Published:Updated:

நாரதர் உலா

நாரதர் உலா

நாரதர் உலா

நாரதர் உலா

Published:Updated:

'நேரம் சென்றுகொண்டே இருக்கிறதே, இந்த நாரதரை இன்னும் காணோமே’ என்று அவருக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினோம். 

'விநாயகர் ஊர்வல நெரிசலில் சிக்கிக்கொண்டு இருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்

நாரதர் உலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வந்துவிடுகிறேன்’ என்று பதில் மெசேஜ் அனுப்பிய நாரதர், சொன்னபடியே சற்றைக்கெல்லாம் வந்து சேர்ந்தார்.

இனிப்புக் கொழுக்கட்டையும் சுண்டலும் கொடுத்து நாரதரை உபசரித்தபடி, ''என்ன நாரதரே, ஏதோ பகீர் தகவல் வந்திருக்கிறது, பார்த்தசாரதி கோயிலுக்கு அவசரமாகப் போகவேண்டும் என்று திடுமென கிளம்பிப் போனீரே, என்ன விசேஷம்? எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கே இப்போதுதானே சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. அதற்குள் அப்படி என்ன பிரச்னை ஏற்பட்டுவிட்டது?''

''சம்ப்ரோக்ஷணத்திலேயே பிரச்னைகள் ஆரம்பித்துவிட்டது. சம்ப்ரோக்ஷணம் முடிந்ததும் அந்தப் புனித தீர்த்தத்தை பக்தர்கள் மீது தெளிப்பது வழக்கம். ஆனால், இங்கே அப்படிச் செய்யவில்லையாம். வந்திருந்த வி.ஐ.பிக்களுக்கு மட்டும் அவர்களுக்கு அருகில் சென்று தெளித்தார்களாம். இது அப்போது பக்தர்களிடையே பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார் கள். கோயிலைச் சுற்றி ஒரு நடை வந்தேன். சமீபத்தில் இங்கே சம்ப்ரோக்ஷணம் நடந்து முடிந்திருந்தாலும், கோயில் ஏனோ பொலிவிழந்து காணப்படுகிறது'' என்று சொன்ன நாரதர், தான் அங்கே பார்த்த பிரச்னை களைப் பட்டியல் போட ஆரம்பித்துவிட்டார்.

நாரதர் உலா

''சென்னையிலேயே பக்தர்கள் அதிகம் வருகை தரும் கோயில்களில் ஒன்று  பார்த்தசாரதி கோயில். அப்படி இருந்தும் பக்தர்களின் தரிசனத்துக்கான ஏற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லை. கும்பாபிஷேக பணியின்போது கோயிலின் தரைத்தளம் நீக்கப்பட்டு, பழைமையான முறைப்படி கற்கள் பதிக்கப் பட்டன. தற்போது தரிசன கியூ அமைப்பதற்காக அந்தத் தரைத்தளங்களிலேயே துளையிட்டு ஓட்டை போட்டிருக்கிறார்கள். சில இடங்களில் கருங்கல்லால் செய்யப்பட்ட ஸ்டாண்டில் கியூ செல்வதற்கான கம்பியை வைத்திருக்கிறார்கள், ஆனால், அந்த சிறிய ஸ்டாண்டுக்குப் பொருந்தாதபடி கம்பிகள் மிகவும் பெரிதாக உள்ளன. அதனால், கம்பிகளைக் கயிற்றால் கட்டி வைத்திருக்கிறார்கள். இது பக்தர்களை மிகுந்த சிரமத்துக்கு ஆளாக்குவதுடன், ராமாநுஜர் சந்நிதிக்கும் மணவாள மாமுனி சந்நிதிக்கும் பக்தர்கள் செல்லவும் இடையூறாக இருக்கிறது.

புரட்டாசி மாதத்தில் வழக்கத்தைவிடவும் அதிக அளவிலான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிர்வாகம் சரிவரச் செய்வது இல்லை. குடிநீர் வசதி போதிய அளவில் செய்யப் படவில்லை. கோயிலுக்கு அருகில் இருக்கும் வீடுகளிலோ அல்லது கடைகளிலோதான் தண்ணீர் வாங்கிக் குடிக்க வேண்டும் என்று குறைபட்டுக் கொள்கிறார்கள் பக்தர்கள்!

சரி, கோயில் திருக்குளத்தைப் பார்க்கலாம் என்று போனால், அதுவும் சரியாகப் பராமரிக்கப் படாமல் இருக்கிறது. மழை பெய்தால் திருக்குளத்துக்கு மழைநீர் வருவதற்கான நீர்வழிப் பாதைகள் அடைபட்டுவிட்டன!'

நாரதர் உலா

''அந்தத் திருக்குளத்தில்தானே வேதவல்லித் தாயார் அவதரித்த தாகச் சொல்வார்கள்? அந்தக் குளத்துக்கே இப்படி ஒரு நிலைமையா?''

''ஆமாம். ஞாபகம் இருக்கிறதா... இதே போன்ற பிரச்னை எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போதும் ஏற்பட்டது. ஆனால், அவர் உடனே நடவடிக்கை எடுத்து, பிரச்னை அப்போது சரிசெய்யப்பட்டுவிட்டது.'

'ஆனால், இன்றைய அரசு இந்தத் திருக் குளத்தைச் சீர்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக் குறிதான்.வேதவல்லித் தாயார்தான் கண் திறக்கவேண்டும். சரி, அங்கே வேறு என்ன பிரச்னைகள்?''

