ரமண முத்துக்கள்
* அருளின் உயர்ந்த வடிவம் மௌனமாக இருப்பதாகும். வலிமையற்ற மனம் படைத்தவர் களால் மௌனமாக இருக்க முடியாது.
* நான் யார் என்ற கேள்வியைக் கேளுங் கள். பதிலை உங்களுக்குள்ளே தேடுங்கள். பிறவியைத் தவிர்க்கும் உபாயம் இதுவே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
* குப்பையை ஆராய்வதால் பயன் விளைவதில்லை. அதுபோல, பிரபஞ்சத்தை ஆராய்வதாலும் பயன் இருக்கப் போவதில்லை. நமக்குள் இருந்து இயக்கும் ஆண்டவனைத் தேடுங்கள்.
* இறைவன் நமக்குள் இருக்கிறான் என்று தெளிவாக உணர்ந்தவர்கள் தவறு செய்வதில்லை. தெரியாமல் தவறு செய்துவிட்டாலும் அதற்காக வருந்தி உடனே தங்களைத் திருத்திக் கொள்வார்கள்.

* அகந்தை இருக்குமிடத்தில் ஆண்டவன் ஒரு நிமிடம்கூட இருக்கமாட்டான். நான், எனது என்று ஆணவத்தோடு எண்ணிக் கொண்டு செயலாற்றுபவர்கள் ஒருக்காலும் ஆண்டவனை அடையவே முடியாது.
* ரயில் ஓடும்போது அதில் பயணிக்கும் நாம் நம் சுமையைத் தூக்க வேண்டிய தில்லை. அது போல, ஆண்டவனிடம் நம்மை ஒப்படைத்த பின்பு, உலகியல் பிரச்னைகள் நம்மை அழுத்துவதில்லை.
* அரைகுறையாக ஆண்டவனை நம்புவதால் ஒரு பயனும் இல்லை. முழுமையாக சரணாகதி அடைந்தால் அவன் பார்வை நம் மீது விழும்.

உணவுப் பொருட்களை வீணடிப்பது வறுமையை உதாசீனம் செய்கிற செயல் மட்டுமல்ல; உழைப்பை அவமதிக்கிற செயலாகவும் கருதப்பட வேண்டும்.
- twitter.com/kartik_sri
உன் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள். மனித உடலைக் காட்டிலும் சிறந்த புனித ஸ்தலம் வேறு எதுவும் இல்லை. கீதை படிப்பதை விட கால் பந்து விளையாடு! - விவேகானந்தர்.
- twitter.com/hashini1005
மனத்தில் வேற்றுமை இல்லாமல் மண்ணுலகில் இருக்கின்ற அனைத்தையும் நேசித்திடும் ஒருவனே ஆண்டவனை சரியாகத் தொழுபவன்.
- twitter.com/ajithsubburam
இன்பத்தின் ரகசியம் எதில் அடங்கியிருக் கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல; நீ செய்வதை விரும்புவதில்தான்.
- twitter.com/DivyaCitra
கொடை என்பது கொட்டிக் கொடுப்பதல்ல;
கொடுக்க வேண்டிய தருணத்தில் கொடுப்பது.
- twitter.com/sisitharan
யானை மனசு!
ஒரு நாளின் பெரும் பான்மையான நேரத்தில் நடந்தபடியே இருக்கும் மிருகம் - யானை. என்னதான் அதைப் பிடித்து வைத்து ஓரிடத்தில் நிற்கப் பழக்கப்படுத்தி இருந்தாலும், பாவனையாகவாவது நடப்பதுபோல் கால்களை மாற்றி மாற்றி வைத்து அசைந்துகொண்டே இருக்கும். அதுதான் அதன் இயல்பு!
ஆனால், அதன் துதிக்கையில் சின்னதாக மரத்துண்டையோ, ஏதாவது கழியையோ கொடுத்து விட்டால், அது தன் அசைவுகளை நிறுத்திகொண்டு அந்தப் பிடிப்பில் கவனமாக இருக்கும்.
இந்த யானையைப் போன்றதே நம் மனம். கழி அல்லது மரத்துண்டு என்பது இறைவனின் திருநாமம்; அல்லது, இறைவனின் திருவுருவம்.
புலவர் கீரன் எழுதியது...
www.facebook.com/ஆன்மிகத் தகவல்கள்
புலன் அடக்கம்!
மன்னர் ஒருவர் தன் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ஒவ்வொரு முனிவருக்கும் அழைப்பு விடுத்தார். பதஞ்சலி முனிவரும் தன் சீடர்களுடன் வந்தார். கொண்டாட்டம் எல்லாம் முடிந்து சீடர்களுடன் கிளம்பிச் செல்லும் வழியில், ‘‘குருவே, புலனடக்கம் பற்றி எங்களுக்கு உபதேசிக்கும் தாங்களே, எங்களை இங்கு அழைத்து வந்தது சரிதானா?’’ என்று ஒரு சீடன் கேட்டான்.
‘‘மகனே, புலனடக்கம் என்பது காட்டுக்குள் முடங்கிக் கிடப்பதல்ல. மனத்துக்கு சோதனை வைக்கும் இது போன்ற நிகழ்ச்சி களை எதிர்கொண்டாலும் அவற்றுக்கு அடிமையாகாமல் இருப்பதே புலனடக்கம். மன அடக்கம்தான் அனைத்திலும் பெரியது!’’ என்று குரு கூற, தெளிவு பெற்றான் சீடன்.
www.facebook.com/பக்திக் கதைகள்
சில மனிதர்களைப் பார்க்கும்போதே நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு பணிவும் மரியாதையும் குடிகொண்டுவிடும். வள்ளலார் இராமலிங்க சுவாமிகளைக் காண்போருக்கு அது போன்ற உணர்வு எழுந்ததாகப் படித்திருக்கிறேன்.

அது போன்று ஒரு உணர்வு இந்தச் சிற்பத்தைப் பார்த்தபோதும் எனக்குள் எழுந்தது. வைத்த கண்ணை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர்த்த இயலவில்லை. சிற்ப லட்சணமா... சிற்ப லட்சணத்தினால் குடியேறிய தெய்வ சாந்நித்யமா... ஒன்றும் புரியவில்லை. நீங்களும் கண்டு சிலிர்ப்படையுங்கள்!
(10 ஆம் நூற்றாண்டு-சோழர் காலம்)
வாசகர்களே! ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் என இணையத்தில் விரவிக்கிடக்கும் சுவாரஸ்யமான - பயனுள்ள ஆன்மிகத் தகவல்களின் தொகுப்பே, இந்த வலைத் `தலம்' பக்கம்! மேற்சொன்னவற்றில் உலா வரும் உங்களுடைய ஆன்மிகப் பதிவுகளும் இங்கே பிரசுரமாக வாய்ப்பு உண்டு. தொடர்ந்து கவனியுங்கள்!