கான் ஸ்ரீராகவேந்திரரால் வழிபடப் பெற்ற சித்தமல்லி திருவேங்கடநாத பெருமாள், தான் அருளாட்சி புரியும் ஊரின் பெயருக்கு ஏற்ப, பக்தர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற சித்தாடல்களைப் புரிந்து, அவர்களுடைய வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லாமல், நிறைவான நிம்மதியையும் சந்தோஷத்தையும் அருளிவருகிறார்.

அப்படித்தான் மூன்று வருஷங்களுக்கு முன்பாக, சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் வாழ்விலும் அவர் ஓர் அருளாடலை நிகழ்த்தினார்.

கிருஷ்ணனுக்குப் பெரிதாக வசதி, வாய்ப்பு எதுவும் கிடையாது. ஒருமுறை, அவர் ஒரு பெரிய சோதனையில் சிக்கி, அதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ‘மிகுந்த கடவுள் பக்தி கொண்ட தனக்கு ஏன் இப்படி ஒரு சோதனையை பகவான் ஏற்படுத்தினார்?’ என்று எண்ணி மனம் வருந்தினார். ‘கடவுளை நம்பினோர் என்றும் கைவிடப்படுவதில்லை’ என்னும் மறைமொழிக்கு ஏற்ப, அவருடைய துன்பம் நீங்க ஒரு வழி பிறந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவருக்குத் தெரிந்து நண்பர் ஒருவர், ராகவேந்திரரின் பக்தை யான பத்மா மாமியைப் பற்றி எடுத்துச் சொல்லி, அவரை உடனே போய்ப் பார்க்கும்படி சொன்னார்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 10!

பத்மா மாமியின் வீட்டுக்குச் சென்ற கிருஷ்ணன், தனக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை அவரிடம் சொல்லி முறையிட்டார்.

கிருஷ்ணனின் மகளுக்கு 1995-ம் ஆண்டு, அலர்ஜியின் காரணமாக பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. எத்தனையோ சிகிச்சைகள் எடுத்தும் பலன் இல்லை. அந்த நிலையிலும்
மிகவும் சிரமப்பட்டு பட்டப் படிப்பை முடித்தார் அந்தப் பெண். தொடர்ந்து மேற்படிப்புக்குத் தயாராகிக் கொண் டிருந்த நேரத்தில், அவரின் பார்வைத் திறன் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. பல மருத்துவர்களைப் பார்த்தும், பலன் என்னவோ பூஜ்ஜியம்தான். அந்த நிலையில்தான் கிருஷ்ணன் பத்மா மாமியைப் பார்க்க வந்திருந்தார். மாமி சொன்னபடியே அவர் உடனடி
யாக சித்தமல்லிக்குச் சென்று, பெருமாளையும் தாயாரையும் சேவித்துவிட்டு வந்தார்.

மறுநாளே அவருக்கு ஒரு நல்ல செய்தி காத்திருந்தது. வெளிநாட்டிலிருந்து பிரபல கண் மருத்துவர் ஒருவர் வந்திருப்பதாகவும், அவரிடம் சென்றால் உரிய சிகிச்சைகளின் மூலம் பார்வை கிடைக்கும் சாத்தியம் உண்டு என்றும் அவரின் நண்பர் சொன்னார். கிருஷ்ணனும் உடனே அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு, தன் மகளை அழைத்துக் கொண்டு போய் அந்த மருத்துவரைப் பார்த்தார். மகளைப் பரிசோதித்த மருத்துவர், அறுவைச் சிகிச்சை செய்தால் கண்களுக்குப் பார்வை கிடைக்கும் என்று கூறியதுடன், அந்த அறுவைச் சிகிச்சை மிகவும் சிக்கலானது என்றும், செலவு அதிகம் பிடிக்கும் என்றும் கூறினார்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 10!

அந்த அளவுக்குச் செலவு செய்ய கிருஷ்ணனிடம் பண வசதி இல்லை. ‘திக்கற்றவர்க்கு தெய்வமே துணை’ என்பது போல் அவர் மீண்டும் பத்மா மாமி யிடம் வந்தார். மாமி சொல்லியபடியே மீண்டும் ஒருமுறை சித்தமல்லிக்குச் சென்று, பெருமாளை சேவித்ததுடன், அங்கே நடந்த பூச்சொரிதல் வைபவத்திலும் பங்கேற்றார். அதையடுத்து, ‘ஏதோ ஒரு நல்லது நடக்கப் போகிறது’ என்பதாக அவருடைய உள்ளுணர்வு சொல்லி, குழம்பியிருந்த மனத்தில் ஒரு தெளிவை ஏற்படுத்தியது.

அவரின் நம்பிக்கையை நிறைவேற்றுவதுபோல், சித்தமல்லி பெருமாள் சில நல்ல உள்ளங்களில் தோன்றி, கிருஷ்ணனின் மகளுக்கு சிகிச்சைக்குத் தேவையான அளவுக்கு நிதியுதவி கிடைக்கச் செய்து விட்டார். அறுவைச் சிகிச்சை யும் நல்லபடியாக முடிந்து, இழந்த பார்வையை மீண்டும் பூரணமாகத் திரும்பக் கிடைக்கப் பெற்றார் அவரின் மகள்.

தன்னை வந்து சேவிக்கும் எவருக்கும் அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்குத் தேவையானவற்றை அருள்வதில் சமர்த்தர், சித்தமல்லி பெருமாள். அப்படித்தான் சென்னையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் வாழ்க்கையிலும் பெருமாள் அருள்புரிந்திருக்கிறார்.

இந்த அன்பரிடம்தான் முதன்முதலில் பத்மா மாமி சித்தமல்லி பெருமாளைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர்களையும், அவர்களைத் தொடர்ந்து பெருமாள் இருந்த வீட்டின் உரிமையாளரான சுந்தரநாராயணனையும் பெருமாளிடம் ஆற்றுப் படுத்தியவர்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 10!

பத்மா மாமி சொன்னபடியே சித்தமல்லிக்குச் சென்று பெருமாளுக்கும் தாயாருக்கும் வஸ்திரம் சமர்ப்பித்த ராமமூர்த்தி தம்பதி, அன்றுமுதல் நினைத்த நேரத்தில் எல்லாம் சித்தமல்லிக்குச் சென்று பெருமாளைச் சேவித்து வருவதை வழக்கப் படுத்திக்கொண்டனர். ராமமூர்த்தி செய்து வந்த தொழிலில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் இல்லாமல், மிகவும் சுமார் நிலையில்தான் ஓடிக் கொண்டிருந்தது. ஆனாலும், அவர் பெருமாளிடம் அதுகுறித்தும் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.

அவர் கோரிக்கை வைக்காவிட்டாலும், பெருமாள் அவருக்குத் தேவையானவற்றை அருள்

சித்தமெல்லாம் சித்தமல்லி - 10!

புரியவே செய்தார். ஆம், ராமமூர்த்தி சித்தமல்லி பெருமாளைத் தரிசிக்கத் தொடங்கிய நாளில் இருந்து, அவருடைய தொழிலில் சீரான முன்னேற் றம் ஏற்படத் தொடங்கியது. அவருடைய மகனுக் கும் வெளிநாட்டில் எம்.எஸ். படிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது. அதேபோல், அவருடைய அண்ணன் மகனும் எம்.பி.ஏ. படித்து முடித்த உடனே, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயர்ந்த பதவி கிடைத்து, இன்று நல்ல நிலையில் இருக்கிறார்.

கேட்பவர்க்கும் சரி, கேட்காதவர்களுக்கும் சரி... தன்னை வந்து தரிசித்த மாத்திரத்திலேயே அருள்புரியும்  சித்தமல்லி பெருமாள், தன்னை வந்து தரிசிக்க முடியாமல், தொலைவில் இருந்தே வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கும் அருள்புரியவே செய்கிறார்.

அப்படி ஒரு பக்தரின் வாழ்வில் பெருமாள் நிகழ்த்திய அந்த அருளாடல்...

- சித்தம் சிலிர்க்கும்

 - படங்கள்: க.சதீஷ்குமார்

சித்தமல்லி எங்கிருக்கிறது? எப்படிச் செல்வது?

சித்தமல்லி, வைத்தீஸ்வரன்கோவில்-மணல்மேடு சாலையில் பட்டவர்த்தி என்ற இடத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து 460 எண்ணுள்ள பேருந்தில் சென்று பட்டவர்த்தி என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் செல்லலாம்.

மயிலாடுதுறையில் இருந்து சித்தமல்லிக்கு நேரடியாக பேருந்து வசதி உள்ளது. இரண்டு மணிநேரத்துக்கு ஒரு பேருந்து மயிலாடுதுறையில் இருந்து சித்தமல்லிக்குச் செல்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism