Published:Updated:

வலைத்‘தலம்’

வலைத்‘தலம்’

வலைத்‘தலம்’

வலைத்‘தலம்’

Published:Updated:

அல்லிக்கேணியும் மகாபாரதமும்!

வலைத்‘தலம்’

பாரதப் போரின்போது, பீஷ்மர் சரமாரியாக அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். அத்தனை அம்புகளும் ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தில் தைத்து, காயத்தை ஏற்படுத்தியபடி இருந்தன. ‘எந்தச் சூழலிலும் ஆயுதம் எடுக்கமாட்டேன்’ என்று பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா செய்து கொடுத்த சத்தியம் அர்ஜுனனுக்கு நினைவுக்கு வந்தது. இதனால் ரொம்பவே கலவரமாகிப் போனான் அவன்.
இந்தச் சத்தியத்தைத் தெரிந்து வைத்திருந்த பீஷ்மர், மேலும் மேலும் அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். அத்தனை அம்புகளும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் திருமுகத்தில் காயங்களை ஏற்படுத்தியவாறே இருந்தன. அவற்றைச் சிரித்த முகத்துடன் தாங்கிக்கொண்டார் ஸ்ரீகிருஷ்ணன். அதுமட்டுமா? அதே சிரித்த முகத்துடன், தமது திருமுகத்தில் உண்டான அத்தனைத் தழும்புகளுடன் இன்றைக்கும் நமக்குத் திருக்காட்சி தந்துகொண்டிருக்கிறார் திருவல்லிக்கேணியில்! அர்ஜுனன் எனும் உண்மையான பக்தனுக்காக, பாண்டவர்கள் என்கிற நல்லவர்களுக்காக எதையும் தாங்கிக்கொண்டான் ஸ்ரீகிருஷ்ணன் என்பதை உலகுக்குக் காட்டுகிற ஒப்பற்ற திருத்தலம் அல்லவா அது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-www.facebook.com/hiddenhistorybysrihari

வலைத்‘தலம்’

60 வருடங்களுக்கு முன்பும் பெரு மழையால் பாதிப்படைந்தது தமிழகம். அப்போது பாதிக்கப்பட்ட அன்பர்கள் சிலர் காஞ்சி மஹானிடம் சரண் அடைந்தனர். அவர்களிடம் குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை ஜபிக்கும்படி அருளினார் மகா பெரியவர். அதன்படியே, தொடர்ந்து அந்த மந்திரம் ஜபிக்கப்பட, பாதிப்புகள் படிப்படியாய் குறைந்ததாம்.

* அந்த மந்திரத்தை நீங்களும் கேட்டுப் பயனுற இந்த link-ஐ பயன்படுத்தவும்.

வலைத்‘தலம்’

நார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்,

“The power of positive thinking” என்ற புத்தகத்தில், தன் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவைச் சந்திக்க வந்தார். தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும், தான் சிரத்தையுடன் சிரமப்பட்டு செய்யும் செயல்களும் துன்பமயமாகவே இருக்கின்றன என்றும் பீலேவிடம் புலம்பினார்.

பீலே அவரிடம் ஒரு  காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார். கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும், கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் எழுதச்சொன்னார். வந்தவரோ, என் வாழ்க்கையை பொறுத்தவரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டு அந்தத் துண்டுக் காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்தபோது,  வலது பக்கம் காலியாகவே இருந்தது. இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

“உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார். “என் மகன் ஜெயிலுக்கே போகவில்லையே'' என்று அவர் கூறினார். “இது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தானே? இதை வலது பக்கம் எழுதலாமே?'' என்றார் பீலே. தொடர்ந்து, “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?'' என கேட்ட கேள்விக்கு, “என் மனைவி என்னுடன்தான் இருக்கிறார்'' என்றார்.

“எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?'' என்ற கேள்விக்கு, “சாப்பிடாமல் நான் இருந்ததே இல்லை'' என்று பதிலளித்தார்.

“உங்கள் வீடு வெள்ளத்தில்  மூழ்கியபோது என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு, “என் வீடு வெள்ளத்தில் மூழ்காமல் பத்திரமாகத்தான் இருக்கிறது'' என்று பதில் கூறினார். இப்படி ஒவ்வொரு கேள்வியாக பீலே, கேட்க கேட்க, கோட்டின் வலப்புறம் நிரம்பியது. இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.

கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. அதுபோல முழுக்க முழுக்க துன்பமயமான நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை. இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை.

ஆனால், சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து, தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்.  கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக்கூடாது, அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளு பலகையாக இருக்க வேண்டும். `என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன்' என்று முடிவெடுங்கள். மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்!

வாசிக்கிறதை நிறுத்திவிட்டு பேனாவையும் துண்டுக் காகிதத்தையும் எடுத்து கோடு போட ஆரம்பிச்சிட்டீங் களா? மகிழ்ச்சியாய் எழுத ஆரம்பியுங் கள். வலது பக்கம் மகிழ்ச்சி நிரம்பட்டும், இடது பக்கம் துன்பம் காலியாகட்டும்.

 - சுபராம.கோவிந்தன்

(வாட்ஸ்-அப்பில் வந்த தகவல்)

வாசகர்களே! ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் என இணையத்தில் விரவிக்கிடக்கும் சுவாரஸ்யமான - பயனுள்ள ஆன்மிகத் தகவல்களின் தொகுப்பே, இந்த வலைத் `தலம்' பக்கம் மேற்சொன்னவற்றில் உலா வரும் உங்களுடைய ஆன்மிகப் பதிவுகளும் இங்கே பிரசுரமாக வாய்ப்பு உண்டு. தொடர்ந்து கவனியுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism