Published:Updated:

தூத்துக்குடி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட 10,008 தீபங்கள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தூத்துக்குடி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட 10,008 தீபங்கள்..!
தூத்துக்குடி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட 10,008 தீபங்கள்..!

தூத்துக்குடி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட 10,008 தீபங்கள்..!

கோவில்பட்டி, ஸ்ரீ செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு 10,008 விளக்குப் பூஜை நடைபெற்றது. இதில், வண்ணக் கோலங்களில் சுவாமிகளின்  திருவுருவம்  வரைந்து விளக்கு ஏற்றப்பட்டது, பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது. 

தூத்துக்குடி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட 10,008 தீபங்கள்..!

மதுரையில் மீனாட்சி அம்மன் அரசாட்சிசெய்வது போல, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி  திருக்கோயிலில் அம்பாளே அரசாட்சி செய்கிறாள். 

தூத்துக்குடி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட 10,008 தீபங்கள்..!

தை அமாவாசையை முன்னிட்டு 10,008  விளக்குப் பூஜை நடைபெற்றது. இதில், ஸ்ரீ செண்பகவல்லியம்மன், பூவனநாத சுவாமியின்  திருவுருவப் படம் வரையப்பட்டு, அதைச் சுற்றிலும் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஒவ்வொரு தை அமாவாசை அன்றும் இத்திருக்கோயிலில் 10,008 திருவிளக்கு ஏற்றப்பட்டு பூஜை நடைபெறுவது வழக்கம். 

தூத்துக்குடி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட 10,008 தீபங்கள்..!

அதேபோல, இன்றும் விளக்குப் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. செண்பகவல்லியம்மன், பூவனநாத சுவாமி, நந்தியம் பெருமான், முருகன், விநாயகர், நடராஜர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய சுவாமிகளின் உருவத்தை வண்ணக் கோலப்பொடியால் வரைந்து, அதன் மேல், சுற்றிலும் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தது, பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது.  

தூத்துக்குடி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட 10,008 தீபங்கள்..!

 தை அமாவாசை அன்று, 10,008 தீபம் ஏற்றப்பட்டு விளக்கு பூஜை நடைபெறும் என்பதால், பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தீப தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு