Published:Updated:

தூத்துக்குடியில் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு..! பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடியில் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு..! பக்தர்கள் தரிசனம்
தூத்துக்குடியில் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு..! பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடியில் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு..! பக்தர்கள் தரிசனம்

"பூலோக வைகுண்டம்" என அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். 

தூத்துக்குடியில் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு..! பக்தர்கள் தரிசனம்

தமிழ் மாதங்களில் ஒரு மாதத்திற்கு இரண்டு ஏகாதசி என்றாலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசிதான் சிறப்பானதாகும். இந்த ஏகாதசியை "மோட்ச ஏகாதசி" என்பார்கள். இந்த நாளில் விரதமிருந்து பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பைக் காண்பதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள் பக்தர்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையோரம், நவ திருப்பதிகள் எனப்படும் 9 பெருமாள் கோவில்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கிரக பரிகார ஸ்தலமாகவும், வைணவ திவ்ய 108 தேசங்களிலும் இடம்பெற்றும் சிறந்து விளங்குகிறது. இந்த 9 பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றாலும், நவதிருப்பதிகளில் முதல் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீகள்ளபிரான் கோவிலில் நடக்கும் சொர்க்க வாசல் திறப்பிற்கு சிறப்பு தரிசனத்திற்கு பலன் உண்டு. இத்தலத்தை 'பூலோக வைகுண்டம்' என்கிறார்கள். இத்தலத்தில் செய்யப்படும் தரிசனத்தால் வைகுண்டத்தில் உள்ள பெருமாளையே தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 6 மணி முதல் ஆதிசேஷ வாகனத்தில தாயார் ஆழ்வாராதிகளுடன் ஷேய சயன திருக்கோலத்தில் உற்சவரான ஸ்ரீகள்ளபிரான் கிழக்கு முக மண்டலமாக எழுந்து பக்தர்களுக்குக் காட்சி தந்தார். பிறகு மாலை 3 மணிக்கு சயனத் திருக்கோலம் படி களைந்து திருமஞ்சனமும், அதனைத் தொடர்ந்து அலங்காரத் தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு தங்கத் தோளுக்கிணியான் வாகனத்தில் சுவாமி கள்ளபிரான், தங்கக்குடை தாங்கி ரத்தினத் தலைப்பாகை அணிந்து சக்கர தீப்பந்தங்களின் அணிவகுப்புடன் 'பரமபதவாசல்" என்னும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. 

"கோவிந்தா.. கோபாலா.." என்ற  கோஷம் முழங்க பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியிலிருந்து பக்தர்களின் வசதிக்காக 9 நவ திருப்பதிகளுக்கும் சென்று திரும்பும் படியாக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு