Published:Updated:

நாரதர் உலா

குடந்தை குளறுபடிகள்!மந்தகதியில் மாமாங்க ஏற்பாடுகள்

நாரதர் உலா

குடந்தை குளறுபடிகள்!மந்தகதியில் மாமாங்க ஏற்பாடுகள்

Published:Updated:

 “கும்பகோணத்தில் நடைபெறப்போவது தேசிய அளவிலான பிரசித்தி பெற்ற விழா. நாட்டின் பல

நாரதர் உலா

பகுதிகளில் இருந்தும் வரப்போகும் பக்தர்களின் வசதிக்காக கும்பகோணத்தில் ஏற்கெனவே கிடப்பில் இருந்த மத்திய அரசின் திட்டங்கள் ஏதாவது நிறைவேறியிருக்கிறதா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாரதர் வந்ததும் வராததுமாக இந்தக் கேள்வியை அவர் முன் வைத்தோம். பெருமூச்சொன்றை வெளியேற்றினார்.

'கும்பகோணம் ரயில் நிலையத்தில் 24 கோச்சுகள் நிற்கும் வகையில் பிளாட்பாரங்கள் விரிவுபடுத்தப்படும்; கும்பகோணம்ஜெயங்கொண்டம்விருத்தாசலம் இடையே புதிய ரயில்பாதை; தஞ்சைமயிலாடுதுறை இடையே இரட்டை வழிப்பாதைன்னு மத்திய அரசின் அறிவிப்புகள் என்னவோ தடபுடலாதான் இருந்துது. ஆனா, அவற்றைச் செயல்படுத்துவதற்கான முயற்சி களை மத்திய அரசு எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் !''

நாரதர் உலா

''அடக் கடவுளே! கடந்த ஜனவரி மாசமே முக்கிய பிரமுகர்கள் சிலர் ஆனைக்கட்டி ஆசிரமத்துக்குப் போய் தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளைச் சந்திச்சு, மத்திய அரசிடம் இதுபற்றி வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டு, மனுவும் கொடுத்துட்டு வந்தாங்களாமே?'

'ஆமாம்! ஸ்வாமிஜியும் அப்போதே அந்த மனுவை மத்திய அரசுக்கு அனுப்பிவெச்சு, உடனே நடவடிக்கை எடுக்கணும்னு வலியுறுத்தவும் செஞ்சுட்டாராம். ஸ்வாமிஜியும் இப்போது நம்மிடையே இல்லை; ஸித்தியடைந்துவிட்டார். ஆனால், இன்னமும்கூட அவருடைய வலியுறுத்தல் குறித்து, மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை!'

நாரதர் உலா

''போகட்டும்... மகாமகத்தையொட்டி கும்பகோணத்தைச் சுற்றி உள்ள பெரும்பாலான கோயில்களில் கும்பாபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கமாயிற்றே? அந்த வகையிலாவது திருப்திப்படும்படியாக ஏதாவது தகவல்கள் உண்டா?''

''விசாரிச்ச வரையில் ஆதிகும்பேஸ்வரர், கௌதமேஸ்வரர், காசி விசுவநாதர், சார்ங்கபாணி கோயில் போன்ற ஒரு சில கோயில்களுக்கு மட்டும்தான் இதுவரை கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. மற்ற கோயில்களின் திருப்பணிகள் மந்தகதியில் தான் நடக்கின்றன. கோயில்களில் வண்ணப் பூச்சு வேலை தரமாகவே இல்லை. ஆயில் பெயின்ட்டிங் இல்லாமல், வேறு ஏதேதோ வர்ணங்களைப் பூசுகிறார்கள். அப்படிப் பூசிய வர்ணங்கள் தொட்டால் ஒட்டிக்கொள்கின்றன...' என்ற நாரதர் தொடர்ந்து வேறொரு விஷயத்தையும் பகிர்ந்துகொண்டார்.

''நாடு முழுக்க மதுவுக்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், கும்பகோணத்திலும் அதன் பாதிப்பு இருந்தது. நாகேஸ்வரன் கோயில், ராமசாமி கோயில் ஆகிய கோயில்களுக்கு அருகில் மதுபானக்கடைகள் இருக்கு. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பலமுறை அரசாங்கத்துக்குக் கோரிக்கை வெச்சும், அரசு கண்டுகொள்ளவே இல்லை. மகாமகத்துக்கு முன்பாவது அதையெல்லாம் மூடினால் தேவலைன்னு மக்கள் ஆசைப்படறாங்க!’

நாரதர் உலா

''அவர்கள் ஆசை நிறைவேறுமா?''

''அது அந்த கும்பேஸ்வரருக்குத்தான் வெளிச்சம்! கும்பேஸ்வரர் கோயிலில் மொத்தம் அஞ்சு தேர்கள் இருக்கு. இப்போதைக்கு இரண்டு தேர்கள்தான் ஓடுற நிலையில இருக்கு. மத்ததெல்லாம் சரியான பராமரிப்பு இல்லாம பாழ்பட்டுக் கிடக்கு. அதே மாதிரி, சார்ங்கபாணி கோயில் தேர்ச் சீலைகள் ரொம்பப் பழசாயிடுச்சு. அதைப் புதுசா மாத்துறதுக்குக்கூடவா முடியலைன்னு ரொம்ப வருத்தப்படுறாங்க ஜனங்க!'' என்றார் நாரதர்.

''சரி, மகாமகத்துக்கு வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவாங்களே... அவங்க தங்குறதுக்கான வசதிகள் எப்படி இருக்கு?''

நாரதர் உலா

''அதுக்கெல்லாம் குறைச்சலே இல்லை. கும்பகோணத்தைச் சுற்றிலும் தனியார் தங்கும் விடுதிகள் நிறையவே இருக்கு...''

''அப்பாடா! பக்தர்கள் தங்குறதுக்கு ஒண்ணும் பிரச்னை இருக்காது. ஒரு கவலை விட்டது!''

''முடிக்கிறதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி? தங்கும் விடுதிகள் நிறைய இருந்தாலும், அத்தனை விடுதிகளையும் காவல்துறையினரும், அரசாங்கத் துறையைச் சேர்ந்தவர்களும் ஆக்கிரமித்துக்கொள்கிறார்களாம். அதனால, மகாமகத்துக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் பாடு வழக்கம்போல திண்டாட்டம்தான்! பாவம் பக்தர்கள்!''

''லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தங்குமிடம், குடிநீர், கழிப்பறை வசதிகளை முன்கூட்டியே முறையா செய்துகொடுக் கலைன்னா, நகரத்தின் சுகாதாரம் ரொம்பவே பாதிக்கப்படுமே?'' என்றோம் கவலையாக.

''சுகாதாரச் சீர்கேடுன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது... நகரத்தின் மையப்பகுதி யில் உள்ள மீன் மார்க்கெட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புலம்பாத பக்தர்களே இல்லை. மகாமகத்துக்குள் அதற்கும் ஒரு தீர்வு ஏற்படணும்னு மக்கள் எதிர்பார்க்கிறாங்க!'

நாரதர் உலா

''போன மகாமகத்துக்கு நேரடி கவனம் செலுத்தியது தமிழக அரசு; போன வருஷத்தின் மிகச் சிறந்த நகராட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது கும்பகோணம் நகராட்சி. இந்த வருஷம், புனிதம் மிகுந்த மகாமகத் திருவிழாவை இவங்க எப்படி நடத்தி முடிப்பாங்களோ... அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!'' என்றோம் ஏக்கம் தோய்ந்த குரலில். 'ம்ஹூம்... ஆள்கிறவர்களுக்குத்தான் வெளிச்சம்!' என்று கண்சிமிட்டிப் புன்னகைத்த நாரதர், சட்டென்று காற்றில் கரைந்தார்.

படங்கள்: க.சதீஷ்குமார்