Published:Updated:

வலைத்’தலம்’!

வலைத்’தலம்’!

வலைத்’தலம்’!

வலைத்’தலம்’!

Published:Updated:

முனிவர்களே தன் காலடியில் தவம் இருக்கும் அளவுக்கு மேனி எழில்கொண்ட பேரழகி

வலைத்’தலம்’!

குப்பையில் கிடக்கிறாள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோமேதகம் குப்பையில் கிடக்கிறதே என்று வீட்டுக்கு எடுத்துச் செல்லவும் முடியாது; இப்படிச் சீரழிக்கிறார்களே என்று சண்டையிடவும் இயலவில்லை! சில நேரங்களில், சில இடங்களில் உரக்கப் புலம்பவும் யோக்கியதை இன்றி, முகநூலில் புலம்பித் தீர்க்க வேண்டியுள்ளது!

இடம்: பேரூர் - பட்டீஸ்வரம்,  கோயம்புத்தூர்

- www.facebook.com/tamilparanthagan

வலைத்’தலம்’!

தாஜ்மகால் கட்டுவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே... தன்னுடைய காதலியான `பரவை'யின் விருப்பத்துக்கு ஏற்ப, அவள் கண்ணெதிரிலேயே திருவாரூர் விடங்கர் கோயிலை கற்றளியாக மாற்றியமைத்தான் ராஜேந்திரன். தன் காதலியை மேலும் சந்தோஷப்படுத்த, அந்த கோயிலில் பொன் வேயவும் உத்தரவிட்டான். திருவாரூர் வீதிவிடங்கர் சந்நிதியில் இருக்கும் ஒவ்வொரு கல்லும் ராஜேந்திரன் பரவை மீது வைத்திருந்த காதலை இன்றும் கூறிக்கொண்டிருக்கிறது!

வலைத்’தலம்’!

ர் ஊரில், பிரசித்திபெற்ற குரு ஒருவரது பிரசங்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரை அழைத்து வர குதிரைக் காரன் ஒருவன் சென்றிருந்தான்.

அவர்கள் வருவதற்குள் பெருமழை பிடித்துக்கொண்டது.  எனவே, கூட்டம் கலைந்துவிட, குருநாதர் வந்தபோது அங்கு யாருமே இல்லை. பேசுவதற்காக நிறைய தயார் செய்து வந்த குருவுக்கு ஏமாற்றம்.

குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணுவதற்கு குருவுக்கு மனசில்லை. எனவே, அவனிடமே ‘‘என்னப்பா பண்ணலாம்?’’ என்று கேட்டார்.  அவனோ, ‘‘ஐயா! நான் குதிரைக்காரன், எனக்கு பெரிசா எதுவும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணு... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ மற்ற குதிரைங்கள் லாம் வெளியே போயிருக்க, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க, நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’’ என்றான்.

பொளேர் என்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு! அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுவிட்டு, அவனுக்கு மட்டும் தனது பிரசங்கத்தைத் தொடங்கினார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று  பிரசங்கத்தை பிரமாதப்படுத்திவிட்டார் குரு. பிரசங்கம் முடிந்ததும், ‘‘எப்படிப்பா இருந்தது?'' என்று பெருமிதம் பொங்கக் கேட்டார்.

‘‘ஐயா… நான் குதிரைக்காரன். எனக்கு பெரிசா எதுவும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணு... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வரமாட்டேன்!’’ என்றான்.

நீதி: மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எதைச் சொன்னால் புரியுமோ அதை மட்டுமே சொல்லவேண்டும். புரியாத, தேவையில்லாத விஷயங்களை சொல்வதும், போதிப்பதும் நம்மைதான் முட்டாளாக்கும்!

-www.facebook.com/natarajkpr

ஒரு மனிதன் இயல்பாக சிரிக்கும்போது அவனின் கன்னங்கள் எப்படி இருக்குமோ அப்படி ஒரு புன்னகை இந்த சிற்பத்தில்! எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் நம்மை மெய்ம்மறக்கத்தான் செய்கிறது அந்தப் புன்னகை. சோழர் களின் கலை அழகு எப்போதுமே தனித்தன்மை யானது தான்! இடம்: தஞ்சை பெரியகோயில்

வலைத்’தலம்’!

வாசகர்களே! ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் என இணையத்தில் விரவிக்கிடக்கும் சுவாரஸ்யமான -  பயனுள்ள ஆன்மிகத் தகவல்களின் தொகுப்பே, இந்த வலைத் `தலம்' பக்கம்!  மேற்சொன்னவற்றில் உலா வரும் உங்களுடைய ஆன்மிகப் பதிவுகளும் இங்கே பிரசுரமாக வாய்ப்பு உண்டு. தொடர்ந்து கவனியுங்கள்!