Published:Updated:

ராமேஸ்வரம் கோயிலில் குடியரசுத் தலைவருக்குப் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு

ராமேஸ்வரம் கோயிலில் குடியரசுத் தலைவருக்குப் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு
ராமேஸ்வரம் கோயிலில் குடியரசுத் தலைவருக்குப் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு

ராமேஸ்வரம் கோயிலில் குடியரசுத் தலைவருக்குப் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு

 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த குடியரசுத் தலைவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.


 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த தனது குடும்பத்தினருடன், இன்று ராமேஸ்வரம் வருகை தந்தார். மதுரையிலிருந்து ஹெலிஹாப்டர் மூலம் மண்டபத்திற்கு வந்த குடியரசுத் தலைவரை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து மண்டபத்திலிருந்து கார் மூலமாக ராமேஸ்வரம் சென்ற குடியரசுத் தலைவர், அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்கு வருகை தந்தார். 

திருக்கோயிலில் அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, கோயில் தக்கார் குமரன் சேதுபதி, இணை ஆணையர் மங்கையர்க்கரசி ஆகியோர் மேள,தாளம் முழங்க குடியரசுத் தலைவருக்கு பூரணகும்ப வரவேற்பு அளித்தனர். பின்னர் அஞ்சநேயர் சன்னிதியில் சாமி தரிசனம் செய்த குடியரசுத் தலைவருக்கு, விநாயகர் சன்னிதியில் 22 தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. இதன்பின்னர் சுவாமி, அம்பாள் சன்னிதிகளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருக்கோயில் கல்யாண மண்டபத்திற்கு வந்த குடியரசு தலைவர் அங்கு வைக்கப்பட்டிருந்த திருக்கோயில் பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டார். அங்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் வலம்புரி சங்கு மற்றும் சுவாமி அம்பாள் படங்கள், கோயில் பிரசாதம் ஆகியன அவருக்கு வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
 

அடுத்த கட்டுரைக்கு