ந்த்ராலயத்தில் ஸ்ரீராகவேந்திரரின் பிருந்தாவனத்தை தரிசித்து, பிரசாதம் பெற்றுக்கொண்டு, தான் கொண்டு யிருந்த தேங்காயை ஸ்ரீராகவேந்திரருக்கு அர்ப்பணிக்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன் சுந்தரநாராயணன் வெளியில் வந்தபோதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. 

அவர் வைத்திருந்த பையில் இருந்து ஈரம் கசிவதுபோல் இருக்கவே, அவர் அந்தப் பையைப் பிரித்துப் பார்த்தார். பையில் வைத்திருந்த தேங்காய் இரண்டாக உடைந்திருந்தது. சுந்தரநாராயணனுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. தேங்காய் எப்படி உடைந்திருக்கும் என்றெல்லாம் அவர் ஆராய்ச்சியில் இறங்கவில்லை. ஆத்மார்த்தமான பக்திக்கு அத்தகைய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லைதானே?! ராகவேந்திரரின் பிருந்தாவனத்தில் இருந்து வெளியில் வருவதற்கு முன்பாகவே அந்தத் தேங்காய் உடைந்தது ஸ்ரீராகவேந்திரரின் அருளால்தான் என்று பரிபூரணமாக நம்பினார். இந்த உணர்வுபூர்வமான நம்பிக்கைதான் ஆன்மிக முன்னேற்றத்துக்கு அடிப்படையாகத் திகழ்கிறது.

சுந்தரநாராயணன் என்னதான் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்தாலும், அவருடைய பூர்வஜன்ம புண்ணியத்தின் பலனாக மகான் ஸ்ரீராகவேந்திரரின் அருளுக்குப் பாத்திரமானதுடன், அவரால் வழிபடப்பெற்ற பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடநாத பெருமாளுக்குக் கோயில் கட்டக்கூடிய பெறற்கரிய பேறும் கிடைத்தது. அதற்கேற்ப அவருடைய கடவுள் நம்பிக்கையின்மையையும், முரட்டுத்தனத்தையும் அடியோடு மாற்றி, அவருடைய மனத்தில் ஆழ்ந்த பக்தியையும், உணர்வுகளில் பெரும் மாற்றத்தையும் ஏற்படுத்தி அருள்புரிந்தார் மகான் ஸ்ரீராகவேந்திரர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சித்தமெல்லாம் சித்தமல்லி - 9!

தம்முடைய திருவுள்ளத்தின்படி சுந்தரநாராயணனை திருவேங்கடநாத பெருமாள் கோயில் திருப்பணியில் ஈடுபடுத்திய ராகவேந்திரர், பெருமாளின் அருள்திறத்தினையும், தன்னை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பெருமாள் எப்படியெல்லாம் அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்பதை உலகத்தவர்க்குப் புரிய வைக்கவேண்டும் என்பதற்காகவும், எண்ணற்ற பக்தர்களை சித்தமல்லி பெருமாளிடம் ஆற்றுப்படுத்தவும் செய்தார்.

ஸ்ரீராகவேந்திரரால் ஆற்றுப்படுத்தப்பட்டு திருவேங்கடநாத பெருமாளின் அருள்திறத்தால், தங்கள் வாழ்க்கையில் அதிசயங்களும் அற்புதங்களும் நடைபெற்ற பக்தர்கள் ஏராளம். அவர்களைப் பற்றி சுந்தரநாராயணன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அவற்றில் ஒரு சில அற்புதங்களை இங்கே பார்ப்போம்.

மூன்று வருடங்களுக்கு முன்பு, ஓர் அன்பரின் வாழ்க்கையில் பெருமாள் நிகழ்த்திய அற்புதம் இது...

சென்னை, வளசரவாக் கத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். பெரும் செல்வந்தரான அவருக்கும் அவருடைய மனைவி பானுமதிக்கும்  நீண்ட காலமாகவே ஒரு மனக் கவலை. தங்களின் மகள் அனுராதாவின் திருமணம் தடைப்பட்டுக்கொண்டே போகிறதே என்பதுதான் கவலைக்குக் காரணம். திருமணம் தடைப்படுவதற்குக் காரணம், அந்தப் பெண்ணின் உடலில் பரவலாக வெண்புள்ளிகள் இருந்ததுதான். இதன் காரணமாக, வரன்கள் அத்தனைபேருமே வேண்டாம் என்று விலகிச் சென்றனர். என்ன செய்வது என்று புரியாமல் கலங்கிக்கொண்டிருந்த தங்கவேல் தம்பதியர், தங்களுடைய குடும்ப நண்பர் ஒருவரின் மூலமாக பத்மா மாமியைப் பற்றிக் கேள்விப்பட்டனர். அவரைச் சந்தித்துப் பேச ஆவல் கொண்டனர். ஆனால், பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. ஏதேதோ காரணங்களால் சந்திப்பு நிகழாமல் தள்ளிக்கொண்டே போனது. எதற்கும் நேரம் காலம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?

சித்தமெல்லாம் சித்தமல்லி - 9!

அவர்களுடைய தொடர் முயற்சியின் பயனாக, ஒருநாள் பத்மா மாமியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் தங்கள் மனத்தை வெகுநாளாக அரித்துக்கொண்டிருக்கும் கவலையைப் பற்றிக் கூறினார்கள்.

பத்மா மாமி ஸ்ரீராகவேந்திரரிடம் அவர்களுடைய கவலையைப் பற்றி முறையிட்டுப் பிரார்த்தித்தார். ஸ்ரீராகவேந்திரரும், தங்கவேல் தம்பதியரிடம் இரக்கம் கொண்டு, அவர்களுக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார். பத்மா மாமியின் வாய்மொழியாக அவர்களுக்கு ஒரு வழியைக் கூறி அருளினார்.

அதன்படி, அவர்கள் சித்தமல்லிக்குச் சென்று பெருமாளையும் தாயாரையும் சேவித்தனர். ஸ்ரீராகவேந்திரர் சொன்னபடியே, தங்களின் மகளுக்குத் திருமணம் கூடி வந்ததும், மகளுக்கு என்ன விலையில், என்ன தரத்தில் பட்டுப் புடைவை வாங்குகிறோமோ, அதே விலையில் அதே தரத்தில் தாயாருக்கும் புடைவை வாங்கி அர்ப்பணிப்பதாகப் பிரார்த்தித்துக் கொண்டனர்.

பெருமாளிடம் பிரார்த்தித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பிய மறுநாளே அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருந்தது.

அவர்களின் தூரத்து உறவில் இருந்து ஒருவர் அனுராதாவைப் பெண் பார்க்க வந்திருந்தார். மருத்துவத் துறையில் நல்ல பொறுப்பில் இருப்பவர் அவர். பார்க்க கம்பீரமாகவும் லட்சணமாகவும் இருந்தார். அவரைப் பார்த்ததுமே தங்கவேல் தம்பதியருக்கு அந்த வரன் அமைந்தால் நன்றாக இருக்குமே என்ற விருப்பம் உண்டானது. ஆயினும், படிப்பிலும் அந்தஸ்திலும் ஒரு குறையும் இல்லாத அந்தப் பிள்ளைக்கு, உடல் முழுவதும் வெண்புள்ளிகள் இருக்கும் தங்கள் பெண்ணை எப்படிப் பிடிக்கும் என்ற எண்ணம் எழுந்து, ஆதங்கத்தையும் கவலையையும் மேலும் அதிகப்படுத்திவிட்டது.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 9!

எதுவுமே இறைவனின் சித்தப்படிதானே நடக்கும்? பெண் பார்க்க வந்த அந்தப் பிள்ளை, பெண்ணின் உடலில் வெண்புள்ளிகள் இருப்பதைக் கண்டு சற்றும் தயக்கம் கொள்ள வில்லை; பின்வாங்கவும் இல்லை. பெண்ணைப் பெற்றவர்களின் தயக்கத்தைப் போக்கும் வகையில், ''எனக்குப் பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது. நீங்கள் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்'' என்று சொல்லி விட்டார்.

பெண்ணைப் பெற்றவர்கள் ஸ்ரீராகவேந்திரரை யும், அவருடைய வாக்கின்படி தரிசித்து வணங்கிய சித்தமல்லி திருவேங்கடநாத பெருமாளையும் மானசிகமாக நமஸ்கரித்தனர். தங்கள் பெண்ணுக்கு ஒருவழியாக திருமணம் குதிர்ந்ததில் அவர்களுக்கு சொல்லவொண்ணாத மகிழ்ச்சி! ஆனாலும், அவர்களின் உள்ளத்தின் ஒரு மூலையில், உடல் முழுவதும் வெண்புள்ளிகளுடன் இருக்கும் தங்கள் பெண்ணை அந்த வரனுக்கு எப்படிப் பிடித்துப்போனது என்பதாக ஒரு சந்தேகமும் குழப்பமும் இருக்கவே செய்தது. அது அவர்களின் பார்வையிலும் பிரதிபலித்தது.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 9!

அவர்களின் பார்வையின் பொருளைப் புரிந்துகொண்டவர் போல், ''உங்கள் பெண்ணின் உடலில் வெண்புள்ளிகள் இருப்பது ஒரு குறையே இல்லை. அது ஒரு தொற்று வியாதியும் இல்லை. தொடர்ந்த சிகிச்சையின் மூலம் அதை எளிதாகக் குணப்படுத்தவும் முடியும். எனவே, உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்'' என்று தங்கவேல் தம்பதியருக்கு ஆறுதல் சொல்லி, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களின் மகளைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இப்போது ஓர் அழகான குழந்தையும் (ஆண் குழந்தையா, பெண் குழந்தையா?  ரவி) உள்ளது.

தங்கவேல் தம்பதியரும், தாங்கள் சித்தமல்லி திருவேங்கடநாத பெருமாளிடம் வேண்டிக் கொண்டது போலவே, தங்கள் பெண்ணின் திருமணத்துக்கு என்ன விலையில், என்ன தரத்தில் புடைவை எடுத்தார்களோ, அதே விலையில் அதே தரத்தில் புடைவை எடுத்து தாயாருக்கு அர்ப்பணித்தார்கள்.

இன்னொரு அனுபவம்... சென்னை, கே.கே.நகரில் இருப்பவர் கிருஷ்ணன். மிகவும் ஏழ்மையான குடும்பம். ஆனால், அவருக்கு பகவான் ஏற்படுத்தியதோ மிகப் பெரிய சோதனை.

அந்தச் சோதனை என்ன?

அவர் அந்தச் சோதனையில் இருந்து மீண்ட விதம்தான் எப்படி?

 - சித்தம் சிலிர்க்கும்

படங்கள்: க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism