனை பலிக்க வேண்டும் என நீங்களும் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் எல்லோருடைய பிரார்த்தனைக்காகவும் நான் வேண்டிக் கொள்கிறேன்' என வாசகி அன்பரசி கேட்டுக் கொண்டார்.

திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட அனைவரது பிரார்த்தனைகளையும், கருணையே வடிவான ஸ்ரீமுள்ளாச்சி மாரியம்மன் நிச்சயம் நிறைவேற்றி அருள் புரிவாள்; ஒளி பெறுவோம்.

படங்கள்: க.சதீஷ்குமார்