Published:Updated:

சென்னையில் படிபூஜையும் - ஐயப்ப தரிசனமும்!

சென்னையில் படிபூஜையும் - ஐயப்ப தரிசனமும்!

பிரீமியம் ஸ்டோரி

பகவான் சரணம் பகவதி சரணம் 

சரணம் சரணம் ஐயப்பா!

கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே எங்கு பார்த்தாலும் ஐயப்ப சரண கோஷம்தான். மாலை

சென்னையில் படிபூஜையும் - ஐயப்ப தரிசனமும்!

அணிந்து, விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வழிபடுபவர்கள் அவசியம் செய்யவேண்டியது படிபூஜை. இந்தப் படிபூஜை கடந்த 13 ஆண்டுகளாக சென்னையில் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

சபரிமலைக்குப் போக இயலாதவர்கள் மற்றும் தங்கள் வீடுகளில் படிபூஜை செய்யமுடியாத ஐயப்ப பக்தர்களின் குறையைப் போக்கும் வகையில் நடைபெறும் இந்தப் படிபூஜை பற்றி ஐயப்ப பக்தரும் பிரபல பக்திப் பாடகருமான வீரமணிராஜுவிடம் பேசினோம்.

''கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் அனுஷ்டித்து ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்காகவும், அப்படிச் சென்று ஐயப்பனை தரிசிக்க இயலாத பக்தர்களுக்காகவும் கடந்த 13 வருஷங்களாக 'ஸ்வாமியே சரணம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

சென்னையில் படிபூஜையும் - ஐயப்ப தரிசனமும்!

ஐயப்பனுக்கு அலங்காரம் செய்து, படிபூஜை, புஷ்பாபிஷேகம், மகா தீபாராதனை, குரு வந்தனம் ஆகிய வைபவங்களுடன் எங்கள் இசைக் குழுவினரின் ஐயப்பனின் பக்தி இசையும் நடைபெறும். இந்த ஆண்டு, நவம்பர் 30ம் தேதி சென்னை தேனாம் பேட்டை காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு 'ஸ்வாமியே சரணம்’ ஐயப்ப வழிபாடு நடைபெற இருக்கிறது. பூஜா வைபவங்களுடன், நிகழ்ச்சியின் இடையிடையே சிலிர்க்கச் செய்யும் ஐயப்பனின் அருட்கதைகளைப் பகிர்ந்துகொள்வதுடன், ஐயப்ப சுவாமிகளின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய உள்ளேன்.

சென்னையில் படிபூஜையும் - ஐயப்ப தரிசனமும்!

எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் முழுவதும் இலவசமாகவே நடத்தப் பெறும் 'ஸ்வாமியே சரணம்’ நிகழ்ச்சியில் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்'' என்றார். சபரிமலைக்குச் செல்ல இயலாத அன்பர்களும் சாஸ்தாவின் அருளைப் பெற அரிய வாய்ப்பு!

 - ரா.வளன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு