Published:Updated:

கோயில் கருவறைக்குள் நுழைந்து நகை திருடிய பெண் கைது!

கோயில் கருவறைக்குள் நுழைந்து நகை திருடிய பெண் கைது!
கோயில் கருவறைக்குள் நுழைந்து நகை திருடிய பெண் கைது!

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் அம்மன் கருவறைக்குள் சென்று தாலி மற்றும் வெள்ளிக் கொடியை திருடிய பெண்ணை போலீஸார் கைதுசெய்தனர்.

கோயில் கருவறைக்குள் நுழைந்து நகை திருடிய பெண் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புகழ்பெற்ற ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் உள்ளது.  தென்மாவட்டத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக அம்பாள் அரசாட்சி செய்து வரும் கோயில் இது. இக்கோயிலில் உள்ள செண்பகவல்லி அம்மனின் சிலைத் தோற்றம், மதுரை மீனாட்சி அம்மனின் சிலைத் தோற்றத்துடன் ஒத்திருக்கும். தினந்தோறும் இக்கோயிலில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர். இன்று அதிகாலையில் வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாலை பூஜையில், ஸ்ரீ செண்பகவல்லி அம்பாளுக்கு பூஜையை முடித்துவிட்டு,  அடுத்த சந்நிதியில் உள்ள சுவாமிக்கு பூஜை செய்ய அர்ச்சகர் சென்றிருந்த நேரத்தில் அங்கு பக்தர் போல வந்த ஒரு பெண் அம்மனின் கருவறைக்குள் நுழைந்து அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தாலி, பொட்டு, வளையல், கம்மல், மூக்குத்தி, வெள்ளிக் காப்பு மற்றும் வெள்ளிக் கொலுசுகளைத் திருடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அர்ச்சகர், அதிர்ச்சியடைந்து,  கோயிலில் காவலுக்கு இருந்த ஊழியர்களை அழைத்து அந்த பெண்னை சுற்றிவளைத்து கிழக்கு காவல் நிலையப் போலீஸாரிடம் ஒப்படைத்தார். 

கோயில் கருவறைக்குள் நுழைந்து நகை திருடிய பெண் கைது!

அந்தப் பெண்ணை கைதுசெய்து, அவர் திருடிய 11 கிராம் தங்கம் மற்றும் 107 கிராம் வெள்ளிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். போலீஸாரின் விசாரணையில் அம்மன் நகையைத் திருடியவர்,  தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்த அருள்செல்வம் என்பவரது மனைவி சண்முகசுந்தரி என்பதும் இவர் தற்போது நெல்லை மாவட்டம் குருவிகுளம் அருகில் உள்ள  செட்டிக்குளத்தில் வசித்து வருவதும்,  தெரியவந்தது. மேலும், இவர்மீது நெல்லை மாவட்டம் குருவிகுளம், தூத்துக்குடி மாவட்டம்  கழுகுமலை மற்றும் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 

``இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இருந்தும் முறையான பாதுகாப்பு ஏதும்  இல்லை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் திருடர்களைக் கண்டறிய போதிய கண்காணிப்புக் கேமிராகூட இல்லை. போதிய பாதுகாவலர்களும் இல்லை" என பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகம்மீது குற்றம்சாட்டுகின்றனர். ஒரு பெண் தனியாக  கோயிலின் கருவறைக்குள் நுழைந்து  அம்மன் சிலையில் கிடந்த நகைகளைத் திருடிய சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு