Published:Updated:

தேவர்களின் வைகறை!

தேவர்களின் வைகறை!

தேவர்களின் வைகறை!

தேவர்களின் வைகறை!

Published:Updated:

• ‘மாதங்களில் நான் மார்கழி’ என்பது கீதை மொழி. ஸ்ரீமந் நாராயணனின் பன்னிரண்டு திருப்பெயர் களில் முதல் திருப்பெயரான கேசவா என்ற திருப்பெயருக்கு உரியதாகத் திகழ்கிறது மார்கழி மாதம். நம்முடைய ஓர் ஆண்டு தேவர்களின் ஒரு நாள். மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு விடியற் காலைப் பொழுதாகும். அந்த மாதம் முழுவதுமே பிரம்ம முகூர்த்த காலம் ஆகும். எனவே, மார்கழி மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் ஆண்டு முழுவதும் நமக்குப் புண்ணிய பலன்களைத் தரும்.

•  மார்கழி மாதம் சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் உகந்த மாதம். இந்த மாதத்தில்தான் திருவாதிரையும் வைகுண்ட ஏகாதசியும் கொண்டாடப்படுகின்றன.

•  சடைய நாயனாரும் ரமண மகரிஷியும் தோன்றியது மார்கழி மாதத் திருவாதிரை நாளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் தவம் இருந்து ஈசனின் ஆனந்த நடனத்தை தரிசித்ததும் மார்கழித் திருவாதிரையில்தான். இந்த வைபவம் சிதம்பரம் திருத்தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

•  திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்யப்படும் களி, ‘திருவாதிரைக் களி’ என்றே அழைக்கப்படுகிறது.

•  சேந்தனார் என்ற அடியவர் சிதம்பரம் நடராஜப் பெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். விறகு வெட்டி விற்றுக் கிடைக்கும் பணத்தில் உணவு சமைத்து சிவனடியார்களை உபசரிப்பது வழக்கம். ஒரு மழை நாளில் விறகு வெட்டி விற்க முடியாத நிலையில் வீட்டில் இருந்த கேழ்வரகைக் கொண்டு அவர் களி செய்து அடியவருக்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, அவருடைய பக்தியை உலகத்தவர்க்கு உணர்த்த சிதம்பரம் நடராஜப் பெருமானே அடியவராக வந்து சேந்தனாரின் கேழ்வரகுக் களியை உண்டார். அன்றுமுதல் நடராஜருக்கு களி நைவேத்தியம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. 

•  மார்கழி மாதத்தில்தான் தேவர்கள் பாற்கடல் கடைந்து அமிர்தம் பெற்றனர்.

•  பன்னிரண்டு மாதங்களில் முழுக்க முழுக்க இறை வழிபாட்டுக்கு உரிய மாதம் மார்கழி மாதம் என்பதால்தான், அந்த மாதத்தில் லௌகிகமான சுப காரியங்கள் நடைபெறுவது இல்லை.

•  மார்கழி மாதம் வளர்பிறை பதினோராவது நாளில் வருவதுதான் வைகுண்ட ஏகாதசி. வைஷ்ணவர்களுக்கு மிகவும் உகந்த நாள். அன்று பெருமாள் கோயில்களில் ‘சொர்க்க வாசல்’ திறக்கப்படும் வைபவம் நடைபெறும். அப்போது பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக பெருமாளுடன் செல்வார்கள். இதனால் மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

•  குருவாயூரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பதினெட்டு நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை 3.30 மணி முதல் மறுநாள் துவாதசி வரை குருவாயூரப்பனை தரிசிக்கலாம். அன்றைய தினம் குருவாயூரப்பனை தரிசிப்பது சொர்க்க வாசல் வைபவத்தில் கலந்து கொண்ட புண்ணிய பலனைத் தரக்கூடியது.

•  ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி கொண் டாடப்படுவதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் சொல்லப்படுகிறது. திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களால் மகிழ்ந்த பெருமாள் அவரிடம் ஒரு வரம் தருவதாகக் கூறி என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது, நம்மாழ்வார் பரமபதம் அடைந்த மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை பெரிய விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பதுடன் அந்த விழா நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் போற்றும் வகையில் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டாராம். அதனால்தான் வைகுண்ட ஏகாதசி பெரிய விழாவாகக் கொண்டாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

தேவர்களின் வைகறை!

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உந்தன்னைப் 

பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்;

நாடு புகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள்வளையே, தோடே, செவிப்பூவே,

பாடகமே, என்றனைய பல்கலனும் யாமணிவோம்;

ஆடை உடுப்போம், அதன்பின்னே பாற்சோறு

மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந் தேலோ ரெம்பாவாய்.

- ஆண்டாள் அருளிய திருப்பாவை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism