எல்லாம் வல்ல சிவப் பரம்பொருள் இவ்வுலகைப் படைத்து, அதில் ஆன்மாக்கள் சுக துக்கங்களை அனுபவித்து தன்னைச் சரணடையும்பொருட்டு மனிதனையும், இயற்கை வளங்களையும் படைத்து, நல்வழி கூறும் வேதம், புராணம், இதிகாசங்களையும் நமக்கு அருளியிருக்கின்றது.

இவற்றை நன்கு உணர்ந்தவர்களாகத் திகழும் ரிஷிகள், ஞான வழியில் இருந்து தவறும்போது, அவர்களைத் தடுத்தாட்கொள்ள இறைவன் அவதாரம் எடுப்பது உண்டு.

ஒருமுறை, தாருகாவனத்தில் கர்மத்தையே (வேள்வி) பிரம்மம் என எண்ணி, கர்மத்துக்குப் பயனளிக்கும் ஒருவர் உள்ளார் என்பதை அறியாமல் அஞ்ஞானத்தில் உழன்று வந்த முனிவர்களின் செருக்கை அடக்கியருள எடுத்த வடிவமே பிட்சாடன தோற்றமாகும்.

அதுவும் எப்படி..? உலகை மயக்கக்கூடிய மிக அழகிய, கோடி மன்மதனுக்கு இணையான வேடம் பூண்டு, விலைமதிக்கமுடியாத அணிகலன்களைப் பூட்டி, கால்களில் நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட பாதுகைகளை அணிந்து, வெண்மையான கௌபீனம் தரித்து, மலையருவி போன்ற பூணூலை அகன்ற மார்பில் தவழச் செய்து, உயர்ந்த தோளில் திருநீற்றுப் பையைப் பொருத்திக்கொண்டு, இடது கையில் பிரம்ம கபாலத்தையும், வலது கரத்தில் உடுக்கையையும் ஏந்தி, அழகிய புன்சிரிப்புடன் கூடிய உதட்டையும், நன்கு சுழித்த காதுகளையும், சந்திரன் போன்ற முகமும், கருமைநிற கஸ்தூரி திலகத்தினால் அலங்கரிக்கப்பட்ட நெற்றியும், நெருங்கி நீண்டு சுருண்ட கூந்தலும், பவளத் தளிரைப் பழிக்கும் மிருதுவான மேனியும் உடையவராகத் திகழும் பெருமான், மெள்ள தாருகாவனம் நோக்கி வந்தார்.

எம்பெருமான் அனைத்திலும் உள்ளவர். அனைத்தையும் தன்னுள்ளே சேர்ப்பவர். தன்னோடு அனைத்தையும் வியாபிக்கச் செய்பவர். அவ்வாறே, எல்லாவற்றிலும் வியாபிக்கும் விஷ்ணுவை மோகினி வடிவினளாகத் தன்னுடன் அழைக்கிறார். பரந்தாமனோ உலகில் உள்ள ஜீவகோடிகளின் மனதை ஏக காலத்தில் அபகரிக்கும்படியான பெண் உருவம் தாங்கி, பிட்சாடனருடன் தாருகாவனம் சென்றார். பரந்தாமனோடு பரமன் எடுத்த திருவுருவை

''அடியின் தொடுத்த யாதுகையும் இடைமிறும்

வடியிற் சிறப்ப நடந்தருளி முழையேந்தி மருங்கணைந்த

தொடியிற் பொலிதோள் முனி மகளிர்

சுரமங்கையரை மயல் ஊட்டிப்

படியிட்டெழுதாப் பேரழகாற் பலிதேர்

பகவன் திருவுருவம்

என்று காஞ்சி புராணம் வர்ணிக்கின்றது. இவ்வாறு பிட்சாடனராய் வந்த பெருமானைக் கண்ட ரிஷி பத்தினிகள் மோக வசப்பட்டு அவிழ்ந்த கூந்தலை ஒரு கையாலும், நழுவிய அரை வடத்தை ஒரு கையாலும் பற்றிக் கொண்டு பரவசத்துடன் பகவானை பார்த்துக் கொண்டே நின்றனர். மற்றும் சில மங்கையர்கள், மன்மதனை எரித்த புன்முறுவலைக் கண்டு ஆனந்தத்தில் 'அற்புதத் திருவுருவம் கொண்ட அன்பர் இவர் எமக்கு முன்னரே அறிமுகமானவராய் இருக்கிறார்’ என எண்ணி மகிழ்ந்தனர்.

அதே வேளையில், மோகினியை (பரந்தாமனை) சூழ்ந்துகொண்ட முனிவர்கள் மோகித்து நின்றனர். ஆனால், வயது முதிர்ந்த ரிஷிகள் ஒருவாறு மனதால் சிந்தித்து விசேஷ லக்ஷணம் பொருந்திய தம்பதியர் வேடத்தில் தங்களது தவத்தைக் கலைக்க வந்தவர்கள் யாராக இருக்கக்கூடும் என யோசிக்கலாயினர். அத்துடன் கற்பில் சிறந்த ரிஷி பத்தினிகளையும், தவ வலிமையுடைய ரிஷிகளையும் மோகிக்க வைத்த அந்தத் தம்பதிக்கு சாபமும் இட்டனர்.

இவர்களின் சாபங்கள் முப்புரம் எரித்த தேவனிடம் பயனற்றுப் போயின. எப்பாடு பட்டாயினும் மண்டை ஓடு ஏந்திய (பிச்சை பாத்திரம்) இக் கபாலியைக் கொன்றுவிட எண்ணி ஆபிசாரஹோமம் செய்து, ஹோமத்திலிருந்து எழுந்த அதிபயங்கரமான புலியை ஈசன் மீது ஏவினர். அதனை ஈசன் தன் நகங்களால் கிழித்து அதன் தோலை இடையில் தரித்துக்கொண்டார். ஹோமத்தில் தோன்றிய பூதத்தை ஏவியபோது, அப்பூதத்தை காலின் கீழ் போட்டு அதன் மீது நடனமாடினார். மேலும், முனிவர்கள் ஏவிய சர்ப்பத்தை தன் கரத்தில் கங்கணமாகத் தரித்துக் கொண்டும், கடும்தீயை கையில் ஏந்தியும், மஹா மந்திரங்களை தன் கால்களுக்கு சிலம்பாகவும் கொண்ட சிவனார் உக்ர தாண்டவமாடினார்.

ஈசனின் கோர தாண்டவத்தைத் தாங்க இயலாத ரிஷிகள் சுய நினைவற்று வீழ்ந்தனர்.

பின்னர் 'வேத நாயகன், வேதியர் நாயகன்’ என்றெல்லாம் மறைகள் போற்றும் பரமனார் உமாதேவியோடு காட்சியளித்து, அவர்களின் அறியாமையை அகற்றி அருள் புரிந்தார். மேற்கண்ட திருவிளையாட்டின் மூலம் ஆணவமாகிய யானை, குரோதமான புலி, வெறுப்பு எனும் அக்னி, கீழ்மை குணமான பூதம் இவற்றை பெருமான் ஏற்றுக்கொண்டார்.

நாமும் நமக்குள் இருக்கின்ற காம, குரோத, லோப, மத, மாத்சர்யங்களை பிட்சாடனருக்கு பிக்ஷையாக இட்டு அவருடைய அருளைப் பெற்றிடுவோம்.