Published:Updated:

வலைத்’தலம்’!

வலைத்’தலம்’!

வலைத்’தலம்’!

வலைத்’தலம்’!

Published:Updated:
வலைத்’தலம்’!

காலசம்ஹார மூர்த்தி சிற்பங்கள் எல்லாமும் சோழர்கள் காலத்தவைதான் என்றாலும், அவர்களது காலத்திலேயே வெவ்வேறு நிலைகளில் எப்படி இருந்தன என்பதை இந்த புகைபடத்தில் இருந்து காணாலாம்.

-www.facebook.com/ramesh.muthaiyan.1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலைத்’தலம்’!

ஒரு நீள் செவ்வக வடிவ கருங்கல். அதை ஆறு அடி உயரம், நான்கு அடிக்கு நான்கு அடி சுற்றளவு, இரண்டங்குலம் கொண்ட கற்பலகைகளாக அறுத்து நமது வீட்டு கூடத்துக்கு தரை பாவலாம், அடுப்படியில் அழகான மேடை அமைக்கலாம், ஒரு பன்னாட்டு கணினி அலுவலகத்துக்கு ஒரு வாயில் படிக்கட்டாகக் கூட அமைக்கலாம்.

வலைத்’தலம்’!

உயர்வான பொருள் அனைத்தும் இறைவனுக்கு என்று வாழ்ந்த மனிதர்களின் காலத்தில் அவ்வாறு இருக்க சாத்தியம் இல்லை. எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் அது வணக்கத்துக்கு உரியதாக இருக்க வேண்டும் என்று எண்ணியவர்கள் அவர்கள். அதனால்தான் ஒரு நீள் செவ்வக வடிவ கருங்கல்லை நர்த்தன விநாயகராகவும் அவருக்கு அலங்கார வளைவாக வும் வடிவமைத்திருக்கிறார்கள். அந்த வளைவு, விநாயகருடைய எடை முழுவதையும் தாங்குமாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது. கீழே அவருடைய வாகனம், பூத கணங்கள் என்று ஆண்டுகள் பல நூறு கடந்தும் காண்போர் அனைவரையும் வியக்கச் செய்யும் விதமாக அமைந்திருக்கிறது.
‪#‎ திருப்பெருந்துறை‬

-www.facebook.com/tamilparanthagan

பூமராங் (Boomerang) என்ற மிகப் பழைமையான ஓர் ஆயுதத்துக்கு, தமிழில் வளரி என்ற அழகான ஒரு பெயர் உண்டு. தமிழ் நாட்டின் மதுரை, சிவகாசி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் முற்காலத்தில் இதை ஒரு போர்க் கருவியாகப் பாவித்துள்ளார்கள். ஓடும் எதிரியின் காலைக் குறிபார்த்து எறிய, கால் இடறிக் கீழே விழுபவனை லபக்கென்று பிடித்து விடுவார்கள்.
1920-களில் குற்றப்பரம்பரைச் சட்டத்துக்கு எதிராக பிறன்மலை கள்ளர்கள் போராடியபோது, அவர்களை ஒடுக்குவதற்கு படைகளைக் குவித்தது ஆங்கிலேய அரசு. அப்போது அவர்களை எதிர்த்து தாக்க அந்த மக்கள் வளரியையே பயன் படுத்தினர்.

பகையாளியைத் தாக்கிவிட்டு ஏவியவரிடமே மீண்டும் திரும்பும் அந்த ஆயுதத்தைப் பார்த்து ஆங்கிலேயர்கள் கலங்கி போயினர். அதன் காரணமாக வளரி தடை செய்யப்பட்டது. வீட்டில் வைப்பது குற்றம் என்று கருதப்பட்ட காரணத்தால் அதற்குப் பிறகு அந்த ஆயுதம் கோயில்களில் வைக்கப்பட்டது. இன்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது இடுப்பில் வளரி தாங்கியிருப்பார் என்று சொல்வார்கள்.

வாசகர்களே! ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் என இணையத்தில் விரவிக்கிடக்கும் சுவாரஸ்யமான -  பயனுள்ள ஆன்மிகத் தகவல்களின் தொகுப்பே, இந்த வலைத் `தலம்' பக்கம்!  மேற்சொன்னவற்றில் உலா வரும் உங்களுடைய ஆன்மிகப் பதிவுகளும் இங்கே பிரசுரமாக வாய்ப்பு உண்டு. தொடர்ந்து கவனியுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism