Published:Updated:

கிருஷ்ணர் சொன்னது என்ன?

கிருஷ்ணர் சொன்னது என்ன?

கிருஷ்ணர் சொன்னது என்ன?

கிருஷ்ணர் சொன்னது என்ன?

Published:Updated:

'பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யவேண்டும்’ என்று சிலர் கர்மயோகத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு விளக்கம் அளித்து வருகிறார்கள். 

பலனை எதிர்பார்க்காமல் எப்படி ஒருவரால் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடமுடியும்? கர்மயோகத்தைப் பற்றிப் புத்தகம் எழுதும் ஒருவரேகூட குறிப்பிட்ட பிரதிகள் விற்பனையாகும் என்று 'பலனை எதிர்பார்த்து’தான் புத்தகமாக அச்சடிக்கிறார்! 'பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யவேண்டும்’ என்று அவரே மற்றவர்களுக்கு அட்வைஸும் கொடுக்கிறார்!

பலனை எதிர்பார்க்காமல் யாராலும் எந்த வேலையையும் செய்யமுடியாது. ஒரு முட்டாள்கூட ஏதோ ஓர் இலக்கை மனதில் கொண்டுதான் எந்தச் செய்கையிலும் ஈடுபடுகிறான்.

'ஆக்‌ஷனில் உங்களுக்கு சாய்ஸ் உண்டு. ஆனால், அதன் ரிசல்ட்டைப் பொறுத்தவரையில் உங்களுக்கு சாய்ஸ் எதுவும் கிடையாது’ என்று கிருஷ்ண பகவான் சொல்வது அட்வைஸ் இல்லை; ஒரு ஸ்டேட்மென்ட். அவ்வளவுதான்!

கிருஷ்ணர் சொன்னது என்ன?

'ஆக்‌ஷனுக்கு மட்டுமே நீங்கள் காரணகர்த்தாவாக முடியும். அந்த ஆக்‌ஷனால் ஏற்படும் விளைவுக்கு நீங்கள் காரணமாக முடியாது’ என்கிறார் கிருஷ்ண பகவான்.

எது சரி என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்கள் தாராளமாகச் செய்யலாம். ஆனால், அதன் முடிவு எப்படி அமையும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. இதைப் புரிந்துகொள்ள நிறைய மனப்பக்குவம் தேவை.

கிருஷ்ணர் சொன்னது என்ன?

நம் கையில் இருந்து தவறி விழும் பூ தரையில் விழுகிறது.  கீழே போட்டது நாம்; அதைத் தரையில் விழச் செய்வது ஆண்டவன். இங்கே ஆக்‌ஷனுக்கு மட்டுமே நாம் காரணமாகிறோம். அதன் பலனுக்குக் காரணகர்த்தா ஆண்டவன்தான். ஆக, எந்த ஆக்‌ஷனின் முடிவுக்கும்  அது எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவை எல்லாவற்றுக்கும் மூலகாரணம் ஆண்டவன்தான். ஆண்டவன்தான் கர்மபல தாதா.

- பூஜ்யஸ்ரீ  தயானந்த சரஸ்வதி சுவாமிகள்