நாரதர் உலா

''கோயிலுக்குள்ளே பிரசாதம் செய்வதற்கு தனியாக மடப்பள்ளி உள்ளது. இங்கேயே அனைத்து ரக பிரசாதங்களும் ஐதீக முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக நினைத்துதான் பக்தர்கள் வாங்கிச் செல்கிறார்கள். ஆனால், பிரசாதம் செய்வதற்கு டெண்டர் எடுத்தவர் ஒரு சில பிரசாதங்களைத் தவிர, மற்றவற்றை திருவானைக்காவல் பக்கம் ஒரு ஃபேக்டரியில் இருந்து தயாரித்து எடுத்து வருகிறாராம். இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சிக் குள்ளாகியிருக்கிறார்கள் இப்பகுதி பக்தர்கள்.

கோயிலில் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்பது சாஸ்திரம். ஆனால், அரசின் அன்னதான திட்டத்துக்காக அவை அனைத்தையும் தாராளமாகப் பயன்படுத்து கிறார்கள். அதைவிட வேதனையான விஷயம் சொல்லவா? கோயில் அதிகாரி ஒருவரின் உத்தரவின்பேரில் வெங்காய பஜ்ஜி, போண்டா போன்ற தின்பண்டங்களை மடப்பள்ளியி லேயே தயாரித்து அவருக்குக் கொடுப்பதாக கோயில் வட்டாரத்தில் பலரும் பேசிக் கொண்டதைக் கேட்டேன்!''

''சமீபத்தில்கூட அங்கே ஊழியர்கள் ஏதோ பிரச்னை செய்ததாகக் கேள்விப்பட்டோமே, அதுபற்றி விசாரித்தீர்களா?''

''விசாரித்தேன். அந்தக் கோயில் அதிகாரி அங்குள்ள ஊழியர்களிடம் அருவருக்கத்தக்க வகையில் பேசுகிறாராம். அவர் பேசும் பேச்சு களை சகித்துக்கொள்ள முடியாமல் நான்கு மாதங்களுக்கு முன் ஊழியர்கள் பெரிய அளவில் பிரச்னை செய்து, அது செய்தித்தாள் களில் வரும் அளவுக்குப் போய்விட்டதாம்.

அதேபோல், தரிசனத்துக்கு வரும் பக்தர் களிடம்கூட கோயில் நிர்வாகத்தின் அணுகு முறை மிகவும் மோசமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். பக்தர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராத கோயில் நிர்வாகம், வி.ஐ.பிக்கள் வந்தால் மட்டும் விழுந்து விழுந்து கவனிப்பதாகச் சொல்லிக் குறைப்பட்டுக்கொள்கிறார்கள்!''

நாரதர் உலா

''பார்த்தசாரதி கோயிலில்கூட பாரபட்சமா?''

''ஆமாம். கோயிலில் உள்ள வாகனங்கள் மற்றும் தேரில் பொருத்தப்படும் பொம்மைகள் போன்றவை முறையாகப் பராமரிக்கப்படாமல் கிடக்கின்றன. உபயதாரர்கள் தங்கள் செலவில் புதுப்பித்துத் தர ஆர்வத்தோடு முன்வந்தாலும், ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி அனுமதி தராமல் இழுத்தடிக்கிறார்களாம். இதுதான் இப்படி என்றால், சம்ப்ரோக்ஷணத்தின்போது வாங்கப்பட்டு மீதம் இருக்கும் மரம் மற்றும் இரும்புத் தளவாடங்களை அப்படியே போட்டு வைத்திருப்பதால் உளுத்தும் துருப்பிடித்தும் பாழாகிக்கொண்டிருக்கிறது. அவற்றை ஏலத்தில் விட்டாலாவது கோயிலுக்கு வருமானம் கிடைக்கும். ஏனோ அதையும் செய்யாமல் இருக்கிறார்கள்...'

'அடேங்கப்பா..! பட்டியல் நீண்டுகொண்டே போகிறதே? பகவத் கீதை வழங்கிய பகவானின் கோயிலிலேயே இத்தனை பிரச்னைகளா? சரி, இவற்றைப் பற்றி கோயில் நிர்வாகத்திடம் பேசினீர்களா?''

''கோயிலின் துணை ஆணை யர் கோதண்டராமனைச் சந்தித்துப் பேசினேன். குடிநீர்ப் பிரச்னை இல்லவே இல்லை என்கிறார். கோயில் திருக்குளமும் சம்ப்ரோக்ஷணத்தின்போதே சரி செய்யப்பட்டுவிட்டதாம். பிரசாதம் வெளியில் இருந்தெல்லாம் தயாரித்துக் கொண்டு வரப்பட வில்லை, கோயில் மடப்பள்ளியில்தான் தயாரிக் கப்படுகின்றன என்று அடித்துச் சொல்கிறார்.'

'துணைஆணையர் கோதண்டராமன் சொல்வது உண்மையா என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்! அது போகட்டும்... வாகனங்களும் தேரில் பொருத்தப்படும் பொம்மைகளும் பராமரிக்கப் படாமல் இருப்பது பற்றிக் கேட்டீரா?'

நாரதர் உலா

'அவற்றை தை மாதம் நடைபெறும் தேரோட்டத்துக்கு முன்பாகச் சரி செய்து விடுவார்களாம். மரம் மற்றும் இரும்புத் தளவாடங்களை ஏலம் விடாமல் வைத்திருப்பது பற்றியும் கேட்டேன்.

பெருமளவு தளவாடங்களை ஏலம் விட்டுவிட்டதாகவும், மரச்சாமான்கள் எதிர்பார்த்த தொகைக்கு ஏலம் போகாததால் விற்பனை செய்யவில்லை என்றும் சொன்னார். எப்படியோ, சீக்கிரம் நல்லது நடந்தால் சரி!' என்ற நாரதர், சட்டென்று மாயமானார்.