Published:Updated:

பத்மநாபசுவாமி கோவில் சொத்துக்கள் கோவிலுக்கே சொந்தம்: உம்மன்சாண்டி

திருவனந்தபுரம்:  திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் சொத்துக்கள் கோவிலுக்கே  சொந்தம் என கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் பத்மநாபபுரம் சுவாமி கோவிலில் பல லட்சம் கோடி மதிப்புள்ள  பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி  பொக்கிஷங்கள் மதிப்பீடு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோவில் விவகாரம் தொடர்பான விவரங்களை சேகரித்து தாக்கல் செய்த கோபால்  கிருஷ்ணா என்பவரை உச்ச நீதிமன்றம், சிறப்பு வழக்கறிஞராக நியமித்தது.

இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை  தாக்கல் செய்தார்.

அதில், கோவில் சொத்துக்கள் மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்க  வேண்டும் என தெரிவித்திருந்தார்.

##~~##
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் உம்மன்  சாண்டி,"பத்மநாபசுவாமி கோவில் சொத்து பொது சொத்து அல்ல.அவை முழுவதும்  கோவிலுக்கு மட்டுமே சொந்தமானது.
இந்த விஷயத்தில் அரசு தலையிட முடியாது.இந்த விவகாரம் குறித்து அரசின்  நிலைப்பாட்டை ஏற்கனவே உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவித்து விட்டோம்.தேவையெனில்  கோவிலில் உள்ள நகைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பல நூறு ஆண்டுகளாக நகைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருவது திருவிதாங்கூர்  சமஸ்தானத்தின் நேர்மையை காண்பிக்கிறது”என்றார்.
அடுத்த கட்டுரைக்கு