Published:Updated:

இளைஞர்களை நோக்கி இறை இசை! - சாய் மதுக்கர்

இசையால் வசமாவோம்...இ.ராஜவிபீஷிகா

இளைஞர்களை நோக்கி இறை இசை! - சாய் மதுக்கர்

இசையால் வசமாவோம்...இ.ராஜவிபீஷிகா

Published:Updated:

சை என்பது இறைவனையும் வசப்படுத்தக்கூடியது. இதற்குச் சிறந்த இதிகாச உதாரணம் ராவணன். சாம கானத்தால் சிவனாரை மகிழ்வித்து, தண்டனையில் இருந்து விடுபட்டதோடு, அரிய பல வரங்களையும் தசகண்டன் பெற்ற திருக்கதையை நாமறிவோம்.

கலியுகத்திலும் இசை அஞ்சலியால் இறைவனைப் போற்றித் துதித்த மகான்கள் பலருண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இசை மும்மூர்த்தி களான தியாகைய்யர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோர். வெறும் பாடலாக மட்டுமின்றி,  நமது பிரார்த்தனைகளை இறையருளால் பலிதமாகச் செய்யும் தெய்வ மந்திரங்களாகவும் திகழ்கின்றன அவர்களது கீர்த்தனைகள்.

இன்றைக்கு ஆடி மாதங்களில் அம்மன் பாடல்களையும் கார்த்திகை மாதங்களில் ஐயப்பன் பாடல்களையும் சினிமா மெட்டுகளில் இசையமைத்துப் பாடி இசை ஆல்பங்கள் வெளியிடப்படுகின்றன. அவை அந்தக் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே மக்களின் வரவேற்பைப் பெறும். மாறி வரும் காலத்துக்கு ஏற்ப இசையமைப்பில் புதுமைகளைப் புகுத்தி, பக்திப் பாடல்களையும் தெய்விகப் பாடல்களையும் பாடி ஆல்பம் வெளியிட்டால்தான், அனைத்துத் தரப்பினராலும் குறிப்பாக அடுத்த தலை முறையினரால் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இளைஞர்களை நோக்கி இறை இசை! - சாய் மதுக்கர்

இளம் தலைமுறையினரின் கவனத்தைக் கவரவேண்டுமானால், பழைய சுரங்களையும் தாளங்களையும் மட்டுமே நம்பி இருக்காமல், புதிய முறையில் ஃபியூஷன் முறையில் இசையமைத்தால்தான் சாத்தியப்படும் என்ற எண்ணத்தில், ஃபியூஷன் முறையில் இசை அமைத்து பக்திப் பாடல் ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த சாய்மதுக்கர்.

சாய்மதுக்கர் பிறந்தது சென்னையில்தான். ஆறாம் வகுப்புவரை சென்னையில் படித்தவர், பிறகு தன்னுடைய சொந்த ஊரான வேங்கடகிரிக்குச் சென்றுவிட்டார். சாய்மதுக்கரின் பாட்டனார் வேங்கடகிரி ராஜா வி.வி.ஆர்.கே.யச்சேந்திரா. வேங்கடகிரி அரண்மனையில் பாடாத பாடகர்களே இல்லை என்றே சொல்லலாம். பல இசைக் கலைஞர்கள் இவருடைய குடும்பத்தினருடன் நட்புகொண்டிருந்தார்கள். எம்.எல்.வசந்தகுமாரி, கன்யாகுமரி ஆகியோர் இவருடைய குடும்ப நண்பர்கள். இதனால், சிறு வயது முதலே இவருக்குக் கச்சேரிகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமைந்தது.

ஆனாலும், இவருடைய தாய் யசோதரா தேவியும் மாமா சாய்கிருஷ்ணா யச்சேந்திராவும்தான் இவருக்கு முறையாக இசையைக் கற்பித்தவர்கள். சென்னைக்கு வந்திருந்த சாய் மதுக்கரைச் சந்திக்க நினைத்து தொடர்பு கொண்டோம். உடனே வரச் சொன்னார். அவரிடம் பேசியதில் இருந்து...

?‘‘உங்களுடைய இசைப் பயணம் எப்படி தொடங்கியது?’’

‘‘எங்கள் குடும்பத்தில் எல்லோருமே இசையை நேசிப்பவர்கள். என்னுடைய அம்மாவும் மாமாவும் முறைப்படி இசை பயின்ற வர்கள். நான் அவர்களிடம்தான் சங்கீதத்தைக் கற்றுக்கொண்டேன். கல்லூரிப் படிப்பை முடித்ததும் பிரபல இசையமைப்பாளர் ஆர்.பி.பட்நாயக்கிடம் 2000-ம் வருடம் முதல் 2007-ம் வருடம் வரை உதவியாளராக தெலுங்கு, தமிழ், கன்னடப் படங்களுக்குப் பணியாற்றினேன்.

20-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறேன். தெலுங்கில் நான் இசையமைத்த `அனந்தபுரம்' தொலைக்காட்சித் தொடருக்கான பாடலை பாடியதற்காக, பாடகி சுனிதா சிறந்த பின்னணி குரலுக்கான ஆந்திர மாநில அரசின் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.’’ 

? தெய்விகப் பாடல்களுக்கு இசை அமைப்பதில் தங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

‘‘பிரபல கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் எங்களுடைய குடும்ப நண்பர். ஷீர்டி சாயிபாபாவின் பக்தரான அவர் என்னிடம், பாபா பற்றி ஓர் இசை ஆல்பம் தயாரிக்கவேண்டும் என்று கேட்டார். அப்படி தெலுங்கில் உருவானதுதான் ‘சாய் சுதா’ என்ற என்னுடைய முதல் தெய்விக இசை ஆல்பம். சாயி பாபாவின் மகிமைகளைப் பற்றி என்னுடைய மாமா சாய் கிருஷ்ணா எழுதிய பாடல்களுக்கு நான் இசையமைத்தேன். பிரபல பின்னணிப் பாடகர்களான எஸ்.பி.பி., சங்கர் மகாதேவன், உன்னிகிருஷ்ணன், கார்த்திக், சித்ரா, பாம்பே ஜெயஸ்ரீ, சுனிதா ஆகியோர் பாடிய அந்த ஆல்பம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு பல சினிமா படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தாலும், கவனம் முழுக்க தெய்விக இசையிலேயே லயித்தது.’’

இளைஞர்களை நோக்கி இறை இசை! - சாய் மதுக்கர்

? ‘‘‘சாய்சுதா’ ஆல்பத்துக்குப் பிறகு தாங்கள் வெளியிட்ட தெய்விக இசை ஆல்பங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?’’

‘‘மேற்கத்திய இசை வடிவில் வெளிவந்து சாய்சுதா பெற்ற வரவேற்பைப் பார்த்ததும், கீர்த்தனைகள், மந்திரங்கள், ஸ்லோகங்களை பழைய கிளாசிக் மெட்டுகளில் இல்லாமல் ஃபியூஷன் வடிவில் கொடுத்தால், இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கமுடியும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. எனவே, சாய்சுதாவைத் தொடர்ந்து, வேங்கடேஸ்வர சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம், ராதா சஹஸ்ரநாமம், சிவ சம்போ, ஓம் நமசிவாய, கிருஷ்ண லீலைகள், பாரதியார் பாடல்கள், ஹரிவராசனம் போன்ற பல பாடல்களை ஃபியூஷன் முறையில் இசையமைத்து வெளியிட்டு இருக்கிறேன்.’’ 

இளைஞர்களை நோக்கி இறை இசை! - சாய் மதுக்கர்

இவரது இசை ஆல்பத்தில் எஸ்.பி.பி, ஹரிஹரன், சித்ரா, நித்யஸ்ரீ என சீனியர் பாடகர்களில் தொடங்கி விஜய் பிரகாஷ், சைந்தவி வரை பாடியிருக்கிறார்கள்.

பாடகர்கள் மட்டுமின்றி, ‘மகா கணபதிம்’ என்ற தலைப்பில் கலைமாமணி கன்யாகுமாரி அவர்களின் வயலின் இசை ஆல்பம், ‘பஜன்ஸ்’ என்ற தலைப்பில் புல்லாங் குழல் கலைஞர் பண்டிட் ரோனு மஜும்தரின் இசை ஆல்பம் என அனைத்துக் கலைஞர்களையும் வைத்து ,‘ஃபியூஷன்’ எனப்படும் மேற்கத்திய இசையில், பக்தி நெறியை இன்றைய இளைஞர் களிடம் கொண்டு சேர்த்து வருகிறார் சாய்மதுக்கர்.

படங்கள்: தி.ஹரிஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism