பஞ்ச ஆரண்ய தலங்கள்...
ஒரே நாளில் உஷத் கால பூஜை தொடங்கி அர்த்தஜாம பூஜை வரை தரிசிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன பஞ்ச ஆரண்ய தலங்கள். இந்தத் தலங்களுக்குச் செல்லும் விதம் இங்கே வரைபடமாக உள்ளது. சிவப்பு வண்ணத்தில் இருக்கும் வழியாகச் சென்றால், ஐந்து தலங்களையும் வரிசைப்படி தரிசிக்கலாம்.
1. திருக்கருகாவூர் (கும்பகோணத்திலிருந்து 22 கி.மீ.)
இறைவன்: முல்லைவனநாதர்
அம்பாள்: கர்ப்பரட்சாம்பிகை
பலன்: குழந்தைப் பேறு, சுகப் பிரசவம் வேண்டி வழிபடுவதற்கு உகந்த கோயில்
வழிபடவேண்டிய நேரம்: காலை 530 முதல் 600 மணிக்குள் உஷத்கால பூஜை.
2. திருஅவளிவநல்லூர்
இறைவன்: சாட்சிநாதர்
அம்பாள்: சௌந்தரநாயகி
பலன்: இனிய குடும்ப வாழ்க்கை அமையும்
வழிபடவேண்டிய நேரம்: காலை 830 முதல் 930 மணி வரை காலை பூஜை
தெளிவாக படிக்க படத்தை க்ளிக் செய்யவும்

3. திருஅரதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்)
இறைவன்: பாதாளேசுவர்
அம்பாள்: அலங்காரநாயகி
பலன்: நவகிரக தோஷங்கள் விலகும்.
வழிபடும் நேரம்: 11 முதல் 1230 மணி வரை உச்சிக் கால பூஜை
4. திருஇரும்பூளை (ஆலங்குடி)
இறைவன்: ஆபத்சகாயேஸ்வரர்
அம்பாள்: ஏலவார்குழலி
இங்கு தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மிகவும் விசேஷம்.
பலன்: குரு தோஷங்கள் விலகவும். கல்வியில் தேர்ச்சி பெறவும் திருமணத் தடை விலகவும் இங்கு வழிபடலாம்.
வழிபடும் நேரம்: மாலை 530 மணிமுதல் 600 மணிவரை சந்தியா கால பூஜை
5. திருக்கொள்ளம்பூதூர்
இறைவன்: வில்வாரண்யேஸ்வரர்
அம்பாள்: சௌந்தரநாயகி
பலன்: சித்த பிரமை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நலம் பெறலாம்
வழிபடும் நேரம்: இரவு 730 மணி முதல் 830 மணிவரை அர்த்தஜாம பூஜை