Published:Updated:

ஈச்சங்குடியில் கும்பாபிஷேகம்!

ஜெயபிரகாஷ்

திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள ஈச்சங்குடி கிராமத்தில், 'கல்யாண சாஸ்தா’ என்று அழைக்கப்படும் ஐயனார் கோயில் அமைந்துள்ளது. 

இந்தக் கோயிலில் கருப்பசாமி, செல்லியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுடன் ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்கலா சமேதராக, அழகுடனும் பூரண சாந்நித்தியத்துடனும் காட்சி தருகிறார் இந்த ஐயனார்.

இந்த ஊருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. காஞ்சி மஹாபெரியவாளின் தாய்வழிப் பாட்டனாரின் ஊர் இது. தவிர, பெரியவா தமது ஐந்து வயது வரை, தாயார் மகாலட்சுமி அம்மாளுடன் இந்த ஊரில்தான் வசித்து வந்தாராம். எனவே, காஞ்சி மகா பெரியவா இந்தக் கோயிலுக்கு பலமுறை வந்து ஸ்வாமி தரிசனம் செய்திருக்கிறார். மேலும், ஈச்சங்குடியில் மகாபெரியவாளின் தாயார் பெயரில் வேதபாடசாலை ஒன்று தொடங்கப்பட்டு, இன்றளவும் நல்ல முறையில் இயங்கி வருகிறது. 'இவர் கல்யாணம் முதலான வரங்களைத் தரக்கூடியவர். எனவே, இவரை கல்யாண சாஸ்தா என்று அழைப்பதே சரி!’ என ஐயனாருக்கு இந்தத் திருநாமத்தைச் சொல்லி அருளினாராம் மகாபெரியவா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஈச்சங்குடியில் கும்பாபிஷேகம்!

பல வருடங்களுக்கு முன்பு, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கோயிலைச் சுற்றி உள்ள இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அப்போது கரையின் உடைப்பை அடைத்து, ஊருக்குள் வெள்ளம் வருவதைத் தடுத்து, ஊர் மக்களைக் காத்தருளினாராம் ஐயனார். அதனால், உடைப்பு காத்த ஐயனார் எனும் திருநாமமும் இவருக்கு அமைந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தத் திருக்கோயில் காலப்போக்கில் சிதிலம் அடைந்துவிட்டது. அதுகுறித்து, 11.11.14 தேதியிட்ட சக்திவிகடன் இதழில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம்.

தற்போது இந்தத் திருக்கோயிலின் கும்பாபி ஷேகப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வருகிற ஐப்பசி மாதம் எட்டாம் தேதி (25102015) மகா கும்பாபிஷேகம் வெகு சிறப் பாக நடைபெற இருக்கிறது. ஆன்மிக அன்பர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு ஸ்ரீதர்ம சாஸ்தாவின் அருளைப் பெறலாம்.