Published:Updated:

174-வது திருவிளக்கு பூஜை

‘தீப ஜோதியே இறைவன்!’ரா.வளன்

174-வது திருவிளக்கு பூஜை

‘தீப ஜோதியே இறைவன்!’ரா.வளன்

Published:Updated:

சக்தி விகடன் நடத்திய 174வது திருவிளக்கு பூஜை, கடந்த 22.9.15 அன்று திருமங்கலக் குடியில் உள்ள ஸ்ரீ பிராணநாதேஸ்வரர் கோயிலில், மங்களாம்பிகை சந்நிதியின் முன் ஆத்மார்த்தமாக நடைபெற்றது. சென்னை, தஞ்சாவூர், மயிலாடுதுறை எனப் பல்வேறு ஊர்களில் இருந்தும் வாசகிகள் திரளாக வந்து, திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனர். 

174-வது திருவிளக்கு பூஜை

'நமது அன்றாட வாழ்வில் ஏற்படக்கூடிய துன்பங்களைப் போக்கும் பரிகாரக் கோயில்கள் பல உள்ளன. அந்த வகையில், தீராத நோய்கள் நீங்கவும், திருமணத் தடை விலகி திருமணம் நடை பெறவும் அருள்புரியும் புண்ணியத் தலம் இந்தத் திருக்கோயில். இங்கு, சக்தி விகடன் சார்பில் நடைபெற விருக்கும் திருவிளக்கு பூஜையில் கலந்துகொள்ள வந்துள்ள நீங்கள் பாக்கியசாலிகள். பெண்களால் மட்டுமே ஓர் உயிரை உண்டாக்க முடியும். அப்பேர்ப்பட்ட மகத்துவம் மிகுந்த பெண்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து வழிபடும் கூட்டு வழிபாடுதான், இந்தத் திருவிளக்கு பூஜை. திருவிளக்கில் சுடர்விடும் ஜோதிதான் இறைவன். அளவற்ற சக்தி வாய்ந்த இந்தத் திருவிளக்கு பூஜை உங்களுடைய பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றும் என்பதில் சந்தேகமே இல்லை'' என்று சிறப்பு விருந்தினர் பன்மொழிப் புலவர் கணேஷ்கண்ணன் பேச, வாசகியர் அனைவரும் கை தட்டி வரவேற்றனர்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

174-வது திருவிளக்கு பூஜை

'ஊர் ஊராகச் சென்று பொது நன்மைக்காக விளக்கு பூஜை நடத்தி வரும் சக்தி விகடனை நாம் முதலில் பாராட்டியாக வேண் டும். சக்தி விகடனின் இந்த இறைப்பணி என்றென்றும் நீடித்து

174-வது திருவிளக்கு பூஜை

நிலைக்க வேண்டும். அதுவே எனது விருப்பம்' என சென்னையில் இருந்து வந்திருந்த வாசகி துளசி பிரசாத் பேசியதும், அனைத்து வாசகியரும் உற்சாக ஆரவாரம் எழுப்பி ஆமோதித்தனர்.

'என் குழந்தைகள் சிறப்பாகப் படிக்க வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். இங்கு வந்திருக்கும் அனைவரது வேண்டுதல்களும் நிறைவேற வேண்டும். இதையே எனது பிரார்த்தனையாக முன் வைத்தேன்' என்று தெரிவித்தார் வாசகி சரஸ்வதி. எல்லோரது பிரார்த்தனைகளையும் ஸ்ரீ பிராணநாதேஸ்வரரும் மங்களாம்பிகையும் நிச்சயம் நிறைவேற்றி அருள்வார்கள்!

படங்கள்: கே.குணசீலன்