Published:Updated:

துளசி பூஜை!

துளசி பூஜை!

துளசி பூஜை!

துளசி பூஜை!

Published:Updated:

துளசி பூஜை! 

நமது இந்திய கலாசாரத்துக்கு பெருமை சேர்ப்பது, 'அனைத்து பொருட்களிலும் பகவான் ஊடுருவியிருக்கிறான்’ எனும் தத்துவம்தான். ஆகவேதான் தெய்வங்களை மட்டுமில்லாமல் செடிகொடிகள், மரங்கள் என அனைத்தையும் நாம் பூஜித்து மகிழ்கிறோம். அவ்வகையில் துளசிச் செடியும் பூஜிக்க உகந்த பொக்கிஷமாகத் திகழ்கிறது.

பகவானின் சாந்நித்தியம் நிறைந்த துளசிக்கு பிருந்தா என்று மற்றொரு பெயரும் உண்டு. பிருந்தையாகிய துளசிதேவி மகா விஷ்ணுவிடம் ஐக்கியமான திருநாள் ஐப்பசி (அமாவாசைக்குப் பிறகு வரும்) சுக்லபட்ச துவாதசி திதி. ஆகவேதான் இந்த தினத்துக்கு 'பிருந்தாவன துவாதசி’ எனப்பெயர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெல்லிக்கனி அல்லது நெல்லி மரக்கிளையை, துளசிச்செடியுடன் வைத்து, முறைப்படி துளசியில் பிருந்தா தேவியையும், நெல்லிக்கனி அல்லது கிளையில் மகாவிஷ்ணுவையும் ஆவாஹனம் செய்து துளசி விவாஹ பூஜையைச் செய்வார்கள். விசேஷ பலன்களை தரும் இந்த பூஜையை திருமணமான பெண்கள் அனைவரும் தினந்தோறும் செய்யலாம். மகாவிஷ்ணு மற்றும் துளசிதேவிக்கு உரிய துதிப்பாடல்களை யும் ஸ்லோகங்களையும் பாடி அனுதினமும் வழிபடுவதால், அந்த வீட்டில் தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; மகிழ்ச்சி பெருகும்.

துளசி பூஜை!

அனுதினமும் விரிவான பூஜை செய்ய இயலாதவர்கள், கீழ்க்காணும் ஸ்லோகத்தைக் கூறி துளசியை நமஸ்கரிக்க  சகல சம்பத்துகளும் உண்டாகும்.

துளசி வந்தனம்

துளஸி ஸ்ரீ சகி ஸுபே பாபஹாரிணி புண்யதே

நமஸ்தே நாரதநுதே நாராயண மன:ப்ரியே

கருத்து: திருமகளின் தோழியும், பாபத்தைப் போக்கி புண்ணியம் அருள்பவளும், நாரதரால் வணங்கப்பட்டவளும், நாராயணரின் மனதுக்குப் பிரியம் உடையவளுமான துளசிதேவியே உன்னை வணங்குகிறேன்.

ஜெயலட்சுமி கோபாலன், சென்னை - 64