Published:Updated:

விழாக்கள்... விசேஷங்கள்..!

விழாக்கள்... விசேஷங்கள்..!

விழாக்கள்... விசேஷங்கள்..!

விழாக்கள்... விசேஷங்கள்..!

Published:Updated:

12 ஜோதிர்லிங்க தரிசனம்!

‘சிவன்’ என்றால், ‘மங்களம் செய்விப்பவர்’ என்ற பொருள் உண்டு. ஜோதியாக விளங்கும் அனைத்து ஆத்மாக்களின் தந்தையான பரமாத்மாவான சிவன் எடுக்கும் திவ்ய அவதாரமே ‘சிவ ஜயந்தி’ புனித நிகழ்வாகும். அப்படியொரு புனித நிகழ்வாக பாரதத்தின் புகழ்பெற்ற 12 ஜோதிர்லிங்கங்களின் தத்ரூப காட்சியைக் கண்டு ரசித்து, சிவராத்திரி பண்டிகையின் ஆன்மிக ரகசியத்தை அறிந்துகொள்ளும் வகையில், பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் என்ற அமைப்பு ஜோதிர்லிங்க கண்காட்சி ஒன்றை சென்னை ராயப்பேட்டையில் உள்ள எஸ்.வி.ஆர். மண்டபத்தில் வெகு விமரிசையாக நடத்த இருக்கிறது. ஜனவரி 7-ம் தேதி முதல் 11-ம் தேதி மாலை வரை நடைபெற இருக்கும் இவ்விழாவின் தொடர்ச்சியாக, ஜனவரி 12 தேதி முதல் 14 தேதி வரை, 3 நாட்களுக்கு இலவச சிறப்பு தியான பயிற்சி முகாமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் கலந்துகொண்டு பலன் அடையலாம்.

விழாக்கள்... விசேஷங்கள்..!

கடந்த டிசம்பர் 17 தேதி முதல் 21 தேதி வரை சென்னை தண்டையார்பேட்டை டோல்கேட்டில் உள்ள தங்கமாளிகை மண்டபத்தில், இதே 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி விழா, வெகு சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி.என்.பரசுராமன் முதலான பிரமுகர்கள் ஆற்றிய சிறப்புரை விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விழாக்கள்... விசேஷங்கள்..!

மஹாபிரதோஷ வழிபாடு!

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு என்னும் ஊரில் உள்ள அருள்மிகு ஸ்ரீகோமதி அம்பாள் சமேத ஸ்ரீசத்தியவாகீஸ்வரர் திருக்கோயிலில், வரும் 6.2.16 சனிக்கிழமை அன்று, லட்சத்து எட்டு தீப வழிபாட்டோடு, முதல் மஹா பிரதோஷ வழிபாட்டுப் பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட இருக்கிறது. 1008 இளநீரால் சுவாமி, அம்பாள் மற்றும் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் - ஆராதனைகளும் நடைபெறுகின்றன. வீரமார்த்தாண்டவர்மன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலின் மஹா பிரதோஷ விழாவில் கலந்துகொண்டு இறையருள் பெற்றுச் சிறக்கலாம்.

ஆராதனை மஹோத்ஸவம்!

காஞ்சி ஸ்ரீமஹா ஸ்வாமிகளின் நினைவாக, வருகின்ற 6.1.16 அன்று காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் உள்ள அதிஷ்டான வளாகத்தில் 22-வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவ விழா நடைபெற இருக்கிறது. விழாவை முன்னிட்டு வேத பாராயணம், உபந்நியாஸங்கள், நாம ஸங்கீர்த்தனம், ஸங்கீதாஞ்சலி முதலிய வைபவங்கள் நடைபெற இருக்கின்றன. அத்துடன், ருத்ர பாராயண பூஜை மற்றும் ஹோம வைபவங்களும் வழிபாடுகளும் நடைபெற உள்ளன. பக்தர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு அருள் பெற்றுச் சிறக்கலாம்.

விழாக்கள்... விசேஷங்கள்..!

ஷீர்டி சாயி சங்கீர்த்தனம்!

விழாக்கள்... விசேஷங்கள்..!

சென்னை, ராயப்பேட்டையில் இயங்கி வரும் செவன்த் சென்ஸ் கேரியர் டெவலப்பர்ஸ் என்ற அமைப்பு சார்பாக, ஸ்ரீசாயிநாதரின் மகிமையை எடுத்துரைக்கும் விதத்தில், சென்னை- ஆழ்வார்ப்பேட்டை நாரதகான சபாவில், ஜனவரி 21-ம் தேதி மாலை 6 மணிக்கு மாபெரும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் ஸ்ரீசாயியின் வாழ்க்கை வரலாறு, ஆன்மிக சிந்தனை மற்றும் பாபாவைப் பற்றிய சங்கீர்த்தன இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.ஷீர்டிக்கு நேரில் சென்று தரிசிக்க முடியாதவர்களுக்காக, ஷீர்டியிலிருந்து குருக்கள் வரவழைக்கப்பட்டு, ஷீர்டியில் நடைபெறும் உச்சிக்காலப் பூஜை மற்றும் 40 நிமிடம் நடைபெறக்கூடிய ஆரத்திகளைத் தத்ரூபமாக இங்கு நடத்த இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புப் பிரசாதங்களைப் பெற்று ஸ்ரீசாயிநாதரின் இறையருளைப் பெற்றுப் பயனடையலாம்.

தொகுப்பு: ரா.வளன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism