குஜராத் மாநிலம், போர்பந்தரில் குசேலர் ஆலயம் அமைந்துள்ளது. இதை சுதாமா கோயில்

என்கின்றனர். கோயில் சுவர்களில் கிருஷ்ண பகவானின் லீலைகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவற்றில், குசேலர் அன்புடன் தரும் அவலை கிருஷ்ணர் உண்ணும் காட்சியும் உள்ளது.

இடது கை இடுப்பில் தாங்கி நிற்க, வலது கையில் சாட்டையுடன், வலது காலை ஒரு மேட்டிலும், இடதுகாலை பள்ளத்திலுமாக வைத்தபடி, சிறிய பால்குடம் ஒன்றை சுமந்திருக்கும் சிரத்தை சற்றே வலப்புறமாக சாய்த்தபடி அழகு தரிசனம் தரும் கிருஷ்ணனை, சென்னைக்கு அருகில் பொன்னேரியிலுள்ள கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில் மூலவராகத் தரிசிக்கலாம்.

கண்ணன் தன் புல்லாங்குழல் இசையால் கோபியரைக் கவர்ந்த இடம் 'வம்சீவட்’ என்பதாகும். 'வம்சீ’ என்றால் புல்லாங்குழல்; 'வட்’ என்றால் ஆலமரம். இங்கிருக்கும் மூலவரின் திருநாமம் வம்சீவட்விஹாரி. இங்குள்ள ஆலயத்தில், கிருஷ்ணன் பல வடிவமெடுத்து கோபியருடன் லீலை புரிவதை ஓவியமாய்த் தீட்டி வைத்திருக்கிறார்கள்.

கேரளாவில் திருச்சம்பரம் எனும் இடத்தில் கிருஷ்ணர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்கே அதிகாலையில் கர்ப்பக்கிரக கதவுகள் திறந்ததும் நிர்மால்ய பூஜை, ஆராதனை என்ற விதிமுறைகள் ஏதுமின்றி முதலில் சூடான பச்சரிசி சாதம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதன்பிறகே அன்றாட பூஜைக்கு உரிய பணிகளும், மற்ற வழிபாடுகளும் நடைபெறுகின்றன. வலக் கரத்தில் ஒரு சிறிய குச்சியும், இடது கரத்தில் சங்கையும் வைத்துக் கொண்டு, வெள்ளி அங்கியைப் போர்த்தியபடி அழகுக்கோலம் காட்டுகிறார் இங்கு அருளும் கிருஷ்ணபகவான்.

குருவாயூரில் திருப்புக்கா தரிசனம் என்பது இரவு நேர தரிசன மாகும். அப்போது, பகவானின் திவ்ய திருவுருவத்தின் முன்பு எட்டு வாசனைப் பொருட்களை தூபமாகப் பயன்படுத்துவார்கள்.

எஸ்.ராமச்சந்திரன், சென்னை - 4