சக்தி விகடன் நடத்திய 175வது திருவிளக்கு பூஜை, கடந்த 6.10.15 அன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

சென்னை மட்டுமில்லாது திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், பாண்டிச்சேரி என பல்வேறு ஊர்களில் இருந்தும் பெரும் திரளாக வந்து வாசகர்கள் கலந்துகொண்டனர்.

''கடவுளை ஒளி வடிவமாகவே எல்லா மதங்களும் பார்க்கின்றன. மகான்கள் பலரும்கூட 'ஒளியே கடவுள்’ என வலியுறுத்தியிருக்கிறார்கள். திருவிளக்கு பூஜையும் ஒளி வழிபாடு நம் வாழ்வில் ஒளியேற்றும் வழிபாடு! விளக்கேற்றும்போதெல்லாம் நமது பாவங்கள் கழிந்துகொண்டே போக, புண்ணியங்கள் பெருகிக்கொண்டே இருக்குமாம். எனவே, தினமும் விளக்கேற்றி வழிபடுங்கள்...'' சிறப்பு விருந்தினர் பி.என்.பரசுராமன் விவரிக்க, இனிதே துவங்கியது திருவிளக்கு பூஜை. மேடையில் ஆளுயர விளக்கு தீபலக்ஷ்மியாக அலங்கரித்து வைக்கப்பட்டிருக்க, லலிதா சகஸ்ரநாம பாராயணத்தைத் தொடர்ந்து அஸ்வத்தாமா குருக்கள், சண்முகானந்தா சிவாச்சார்யர் ஆகியோர் சிறப்பாக பூஜையை நடத்தி வைத்தனர். கவிஞர் மாம்பலம் சந்திரசேகர் மண்டபத்தை இலவசமாக வழங்கியிருந்தார். விளக்கு பூஜையில் கலந்துகொண்ட வாசகிகளுக்கு, குபேர விளக்குடன் மங்கலப்பொருட்களையும் தட்சிணையுடன் வழங்கினர் முருகேசன் சுகுணா தம்பதியர். மேலும், பக்திமாமணி சாஸ்தா தாசன் பாடி, எஸ்.வெங்கடேசன் தயாரித்த 'பிரதோஷ நாயகா’ என்ற ஆன்மிக பாடல்கள் அடங்கிய சி.டியும் வாசகர்களுக்கு வழங்கப்பட்டது. கூடுதல் சிறப்பாக... 'சிவாச்சார்யர் அறக்கட்டளை’ சார்பில், காளிகாம்பாள் சந்நிதியில் பூஜிக்கப் பட்ட ரட்சையும், அம்பாளின் திருவுருவப்படமும் பிரசாதத்துடன் வழங்கப்பட்டது குறித்து வாசகியர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அவர்களின் இந்த மகிழ்ச்சி இன்னும் பல்கிப் பெருக, தீபத்தில் வாசம் செய்யும் மகாலட்சுமி அருள்பாலிக்கட்டும்; அவர்கள் இல்லத்தில் லட்சுமிகடாட்சம் பொங்கிப் பெருகட்டும்.

படங்கள்: தி.குமரகுருபன்