Published:Updated:

வலைத்’தலம்’!

வலைத்’தலம்’!

லேசியாவில் உள்ள கெடா (Kedah-கடாரம்) மாகாணத்தில், சில வாரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சோழர்கள் கட்டிய, ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில் இது!

வலைத்’தலம்’!

முதலாம் ராஜேந்திர சோழனின் கடாரம் மீதான மாபெரும் படையெடுப்புக்குப் பின்பு, இரண்டாவது முறையாக மீண்டும் அங்கே படையெடுத்து வெற்றி கொண்ட
வீர ராஜேந்திர சோழனின் வழித் தோன்றல்கள் இதைக் கட்டியிருக்கலாம் என்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- ஆறகழூர் வெங்கடேசன் பொன்

வலைத்’தலம்’!

குழந்தைக்குப் பால் கொடுக்கும் நிகழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். சுற்றிலும் பெண் தோழிகள் இருக்க, ஒரு மெத்தையில் அந்தப் பெண்மணி படுத்திருக்கிறாள். அவள் அருகில் குழந்தையும் இருக்கிறது. குழந்தை இருக்கும் பகுதி கொஞ்சம் சேதமாக இருப்பதால், தெளிவாகத் தெரியவில்லை.

வலைத்’தலம்’!

இது போன்ற சிற்பங்களை பார்க்கும்போது, சோழதேசத்து பெண்களின் உருவ அமைப்பு, உடல் வாகு, அவர்களின் சிகை அமைப்பு அணிகலன்களை வைத்து, ஆயிரம் வருடங்கள் முன்பு மக்கள் எப்படி இருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தச் சிற்பம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தது; கோயிலில் துர்கை சிலைக்கு அருகில் உள்ளது.

இடம்: தஞ்சாவூர் அருகில் புள்ளமங்கை (பசுபதிகோவில்) 

- www.facebook.com/ramesh.muthaiyan.1

ஸ்ரீரங்கத்தில் ராயகோபுரத்தைக் கடந்து வந்தால், அடுத்து சிறிய ராஜகோபுரம் வரும். தினம்தோறும் இந்தக் கோபுரம் வழியாகப் பல நூறு வாகனங்கள் பயணித்தவாறே உள்ளன. இந்தக் கோபுரத்தின் மேல் சுவரில் விஜயநகர காலத்து ஓவியம் உள்ளது. அங்கு நிகழ்ந்த திருவிழாக்களை எடுத்துச் சொல்லும் விதமாகவும், அரச குடும்பத்தினர் வணங்குவதைப் போன்றும் அந்தச் சுவரில் ஓவியம் வரைந்து வைத்துள்ளனர். இதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. தினமும் கடந்து செல்லும் வாகனங்களின் புகையாலும், தூசியாலும் இந்த ஓவியங்கள் அதன் சுய வர்ணங்களை இழந்து, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டு இருக்கின்றன. இவை முற்றிலுமாக அழியும் முன் இதைப் பாதுகாக்குமா இந்து அறநிலையத்துறை? (பல கோடி ரூபாய் செலவில் தற்போது ரங்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.)
   
- www.facebook.com/ramesh.muthaiyan.1

தாரமங்கலம் கயிலாசநாதர் திருக்கோயிலில், அம்மன் சந்நிதி வாயிலின் மேல் விதானத்தில் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம் இது. அழகான வேலைப்பாடுகள் கொண்ட தாமரை மலரை கிளிக் கூட்டங்கள் சூழ்ந்திருக்கும் காட்சியை நயமுடன் செதுக்கி நம்மை வியப்புடன் ரசிக்க வைத்த சிற்பி, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்!

வலைத்’தலம்’!

தாமரை மலரின் நடுவில் இருக்கும் மொக்கைச் சுற்றி கல் வளையம் ஒன்று செதுக்கியுள்ளார். அந்தக் கல் வளையத்தை கீழிருந்து ஒரு மூங்கில் கழி கொண்டு தள்ளிவிட்டால், தாமரை மொக்கைச் சுற்றிச் சுழன்று வரும்! மொக்கைச் சுற்றிலும் வளையத்தைச் செதுக்கி, எவ்வளவு சிறிய உளி கொண்டு பொறுமையாக அதைத் தனிமைப்படுத்திச் சுழல வைத்திருப்பார் அந்தச் சிற்பி!
அவரின் அந்தப் பொறுமையும் அர்ப்பணிப்புடன் கூடிய வேலைப்பாடும்தான் இன்றும் அவரை நினைத்துப் போற்ற வைக்கிறது.

- தாரை செ.ஆசைத்தம்பி எழுத்தாளர்

ஓர் இடத்துக்குச் சென்றோமா, பார்த்தோமா, வந்தோமா என்ற பயணத்தில் எப்போதுமே எனக்கு உடன்பாடில்லை. இன்றைய இயந்திர உலகத்தைப் புறக்கணித்துவிட்டு, அந்தக் கோயில் கட்டப்பட்ட காலத்தில் இது எப்படி சாத்தியமாகியிருக்கும் என யோசிப்பது என் வழக்கம். கருங்கல்லில் ஏதாவது ஒரு பகுதியை சிறிது வேகமாகத் தட்டினாலே தெறித்து விழுந்துவிடும். அதுபோன்றதொரு கல்லில் தூண் செய்து, அதன் நடுவே ஓர் உருளை ஏற்படுத்தி, அந்த உருளை சுழல மூன்று பக்கமும் இடைவெளி விட்டு அதைச் சுழலும் விதமாகச் செய்து... என்ன வித்தை இது, யாருடைய யோசனை இது, அதற்காக அவர் பாராட்டப்பட்டிருப்பாரா, அந்தக் கலைஞனின் கரங்களுக்கு கங்கணங்கள் அணிவிக்கப்பட்டிருக்குமா..?

வலைத்’தலம்’!
வலைத்’தலம்’!

கேள்விகள் என் மனதில் முளைத்துக்கொண்டே இருக்கும்.

திருச்சி-நாமக்கல் சாலையில் திருவாசியில் உள்ள மாற்றுரைத்தீஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள். அந்தக் கருங்கல் உருளையை உங்கள் கைகளால் ஸ்பரிசித்துப் பாருங்கள். உங்கள் மனத்திலும் கேள்விகள் எழும்.

வாசகர்களே! ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் என இணையத்தில் விரவிக்கிடக்கும் சுவாரஸ்யமான - பயனுள்ள ஆன்மிகத் தகவல்களின் தொகுப்பே, இந்த வலைத் `தலம்' பக்கம்!  மேற்சொன்னவற்றில் உலா வரும் உங்களுடைய ஆன்மிகப் பதிவுகளும் இங்கே பிரசுரமாக வாய்ப்பு உண்டு. தொடர்ந்து கவனியுங்கள்!