Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்வினி நட்சத்திரம், மூன்று தாரங்களை (தாரைகளை) உள்ளடக்கியது; குதிரை வடிவம். ராசி புருஷனின் சிரசில் இடம் பிடித்த நட்சத்திரம். எண்ணிக்கையில் முதலாவது நட்சத்திரமும் இதுவே! இதன் தேவதை, அஸ்வினி தேவர்கள். தேவலோக மருத்துவர்கள்; தேவர்களுக்குச் சுகாதாரத்தை அளிப்பவர்கள்.

வேள்வியின் சிரம் துண்டிக்கப்பட்டது. மருத்துவ இரட்டையர்களான அஸ்வினி தேவர்களுக்குக் கட்டளையிட்டான், இந்திரன். அவர்கள், உடலையும் தலையையும் ஒட்டவைத்தனர். வேள்வி உயிர் பெற்றது. அந்த வேள்வியின் மூலமாக, தேவர்களுக்கு உணவு தடங்கலின்றி வந்து சேர்ந்தது என்கிற தகவல் வேதத்தில் உண்டு (யஞ்யஸ்யசிரோச்சித்யத...).

தேவர்களின் அருளுடன் இணைந்தது அஸ்வினி நட்சத்திரம். நம் உடலில், கைகளில் வலிமை, அவர்கள் அருளில் வலுப்பெறும் என்கிறது வேதம் (அச்வினோர் பாஹீப்யாம்). நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். 27 நட்சத்திரங்களையும் நான்கு பாதங்களாகப் பிரிக்கும் போது, 108 நட்சத்திர பாதங்களாக விரிவடையும். 12 ராசியிலும் அது பரவியிருப்பதால், அதன் தாக்கம் ராசிகளுக்கு ஊக்கம் அளிக்கும். 1 0 8=9 கிரகங்களும் நட்சத்திர பாதங்களுடன் இணைந்து, பலனை இறுதி செய்யும். 108-ல் ராசிச் சக்கரம் முழுமை பெற்றதால் 108 தடவை அர்ச்சனையை முழுமை பெற்றதாக ஏற்கிறோம்.

அஸ்வினியில், முதல் பாதத்தில் செவ்வாய் இணைந்திருப்பான். இரண்டில் சுக்கிரனும் மூன்றில் புதனும் நான்கில் சந்திரனும் இருப்பார்கள். நட்சத்திர பாதங்கள் நவாம்சத்தை உருவாக்கி, பலன் சொல்லுவதில் மாறுதலைத் தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திர பாதத்துடன் இணைந்த கிரகங்கள், பாதத்துக்குப் பாதம் மாறுபட்ட பலனைச் சுட்டிக்காட்டுவதால், ஒரே நட்சத்திரத்தில் பிறந்தாலும், அவர்களின் இயல்பில் மாறுபாட்டுக்குக் காரண மாகிறது. அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவன், அம்சகத்தில் மேஷத்தில் வருவதால், அம்சகத்திலும் ராசியிலும் சந்திரன் மேஷத்தில் இருப்பதால், அவனுக்கு வர்கோத்தமம் எனும் தகுதி உண்டு. (சுபம் வர்கோத்தமேஜன்ம). அதை ஏற்படுத்தியது நட்சத்திர பாதம்.

ராசியிலும் அம்சகத்திலும் செவ்வாயுடன் இணைந்திருக்கும் பெருமை பெற்றதால், அவனுடைய பிறப்பின் தகுதி சிறப்பு பெற்றுத் திகழ்கிறது. மற்ற கிரகங்களுடன் ராசியும் சேர்ந்து, நட்சத்திர பாதம் இணைந்திருந்தாலும் வர்கோத்தமத்தின் பங்கு வலுப்பெற்றிருப்பதால், பலன் சொல்லும் விஷயத்தில் நட்சத்திரத்தின் பங்குக்கு முக்கியத்துவம் இருப்பதைத் தெரிவிக்கிறது ஜோதிடம்.

##~##
லேசான, அதாவது கனம் குறைந்த நட்சத்திரங்களில் அஸ்வினியும் ஒன்று. 64 கலைகள், குறிப்பாக பொதுக்கல்வி, கிரய - விக்ரயம் (பல்பொருள் அங்காடி), பொருளாதாரத்தை வலுவாக்குதல், கைவேலைப்பாடுகள், மருந்து வகைகள், பயணம் ஆகியவற்றுக்கு அஸ்வினி நட்சத்திரத்தின் இணைப்பு, வெற்றிக்கு வழி வகுக்கும் என்கிறார் வராஹமிஹிரர் (லகுஹஸ்தாச்வின...).

முற்பிறவியின் கர்மவினையே, உடலெடுக்கக் காரணமாகிறது. வருகின்ற இன்ப - துன்பங்களுக்குத் தக்கபடி, ஒருவரின் தோற்றம் இருக்கும். பிறக்கும் வேளையில் உள்ள நட்சத்திர பாதத்தின் இணைப்பு, வரக்கூடிய இன்ப - துன்பங்களுக்கு ஆதாரமாகிவிடும்! அழகிய தோற்றம், ஆடை-அணிகலன்களில் ஆர்வம், அன்புடன் பழகுகிற பண்பு, காரியத்தில் நேர்த்தி, தெளிவான சிந்தனை ஆகியவை அஸ்வினி நட்சத் திரத்தில் தோன்றியவரின் இயல்பு! அவர்கள், சிந்தனை வளத்துடனும் சுகாதாரத்துடனும் இருப்பார்கள். மருத்துவ ஆர்வம், கொடை வழங்கும் இயல்பு, பொருளாதாரம், வேலைக்கு ஆட்கள், மனைவி என அனைவரையும் இணைத்துக் கொண்டு, அரவணைத்த படி செயல்படும் திறமைசாலிகள் என்கிறார் பராசரர்  (விஞ்ஞானவானரோகி).

முதல் பாதத்தில் பிறந்தால், பிறர் பொருள் மீது ஆசைப்படுவர். இரண்டாவதில் பிறந்தால், உடல் உழைப்பைக் குறைத்துக் கொள்வர். மூன்றாவதில், எல்லோருக்கும் பிரியமாக இருப்பர். நான்காவதில், நீண்ட ஆயுளுடன் வாழ்வர் என 4 பாதங்களுக்கும் தனித்தனி பலனைச் சொல்லியுள்ளார் வராஹமிஹிரர். பாதத்துக்குப் பலன் சொல்லும் விஷயத்தில், அதில் இணைந்த குறிப்பிட்ட கிரகத்தின் தாக்கத்தால்,  இயல்பு மாறுபட வாய்ப்பு உண்டு. ஆகவே, பாத பலன்... நம்பிக்கைக்கு உகந்தது!

அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவன் மேஷ ராசி. மேஷத்துக்கு அதிபதி, செவ்வாய். முதல் பாதத் திலும் செவ்வாய் தனிப்பட்ட முறையில் இணைந்திருப்பான். அவனுடைய பூர்வ புண்ணிய ஸ்தானம் (5) சிம்மம். அதில் முதல் நட்சத்திரம், மகம். முதல் பாதத்தில் செவ்வாயின் தொடர்பு உண்டு. அவனுடைய அதிர்ஷ்டம், 9-வது (தனுர்) ராசி; அதில் முதல் நட்சத்திரம் மூலம். அதன் முதல் பாதத்துக்கு செவ்வாயின் தொடர்பு உண்டு. பிறந்த நட்சத்திர பாதம், ஒருவரின் பூர்வ புண்ணியத்தைத் தெரிவிக்கும் நட்சத்திர பாதம், அதன் செழிப்பை வரையறுக்கும் அதிர்ஷ்டம் (கண்ணுக்குப் புலப்படாத பூர்வ புண்ணியம்), அதைச் சுட்டிக்காட்டும் நட்சத்திர பாதம் ஆகியவை செவ்வாயுடன் இணைந்திருப்பதால், ஆசைக்குக் கட்டுண்டு, எதையும் ஆராயாமல், சடுதியில் செயல்பட்டு, பிறர் பொருளைக் கவருவதிலும் ஒருவித துணிச்சல் ஏற்பட்டுவிடும். அஸ்வினி, மகம், மூலம் ஆகிய மூன்றில், 1,5,9 ஆகிய பாவங்கள் தென்படுவதால், நூல் பிடித்தது போல் தொடர்பு இருப்பதால், இந்த மூன்றுக்கும் ரஜ்ஜு என்ற பெயரைப் பயன்படுத்தினார்கள்! இரண்டு, மூன்று மற்றும் நான்காவது பாதங்கள், மாறுபட்ட கிரகங்களுடன் இணைந்திருப்பதால், ஒரே நட்சத் திரமானாலும் பாதத்துக்கு மாறுபட்ட பலனை அளிக்க கிரகங்களின் பங்கு உதவுகிறது. இந்த மூன்று நட்சத்திரங் களுக்கும் கேது தசை ஆரம்பம் என்கிறது ஜோதிடம்.

பலன் சொல்லும்போது (குஜவத்கேது:), அதாவது செவ்வாய்க்கு உகந்த பலனை ஏற்கச் சொல்கிறது ஜோதிடம். மூன்று நட்சத்திரங் களிலும் முதல் பாதத்தில் செவ்வாயின் இணைப்பு, பலனை செவ்வாயுடன் இணைத்துச் சொல்லவும் பரிந்துரைக்கிறது.

பிறப்பின் வேளையுடன் (லக்னம்) முதல் பாதம், மிகவும் நெருங்கி இருப்பதால், தசாகாலத்தை நிர்ணயிப்பதில் நட்சத்திரத்துக்கு முன்னுரிமை அளித்தது ஜோதிடம். கிரகங்களின் உயிரோட்டத்துக்கு நட்சத்திர பாதங்களின் இணைப்பு அவசியம். பலனை இறுதி செய்ய நட்சத்திர பாதத்தை எதிர்பார்க்கும் கிரகங்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி சனி என அத்தனை கிரகங்களும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் இணைந்திருக்கும். ராசி, ஹோரா, த்ரேக்காணம், ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்ரிம்சாம்சம் ஆகிய பிரிவுகளில் அத்தனை கிரகங்களுடைய இணைப்பும் கிடைத்துவிடும். ஒட்டுமொத்தமான கிரகங்களையும் தன்னில் அடக்கிக் கொண்டு, அதன் தரத்துக்கு உகந்த முறையில், தன் பங்கையும் சேர்த்துப் பலன் அளிக்கும் பொறுப்பு, நட்சத்திரத்துக்கு உண்டு.

பூர்வ ஜன்ம கர்மவினையின் வடிகாலாக நட்சத்திரங்கள் செயல்படுகின்றன. 12 ராசி களிலும் பரவலாக எல்லா கிரகங்களும் இணைந்திருந்தாலும் கர்மவினையின் பலனை வரிசைப்படுத்த நட்சத்திரத்தின் துணையை நாடுகின்றன எனும் தகவல், நட்சத்திரங்களின் சிறப்புக்குச் சான்று.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

பிறப்பெடுத்த ஒருவர், பல பொருட்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இன்ப - துன்பத்தை ஏற்கிறார். தசா புக்தி அந்தரங்கள், அவற்றை நடைமுறைப்படுத்துகின்றன என்பது உண்மை. ஆனாலும் எது முந்தி, எது பிந்தி என்கிற அட்டவணையை நட்சத்திரங்களே வரையறுக்கின்றன. வாழ்வின் துவக்கத்தில், சிலருக்கு இன்பமும் சிலருக்கு துன்பமும் ஏற்பட தசைகளின் அட்டவணை காரணமாகிறது. அந்த அட்டவணைக்குக் காரணம், நட்சத்திரம். எனவே, கர்மவினையை வெளியிடும் கருவியாகச் செயல்படுகின்றன நட்சத்திரங்கள்!

மிருதுவான (லேசான) அஸ்வினியின் இணைப்பு எல்லா சுபகாரியங்களுக்கும் சிறப்பைச் சேர்க்கும். முகூர்த்தங்கள் அல்லாத அலுவல்களுக்கும் அது வலுவூட்டும். ராசி புருஷனின் தலை மேஷ ராசி. அதில் இணைந் திருப்பது அஸ்வினி. சிந்தனையுடன் செயல்படும் திறமையை அளிக்கும் அது, விபரீதமான கிரகங்களுடைய சேர்க்கை வலுப்பெற்றிருக்கும் போது, சிந்தனை மங்கிச் செயல்பட முடியா மல் செய்யவும் வாய்ப்பு உண்டு! தவிர, பூர்வ ஜன்ம வினையை அளப்பது 5-ஆம் இடம்; அதன் அளவை வரையறுப்பது 9-ஆம் இடம்! இவற்றின் விபரீதமான போக்கு, நட்சத்திரத்தின் தனிப்பலனை முடக்கிவிடும். நட்சத்திரங்களோ கிரகங்களோ, தனியாகவோ ஒன்று சேர்ந்தோ தன்னிச்சையாக பலன் அளிக் காது. கர்மவினையின் பலனை வெளிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதுதான் அதன் வேலை. ஆகவே அவற்றுக்கு சுதந்திரம் இல்லை! உச்சம், நீசம், மூல த்ரிகோணம், வர்கோத்தமம், ஸ்வக்ஷேத்திரம், அஸ்தமனம், மௌட்யம், வக்ரம் போன்ற கிரகங்களின் நிலைகள், கர்மவினையின் தரத்துக்கு உகந்த பலன் அளிப்பதை வரையறுக்கின்றன. பிறக்கும் வேளையில் அமைந்த கிரகங்களின் தரத்துக் குக் காரணம், ஒருவரது கர்மவினை. இதன் வெளிப்பாட்டுக்குத் தக்கபடியே கிரகங்கள் செயல்படும். நட்சத்திரங்களும் அவ்விதமே செயல்படும்! ஆகவே, நட்சத்திரங்களை வழிபட்டு, கர்மவினையை செயல்படாமல் தடுக்க முற்பட்டு, துன்பத்தில் இருந்து வெளிவர வேண்டும்.

பூஜை, தியானம், வழிபாடு போன்றவை தவறான கர்மவினையை (பாபத்தை) கரைத்து விடும். நட்சத்திரங்களும் கிரகங்களும் இல்லாத (கரைந்த), கர்மவினையை நடைமுறைப்படுத்தாது. போதிய எண்ணெய் விட்டு, திரியைப் போட்டு, விளக்கேற்றுகிறோம். திரியின் நுனியில் இருக்கும் ஒளி, திரியை அழிக்காமல், திரி வழியே எண்ணெயின் தொடர்பில், எரிந்து கொண்டிருக்கும். அதில் இருக்கும் எண்ணெயை முழுமையாகத் துடைத்தெடுத்துவிட்டால், திரியை எரித்து, தானும் எரிந்துவிடும். அதேபோல, சேமித்த விபரீத கர்மவினையை, பரிகாரங்களால் அழித்துவிட்டால், திறமையான கிரகங்களும் செயலிழந்துவிடும். ஆகவே, மனதின் செயல்பாட்டைத் திருப்பிவிட்டு, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட வைக்கும் தருணத்தில், தப்பான கர்மவினை கரையாமல் இருந்தாலும், சிந்தனையில் நுழைய அவகாசமின்றிப் போய்விடும். அப்போது, துயரம் தொடாமல் இருந்துவிடும்.  

அஸ்வினி நட்சத்திரத்துக்கு தொடர்பு உடைய அஸ்வினி தேவர்களை வழிபட வேண்டும். 'அம் அச்வினீ குமாராயநம:’ என்று சொல்லி வழிபடலாம். அல்லது 'அச்விப்யாம் நம:’ என்று சொல்லி வணங்கி வழிபடலாம்.

காலையில் எழுந்ததும் அவனுடைய நாமத்தை மனதில் நிறுத்தி வேண்டிக் கொண்டு, அன்றைய கடமையில் இறங்குங்கள். அஸ்வினி தேவர்கள், உங்களுக்கு சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வார்கள்!

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism