Published:Updated:

விஷ்ணு சஹஸ்ரநாம நாட்டியம்!

நமோ நாராயணா...ரா.வளன்

விஷ்ணு சஹஸ்ரநாமம்  மகாபாரத யுத்த களத்தில் யுதிஷ்டிரருக்கு பிதாமகர் பீஷ்மரால் அருளப்பட்ட அற்புதம். மகாபாரதப் போருக்குப் பின், தர்மத்தின் நெளிவுசுளிவுகளைப் பற்றி யுதிஷ்டிரர் கண்ணனிடம் கேட்டபோது, பீஷ்மரிடமே கேட்டறியலாம் என்று அறிவுறுத்தினார் கண்ணன். அனைவரும் அம்புப்படுக் கையில் கிடந்த பீஷ்மரைச் சந்தித்தார்கள். அப்போது, அவர்களுக்கு பீஷ்மர் போதித்த திருமாலின் ஆயிரம் திருநாமங்களே விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகும். 

விஷ்ணு சஹஸ்ரநாம நாட்டியம்!

சமீபத்தில் சஹஸ்ர நாமத்தை சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து 'திருமாலின் பெயர்கள் 1000’ எனும் பெயரில் நூலாக்கி, கவிமாமணி இளநகர் காஞ்சிநாதன் வெளியிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பல்வேறு ஆன்மிகப் பாடல்களுக்கு இசையமைத்தகே.எஸ்.ரகுநாதன், இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தை இசை ஆல்பமாக உருவாக் கியுள்ளார். ராகமாலிகா வடிவில் பாடப்பட்டுள்ளது. பத்மஜா பத்மநாபன், வி.வி.பிரசன்னா, அக்ஷயா பத்மநாபன், துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் பாடியுள்ளனர்.

விஷ்ணு சஹஸ்ரநாம நாட்டியம்!

செப்டம்பர் 27ம் தேதி, சென்னை மியூசிக் அகாடமியில், ஜெயதாரிணி அறக்கட்டளையின் 11வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பாடலுடன் கூடிய நாட்டிய நிகழ்ச்சியாக 'தமிழில் சஹஸ்ரநாமம்’ தொகுத்து வழங்கப்பட்டது. விஷ்ணு சஹஸ்ரநாமம் இப்படி நாட்டிய நிகழ்ச்சியாக வழங்கப்படுவது இதுவே முதன்முறை!

விஷ்ணு சஹஸ்ரநாம நாட்டியம்!

முன்னதாக, சஹஸ்ரநாமத்தை இசை ஆல்பமாக உருவாக்கி, இசையால் சிறப்பித்த கே.எஸ்.ரகுநாதனுக்கு, ஜெயரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விஷ்ணு சஹஸ்ரநாம நாட்டியம்!

மொத்தம் 27 நடனக்கலைஞர்கள் பங்கேற்று வழங்கிய இந்த நடன நிகழ்ச்சி, விஷ்ணு சகஸ்ரநாமத்தின் உன்னதத்தையும், மகாவிஷ்ணுவின் மகிமையையும், அவரின் திருவுருவங்களின் சிறப்பையும் மனதில் மிக ஆழமாகப் பதியச்செய்தது. இனிதே தொடரட்டும் இந்த இறைப்பணி!

படங்கள்: தி.ஹரிகரன்